Blog

புதிய பாதை

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 18/09/2023
  • Category: valkkai
  • Views: 340
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

புதிய பாதை பாதையில் பயணித்துப்பார், பாதையின் நீளம் தெரியும்; பார்வையை விட்டுப்பார்; விழிகளின் தவிப்புத்தெரியும்; கவனத்தைச் செலுத்திப்பார், கவலையின் நிலைதெரியும்; உனது பாதை உனது பயணம். பிறப்பின் பாதை, அது, உறவின் மாயை; இறப்பின்பாதை, இது, பிரிவின் சாலை; அறியாத பாதை, அது,வரியாத சோகம்; புரியாத பாதை, புதைந்து கிடக்கும் மர்மம்; வாழ்க்கைப்பாதை,அது, விரைந்திடும் பயணம்; அன்பின் பாதை, தியாகச் சாலை; வறுமையின் பாதை; வடித்திடும் துயரம்; குழந்தையின் பாதை; குதூகலச் சோலை; இளமையின் பாதை; இழுத்துச் செல்லும் (மாயை) மனதை; முதுமையின் பாதை, முனகிட வைக்கும்; முற்றும் துறந்தவன் பாதை, ஞானியாக்கும்; எண்ணப் பாதை, என்னுள் கிடைத்த சாலை; பூக்கள் உதிர்ந்த பாதை; மணங்கள் விரிந்த சோலை; பூவின் பாதை, பூத்த வேலை; புவியின் பாதை, தாழ்வட்ட- உயர் வட்டப்பாதை; புகழின் பாதை, புதைகுழியின் பாதை; குறிக்கோள் இல்லாத பாதை, குறுக்குப்பாதை; கீதையின் பாதை கண்ணைத் திறந்த வேலை; வெற்றிப்பாதை,விரித்த வழியில் தடைகள் தடுமாற்றங்கள் இருக்கும்; அறவழிப்பாதை,ஞானப்பாதை; ஞானப்பாதை; நான் மறைப்பாதை; சிற்றின்பப் பாதை; சிறைபோன வாழ்க்கைப் பயணம்; பேரின்பப் பாதை; புறவழிச் சாலை; உன்னைத் தொடர்ந்த தை,வாழ்க்கைப்பாதை; திசை மாறியப்பாதை,தினறியப் பாதை; விதி வழிப் பாதை; விளையும் நன்மை தீமை; சதிவழிப்பாதை சரித்திட, சாய்த்திட, துடிக்கும் வேலை; விதிமுந்திய பாதை;மரணம் தீட்டிய வேலை; விதியை மோதிய பாதை, மதியின் வேலை; பசியின் பாதை; வயிற்றுக்குள் புகும் வேலை குருதியின் பாதை,நரம்பு வழிச்சாலை சிலுவையின் பாதை; கருணையும் காருண்யமும் குரானின் பாதை குறைகள் இல்லா பாதை இந்துவத்துவ பாதை அடைக்கலம் தரும் தருமப்பாதை; உழைப்பின் பாதை வெற்றியின் வேர்வை; தூங்கிய பாதை தா(தொ)ங்கிய தோல்வி புதிய பாதை,புரட்சி வெடிக்கும் வேலை; நீல்வழிப்பாதை, உலாவிடும் வானம்; நீர் வழிப்பாதை;நீண்ட பயணம், வந்தே இணையும் கடலில்; கடல் பயணம், அலைகளின் சயனம்; விதி வழிப்பாதை விடைதேடும் வாழ்க்கை; கருசென்ற பாதை ,உருவான வேலை; உடல் சென்ற பாதை உயிரின் வேலை உடல் போகும் பாதை, முடியும் பாதை; உயிர் பிரிந்த வேலை. காடுவரைப் பாதை கட்டைபோகும் பாதை காதல்வழிப்பாதை, விழிகள் காத்திருந்த வேலை கலை வழிப்பாதை, கடமை சுமந்த பாதை; பாசத்தின் பாதை, பதுங்கிய பாதை; பருதியின் பாதை உயிர்களை காத்த பாதை பருவத்தின் பாதை; உருமாறும் பாதை; பால்வழிப்பாதை அண்டப்பாதை; நடை வழிப்பாதை; நாட்கள் செல்லும் பாதை; ஒரு வழிப்பாதை ஒண்டிய பாதை; இருவழிப்பாதை எதிர்மறைப்பாதை; விழிகள் ஓடியபாதை, கருணை வழியும் பாதை விண் வழிப்பாதை விடைதேட விரட்டியே ஓடிடும் பாதை; புல் வழிப்பாதை, இயற்க்கை போத்திய பசுமை சோ(சா)லை; புயல் வந்த பாதை, புரட்டிப்போட்ட பாதை; வணிகப்பாதை, தொழில் புரட்சி தந்த பாதை இத்தனைப் பாதைகளா; எத்தனை எத்தனைப்பாதைகள் இருந்தாலும் எதுவாயினும். அதுவாயினும், இதுவாயினும் வருவதும் போவதும் ஒற்றையடிப் பாதையே; வந்தே போகும்; வந்தவன் போகும் பாதை மரணமே ; வாழ்க்கை கற்று தரும் பல பாடங்கள் தானடா செல்லும் பாதையை சரியாக தேடு; கடந்த பாதையைவிட கடக்கப்போகும் பாதையில் கவனத்தை செலுத்து; சேர்ந்தே வாழ்ந்திட சகோதரத்துவத்தை தேடு வருத்தம் ஏனடா; வாழ்ந்து தான் பாரடா; புதிய பாதை பிறக்கட்டும் புதுமை பல பூக்கட்டும், புதிய வாழ்க்கை பயணம் தொடரட்டும்; புவியில் பசுமை புரட்சி மலரட்டும்; ஒருமைப்பாடு ஓங்கட்டும் உனக்கு எனக்கு என்று இல்லாது; நமக்கு நம் வருங்கால சந்ததியர்களுக்கும் என்று சமத்துவப்பாதையில் நம் பயணம் தொடரட்டும்; அதிகாலை வணக்கத்தை கூறும் அன்பன் அ. முத்துவேழப்பன்

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media