ஏன் என்பேன், என்ன என்பேன் எனது அமுது தமிழே நீ என்பேன். நீ என்பேன், நான் என்பேன், நாம் தமிழன் என்பேன்; நமதென்பேன்; நம் மானம் தமிழாம் என்பேன், நம் இனம் தமிழென்பேன். தமிழன் என்பேன், தன்மான இனம் என்பேன்; ஆம் என்பேன், அன்னைத் தமிழென்பேன், ஆவிலே கலந்து நாவிலே விளையாடும் நற்தமிழ் என்பேன்; ஏன் என்பேன் தொப்புல் கொடி தந்த உறவென்பேன், தொடர்பறுக்க முடியாதென்பேன். ஊன் என்பேன்;உயிர் என்பேன்; உய்ப்போம் தமிழால் என்பேன். வையகம் என்பேன், வா என்பேன், வந்தே பேசு தமிழில் என்பேன். முதல் என்பேன், ஆதி என்பேன், அந்தம் என்பேன், பந்தம் என்பேன், தமிழனே என்றும் மூத்த குடி என்பேன் தான் என்பேன், தடுமாறாதே என்பேன், தமிழுக்கு உண்டு தனிச் சிறப்பென்பேன், தமிழனாய் வாழ்வது, தமிழுக்கே பெருமை என்பேன். தன்மானம் மிக்க இனம் என்பேன். தான் என்பேன், தயவு என்பேன், தள்ளி நிற்காதே தமிழா என்பேன். தீ என்பேன், தீது என்பேன் தீராத தாகம் தமிழின்பால் என்பேன்; தமிழின் மேல் வெறி என்பேன்; தீண்டுபவனை தீர்த்திட, திரண்டேவா என்பேன். தீம் தமிழைக் காக்க, தீயாய் எரிந்து வா என்பேன். வேறு ஊன்றிய தமிழ் என்பேன், வேறுபாட்டுக்கு இடம் இல்லை என்பேன். வேர் அறுப்பவனை, ஊர் பேர் இல்லாமல் ஆக்க; பேரிடராய், பேராழியாய், போராளியாய் வா என்பேன், போ என்பேன், போய்வா என்பேன், போற்றி வளர்த்திடு தமிழை என்பேன், பார் என்பேன், பாரிச் சிறந்தது தமிழென்பேன். பசி என்பேன்,புசி என்பேன், தமிழனாய் கசி என்பேன். வா என்பேன், வையகம் என்பேன், வாழ் என்பேன், வளம்பெரு என்பேன், வாலிபவமே எம் தமிழென்பேன் வால் என்பேன், வேல் என்பேன், அதனிலும் வலுவானது தமிழன் தினவெடுத்த தோள் என்பேன். வாழ் என்பேன் வாழ் என்பேன் தமிழன் என்ற பெருமையுடன் வாழ் என்றேன். வசி என்பேன், தமிழில் வசி என்பேன், தமியையே வாசி என்பேன், ரசி என்பேன், தமிழை ரசி என்பேன். தமிழன் உணவையே புசி என்பேன்; கேள் என்பேன், கேலியில்லை என்பேன், கேட்பாரற்று கிடக்க வேண்டாம். கடவுளையே கேள்வி கேட்டவன் தமிழன் என்பேன். நாம் என்பேன், நமதென்பேன், நம் மூத்தகுடியின் கதை கேள் என்பேன். பண்டு தமிழ், பழம் தமிழாம், பகை என்பது அதற்குத் தெரியாதாம். பழகு என்குமாம், எமது அழகு தமிழ். பால் என்பேன், பழம் என்பேன், பசுமை என்பேன், தமிழ் எமது மறை என்பேன், தமிழால் உரை என்பேன், தமிழே எங்கள் உறை என்பேன். தமிழுக்கு ஐயன் திருவள்ளுவர் தந்த குரளே உலகமறை என்பேன்; எழுது தம்பி, எழுது தம்பி தமிழில் எழுது தம்பி; தமிழில் கவிதை எழுதி பழகு தம்பி; தமிழென்றால் எழிச்சி, தமிழன் என்றால் புரட்சி, தமிழ் இனம் என்றால் மலர்ச்சி. தமிழே உன் பேச்சி, தமிழே உன் மூச்சி; ஈரடியில் சீரடியாய் உலகையே அளந்தவன் தமிழன். இறுமாப்பு என்பது அவன் உறுப்பு, இடித்தேமுடிப்பேன் என்பது அவன் அவன் செறுக்கு; ஈகை ஈதல் என்பது அவன் உடன்பிறப்பு, பணிவு கணிவு துணிவு அவன் பரம்பரை சொத்தடா! சங்கம் படைத்தது தமிழ்; சன்மார்க்க நெறி கண்ட நம் தமிழ், சாகா வரம் பெற்ற தமிழ், எல்லா மதமும் எம்மதம், அது சம்மதம் என்பது அவன் வளர்ப்பு, ஆதித்தமிழன் தானடா, அஞ்சா நெஞ்சினன் தானடா! ஆளப்பிறந்தவன் நாமடா! தமிழ் என்றால் இனிமை; தமிழென்றால் இளமை குளுமை, தமிழ் என்றால் சுனை ஊற்றடா, தமிழ் என்றால் சுவை ஊட்டியடா, மனிமலர் தேனடா, ஆவின் பாலடா, ஊறும் அமுத சுரபியடா, அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமடா, தமிழ் என்றால் நற்கருப்பஞ் சாரடா,வீசிடும் பொதிகைத் தென்றலிலும், குழலிடைப் பிறந்த இசையிலும், குழைந்திடும் குழந்தைகளின் மழலையிலும், பெண்களின் நாணக் குழைவிலும், கொட்டும் மழையின் ஓசையிலும், தட்டும் தாலத்திலும், பொழிலிடை வண்டின் ஒலியிலும், பிறந்தது எங்கள் தமிழடா. கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் கழையிடை ஏறிய சாறும், பனிமலர் ஏறிய தேனும் -காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும்; நனிபசு பொழியும் பாலும் - தென்னை நல்கிய குளிரில நீரும், இனியன என்பேன் எனினும், - தமிழை என்னுயிர் என்பேன். உயர் தமிழ் எங்கள் உயிரடா; உயிர் ,மெய், உயிர்மெய் யென்றே உதித்தது தமிழடா. அகம் புறம் கண்டது தமிழடா, ஆட்சி செய்ய வந்த தமிழடா; நீலச் சுடர் மணிவானம் கீழே விழுந்தாலும், நீல் கடல் வற்றினாலும் குறையாதது எமது தமிழ் தாய் மொழியாம், தமிழுக்கு இல்லை சரிவு, தமிழனுக்கு இல்லை சாவு, தமிழ் வாரிசுதாங்கும் அதன் உயர்வு; ஆம் என்பேன், எமது அமுது தமிழே; நீ வாழ்வாங்கு வாழி, புது வையகம் உதித்தாழும் அங்கும் நீ பிறந்தே மலர்ந்தே வாழி என்பேன். பிறந்தே மலர்ந்தே மணந்து என்றென்றும் புகழ் பெற்று வாழி. அதிகாலை வணக்கத்தைக் கூறும் அன்பன் அ. முத்துவேழப்பன்
Chennai, Tamil Nadu, India.