வந்து கிடக்கலாம் நாளையும் நேர் உச்சி ஏறும் சூரியன்; நேர் உச்சி வகுடிய இளவஞ்சி; நேர் கொண்ட பார்வையுடன் நேர் எதிரில் நின்ற கட்டிளம் காளை தேடி வந்த கள்வன்; ஓடி வந்த ஒயில் ஓவியம் இவள்; பாடி வந்த குயில் இவள்; ஆடி வந்த மயில் இவள்; தாவிடும் விழிகள்தான் மொழி மறந்து தடுமாறியது; தாண்டவம் ஆடியது கால்கள்; தவம் இருந்தது இவனது ஏக்கம்; தள்ளி நின்றது பெண்மை; தடுமாறியது ஆண்மை; உண்மை தான் ஒன்றும் புரிய வில்லை; தேம்பும் இவள் நெஞ்சி; தெவிட்டாத மையல்; புகட்டாத பாடம்; புரியாத பாசை; விரட்டாத மையல்; விடாதா தேடல்; தேற்றிடும் பரிபாடல்; தெவிட்டாத இன்ப ஊரல்; நிற்காத பொழுது; நி(ந)னைக்காத உதடு; ந(நி)னைக்காத நினைவு; நடிக்காத மனது; நாள் சாய்தது; நாளிகை உதிர்ந்தது; மூடத் தெரியாத நெறுடல்; தலை சாய்த்த சூரியன்; தலையணையாய் தாங்கிய கடல் அலைகள்; மாலையின் தூரல்; மயக்கத்தின் சாரல்; இதயத்தில் தேடல்; இன்ப ஊடல்; அசையாத மௌனம்; இசைக்கும் பறவைகள்; இருக்கும் இடம் தெரியாத மனத்தின் மௌனம்; யார் தந்தது இந்த மௌன தேடல்; உணவும் இல்லை ஒன்றும் உணரவில்லை; உரையேதும் இல்லை; உறவாடவில்லை; ஓடிய பொழுதில், தேடலும் இல்லை; தீண்ட வில்லை; இயற்கைக்கும் திகைப்பும் தான்; வியப்பும் தான் வீம்புக்கு அமர்ந்துள்ளனறோ; விரும்பிப்தான் உறங்குகின்றனறோ; பொழுது சாய்ந்தும் புரியவில்லை இவர்கள் எண்ணம்; மேனியில் சூடுயில்லையோ; சொல்லத்தான் ஆள் இல்லையோ; செல்லத்தான் மனதில்லையோ; வெல்லத்தான் தைரியம் இல்லையோ; இல்லை வீம்புக்கு நிற்கின்றனறோ; சிலைகள் ஆனரோ; சித்திரவதை தான்; ஆகா மெல்லத்தான் உள்மூச்சு இழுக்கின்றதே; இறக்கவில்லை என்பது உறுதிதான்; மறக்கவில்லை என்பதும் பழமைதான்; திறக்க வில்லை கண்களை என்பதும் உண்மை தான்; மறக்கவில்லை தான்; மறுக்கவில்லை தான்; புரியவில்லையே; புதைய வில்லையே ; உறைய வில்லையே இவர்கள்; காதலில் புதைந்தது யார், இவனா இவளா இல்லை இருவருமா; இவர்களைப் பார்த்த, இயற்கையும் புள்ளினங்களுமா; இயற்கைக்குக்கும் புள்ளினங்களுக்கு குழப்பம்தான்; சிலை இல்லை யென்று எண்ணி சீண்டியது பைங்கிளியா; பைய வந்து பதைத்து தொட்டது தென்றலா ; பார்த்து ரசித்தது ஏங்கியது நிலவா நினைவா; பாவம் புரியவில்லை; இவர்கள் சின்னம் சிறுசுகள் தான் சிறைபட்டது மனசுதான்; சிலையானது மனது தான்; விளக்கேற்ற வில்லையே நிலவும்; விளையாட வரவில்லை மேகங்களும்; விட வில்லை மோகங்களும்; வந்த கூூரியனும் தந்தது சூடை பொழுதும் விழுந்தது பொல்லாப்பு இன்னமும் தீரவில்லை வாடிக்கையாலன் நிலவும் வான வீதியில் வலம் வந்தான் வேடிக்கை பார்த்த நிலவே; வெறித்துப்பார்ப்பதேன் நிலவே வதைக்காதே; வயித்தெரிச்சல் படாதே; வாடிக்கை யாளர்கள்தான் இவர்கள்; தேற்றிக்கொள் தோற்கவில்லை இவன் தோற்றவில்லை இவன்; இவள் இருக்கும் பொழுது, நிலவு ஜொலிக்க வில்லை; பௌர்னமிப் பொழுதும் அம்மாவாசையானதோ; நிலவும் நிதானம் தடு மாறியது , இவளும் நிதானம் தடுமாறித்தான் போனாள்; இவனோ நிலை தடுமாறிக் கிடந்தான்; பாழும் இளமைதான் பழுத்துக்கிடந்ததோ வாழும் நினைவுகள் தான் வலுத்துக் கிடந்ததோ வழுத்துக் (வாழ்த்தி) கிடந்ததோ; பழமும் நழுவிப் பாலில் விழுந்ததோ; பாலும் பூனை தான் ; திருடி தின்ன துடிக்குதோ; ஈர விழிகள் சிவந்ததேன்; எழுந்த நரம்புகள், விழுந்த உடலில் விளையாடுவதேன்; படைத்தது ஆசையோ புடைத்தது மோகமோ; வதைத்தது பருவமோ; சுவைத்தது உடலோ; சுவைக்காத சுவையூட்டும் உணவு இந்த உடல்கள், ஒடுங்கிக்கிடக்கின்றனவே; அடங்கி கிடப்பது போல் நடிப்பதேன்; முல்லை பூத்த இருலுக்குள் நிலவுமெல்ல மறைய, அழகிய பூக்கோளம்; அது போதும் பூபாளம்; துடித்ததும் விண்ணில் நட்சத்திரங்களும்; வடித்தது வனமும் ஓதுவது தான் யார்; ஒது(டு)ங்கி நிற்பது ஏன்; பதுங்கிக்கிடப்பது வெட்கமா பசியாத்தா துடிப்பது நாணமே; மௌன மயக்கம்; மோகன மார்க்கம்; வாசித்தது இவனிவலுடல் இவன் இவள் உ(ஊ)டல்; மளைப்பிள்ளையா, பிழைப்பில்லையா இவர்களுக்கு. பிறலவில்லையா இவர்கள் தவிப்பு; பிடிக்க வில்லையா கரங்கள்; தவத்தின் வலிமையா; தாபத்தின்அழுத்தமா; தேங்கிய காதல் கனலில்; தினரியது மனது. தாங்கியவிழியும் தடுமாறியது; விழி மூடவில்லை வழிதெரியவில்லை; வலி தெரியாத உவாதை தான்; வாலிபம் தந்த உபத்திரிம் தான்; பழி சுமக்காத ஸ்பரிசம் தான்; பயம் பயம் தான்; படுத்தியது உயிர் ஓட்டம் தான் உடுத்தியது ஆசைகள் தான்; உடைந்தது மோகம் தான்; இன்ப காயம் பட்டு கசிந்தது காதல்தான்; மாயம் மாயம் தான்; இவர்கள் இன்னும் மயங்கிக் கிடப்பது மாயம்தான்; சிற்றின்பத்தில் சிலை ஆனார்களோ; சித்திரம் ஆனார்களோ; செதுக்கிய இரவில் செத்து மடிந்துதான் கிடக்கின்றார்களோ; திரும்ப வில்லை உதடு; திருப்தி அடைய வில்லை உறவு; மகிழ மரமும், மயக்கிக் கிடந்த இவர்களை எட்டிப் பார்த்தது, மனம் ஒவ்வாது, மகிழம் பூவை உதிர்த்தது; மணத்தை வீசி மறுபடியும், உயிர்ப்பிக்கத் துடித்தது இவர்களை; உணர்ச்சியில்லா இந்தக் கட்டைகள், உயிரற்ற பிணமாக எவ்வளவு நேரம் கிடக்கின்றார்களோ; வண்டை அனுப்பியது மகிழம் பூவும்; வந்தே சுற்றிய வண்டு, வதை தாங்காது, வந்த இடத்தைவிட்டுச் சென்று, மகிழ மரத்தை சுற்றிபடர்ந்திருந்த முல்லையைத் தேடி ஓடியது; மோகம் தாங்காது; சொல்படி கேட்க யாரும் இல்லை; வந்த வேகத்தில் திரும்பிய வண்டே வாடும் இவர்களை, எழுப்பாததேன் என்றது மகிழ மரமும்; வண்டும், அட மனம் கக்கும் மகிழம்பூவே; மயங்கிக் கிடக்கும், இவர்கள் மடியவில்லை; மோகத்தில் உறைந்து கிடக்கும் இவர்கள்; உருகட்டும் காதல் வெட்கையில்; என்றே கூறி வண்டும் தன் காதல் காவியம் வடிக்க பறந்து சென்றது; தென்றலுக்கு எடுத்தது தாகம்; தெற்கிலிந்து புறப்பட்டும், திக்குத் தெரியாது தவித்தது இவர்களைக் கண்டு; சற்றே இளம் சாரலைத்தூவி உண்டது இவர்களது உடலை; விழித்த கண்கள்; வெடுக்கென்று பிறந்த நாணம்; வெரித்த ஏக்கம்; ஏல்லாம் ஏல்லாம்; ஏளனம் செய்ய, எழுந்தனர் இவர்களும்; எட்டிப்பார்த்தனர், இரவு பூத்ததை, இதயம் தாங்கியதை நொந்து கொண்டது, மனமும் நொடியில் முடிய வேண்டிய காவியத்திற்கு இத்தனை இழுபரியா; இந்தனை காந்த ஈர்ப்பா; இதுதான் காதலா; இதுதான் காதலா என்றே துடிக்கத்து வங்கியது; தடுமாறிய இவர்கள்; சற்றே தள்ளி அமர்ந்தனர்; உருமாறினார்கள், உண்மை உலகத்திற்கு வந்தனர்; ஒரு நிலைக்கு வந்த இவர்களுக்கு, இப்பொழுதான் தாகத்தின் வேகம் தெரியத் துவங்கியது தாங்கிய காதல்; அள்ளிக்கிடத்திய நேரத்தில், எடுக்காத தாகம் பசி; ஏன் ஏடுத்தது இப்பொழுது; பனியுடை நழுவியதோ கனியிதழ்தடுத்தது; பகலும் முறிந்தது; படுத்துறங்க இரவும் பூத்துவிட்டான்; விழுந்தது நிலவு விண்ணில் விரித்தது பந்தியை மேகமும்; வந்தேஉதிர்ந்தது; நட்சத்திர பூக்கள்; துணிவில்லையோ உடலுக்கும் உள்ளத்துக்கும்; எழுவதும் செயலல்லவோ; தழுவதும் உணர்வள்ளவோ; விழுவதும் விரசம் இல்லையோ; இருள் நிற வான் முகில் இனியும் தாங்காது துடித்து தூவியதால் தாங்கிய மேனி தடுமாறவே; உயிர் பெற்றனர் இவர்கள். போதுமடி போதுமடி என்றே உதடு புலம்ப உயிர்தவர்கள்; உண்மையை அறிய உடையை சரிசெய்தவள், ஓடத்துடித்தாள் வெட்கத்தில் கையால்மூட தவித்தாள்; உதட்டை கடித்தே துடித்தாள் உடைக்குதான் என்ன கோபமோ; உருக்குலைந்து போனது; உடம்புக்குத்தான் என்ன தாகமோ தவித்து கிடந்தது; நடுங்கியே எழுந்திட; நடை தடுமாறிட; முடியாத நினைவுகள் உடன்போனது உயிர்தான் உடன் வந்தது; உடைக்க வந்தது கோபம்; உடலுக்கு வந்தது தாபம்; குடைபிடித்தது மோகம் குறு குறுத்தது பருவம் கொதித்து கிடந்தது உள்ளம்; குடைபிடித்தது மோகம்; கொல்லை போனது இதயம்; எல்லைதாண்டியது யார்; கொடுக்கள் வாய்களுக்கு தயாரானது உதடு; கொட்டிதீர்த்தது தாபம்; ஒட்டிப்பார்த்தது உணர்வும்; ஓடத்தவித்தது பொழுதும்; ஆடித்தவித்தது புணர்வும்; அடக்கத்தை விட்டது நாணம் அடங்கிப்போனது உடலும், அடைகாத்து ஆண்மை; அடிமையானது பெண்மை; அமைதியானது மௌனம்; உடமையானது காமம்; உடல் பசியோ; உள்ளப்பசியோ; உருகியது மெழுகாய் வெட்கம்; உருவானது புதிய சொர்கம்; திகட்டாத தாகம்; தேடாத தேடலோ; தேடலோ பாடாத பாடலோ; படாத பாடோ; படிக்காத பாடமோ; வ(வெ)டித்தும் வதைக்காத வதையோ; வாடிக்கையானது இவர்களோ; விருந்தானது இவர்கள் பரிசமோ; வேடிக்கை பார்த்து பறவைகளோ; மருந்தாகட்டும் காதல்; மறக்க வேண்டாம் நாளையும் உண்டு காதல்; தேடத் துடித்தான் காளையும்; திரட்சியான சத்தான எச்சம் தான்; முத்தான முத்தம்தான்; முடிவுக்கு வந்தது மௌனமும் எழமுடியாத கால்கள் ஏளனம் செய்ய; எட்டு தான் போட்டார்கள்; விட்டுப் போக நினைப்பில்லாது; வானில் தீபம் தொங்கியது; தேடிய நல்லிசையை கூட்டியது பறவைகள்; திரும்பிப்பார்க்கும் இடமெல்லாம் கரஒலிதான்; இயற்கையின் கலங்கமில்லாத ஓசைதான்; இரை தேடி பொழுதுக்கு பறக்க விருப்பாத பறவைகள் ஜோடியைத் தேடி திரும்பியது பறவைகள், இவர்களைப் பார்த்து, தங்கள் பெட்டைகளுடன் நடிக்க முயன்றது. பலிக்க வில்லையே; வளரும் தென்றலும் வந்தே வீச, விரைந்தனர் இருவரும், பறவைகளுக்கும் இருமாப்புத்தான்; பொறாமை தான்; சிறையாகிய இந்தப் பறவைகளுக்கும் ஏக்கம் தான்; அகவும் மயிலும், அடக்கிக் கொண்டது ஆட்டத்தை; கூவும் குயிலும் அதிகாலை என்று அறியாது; குடிலுக்கு திரும்பிவிட்டது; நாட்கள் ஓடியது தெரியாதுஅடித்தது இவர்களின் இதயமும் படபட வென்றே; வந்திடுங்கள் நாளையும்; என்றே வேளமும் வாய் அசைத்து இசை முழங்கியது; ஆடுங்கலாபமே அருகில் வா என்றான் இருகித்தானேகிடந்தோம்; இனி எதற்கு இன்னொரு இருக்கம்; உருகித்தான் கிடந்தோமே உடம்போடு; நடிப்பா என்றான்; நடுக்கம் தான் என்றாள்; தடுக்கவா, தடையேதும் இல்லையே என்றான்; தடுப்புபோட்டது போதும்; துடுப்பு போட்டதும் போதும்; விடுப்பு விடுப்புதான்; விருவிரு என்று செல்லும், வித்தை காட்டியது போதும்; நடையைக் கட்டும் என்றாள்; நடைதான் கட்டி கிடக்கின்றதே என்றான்; விடை கொடுக்காத கண்கள் விருந்து உண்டது விரைந்தனர் இருவரும்; வந்து கிடக்கலாம் உண்டு மகிழலாம் நளையும் என்றே; தேத்திக் கொண்டு சென்றனர் கைகோத்து; ஒரே மளைப்பு வனத்திற்கும்; ஒரே திகைப்பு வானத்திற்கும்; வீடுபோய் மறுநாள் வானில் வருகை தந்த ஆதவனுக்கும்; வாலிபத்திற்கு வந்தது திகைப்பு; வாடி துடித்தது நினைப்பு; ஓடித்திரிந்தது மேகம் விண்ணிலே; வாடி தவித்தது மோகம் மண்ணிலே .
Chennai, Tamil Nadu, India.