கருவறை என்ன கல்லறையா; காசு பணம் சேர்த்து வைக்கும் கல்லாபெட்டியா; கருவறை என்ன சிசு கொலை செய்யும் கசாப்புக்கடையா; கருக் கலைப்பென்ன காதல் லீலையா, கண்மூடித்தனமான செயலா, இல்லை, காசு பணம் சம்பாதிக்கும் தொழிலா; கருவறை என்ன இருட்டறையா, கருணை இல்லாமல் மூடிவைக்க; கருவறை என்ன தாய்மை (த)தாங்கக் கூடாத தனியறையா; கருவறை என்ன சொகுசு குளு குளு அறையா; கருவறை என்ன கழிவறையா கழுவி கழுவி விட; கருவறை என்ன தங்கும் பொழுது போக்கு விடுதியா, தங்கி தங்கி நித்தம் செல்ல; கருவறை என்ன வாஸ்த்து பார்த்து கட்டும் கட்டிடமா; மானிடனே; கருவறை வம்ச விளக்கை ஏற்றும் கர்ப்பக்கிருகம்; கருவறைக்கதறல் இனியும் தேவையா; சிரிப்பொழி என்ன சில்லரையா, சில்லு சில்லாய் உடைந்த ஓட்டை சட்டியா; பாசம் என்ன வழுக்கி விழ துடிக்கும் பாசமா; வேசம் போடாதே வேதனையை சுமக்காதே; தாயின் கருவறையும் பாசம் வழிந்தோடும் பாசறை தான்; நாகரீக சவக் குழியில் விழுந்து கல்லறை கட்டும் அநாகரிக வாதிகளே, புன்னகையை தொலைத்துவிட்டு , புகைந்து கருகும் கரிக்கட்டைகளே; அன்பை புதைத்து விட்டு, அசிங்கத்தை தேடும் அயோக்கிய கூட்டமே; அன்பு என்ன அரைக் கிலோ கத்தரிக்காயா, விலைக்கு வாங்க; அன்பை புதைத்துவிட்டு உறக்கம் வராது, உயிர்வாழத் தவிக்கும் அரக்கர்களே; சுரண்டித் தின்னுபுட்டு தனிமையில் வாடும் தன்னல வாதிகளே; சுயநலம் என்ன உன் சொந்தக்காரனோ; மானிடனே; கல்லறைக்குள் போகத்தான் வேண்டும் என்று தெரிந்தும் சில்லரைதேடுவதேன்; சிசு கொலை செய்வதேன்; சிற்றின்ப வாழ்வுக்காக கருக்கலைப்பை நாடுவதேன்; வாழ்க்கைப் புத்தகத்தில் கருவறை, முதல் பக்கம், கல்லறை இறுதிபக்கம்; மறக்காதே; மனமும் கல்லறைதான்; மறக்க முடியாத நினைவுகள் வந்தே நித்தம் நித்தம் புதைக்கப்படும் கல்லறைதான்; மனமும் கருவறைதான்; மனசார அன்பை சுமக்கும் அன்பு இல்லம் தான்; கருவை சூறையாடுவதும் கற்பை சூறையாடுவதும் ஒன்றுதான்; பாவம் என்ன பரிகாசமா, பரிகாரம் செய்யும் உபண்யாசமா; பாவிகளே; கருவறை கதறவேண்டாம், கண்ணீர் சிந்த வேண்டாம் இனியும்; கருவறையும் கடவுள் குழந்தைகள் வளரும் புன்னிய சன்னிதானம் தான்; தவறாக கருவை சிதைக்காதே; தவறுக்குமேல் தவறை செய்யாதே; கனவை புதைக்காதே; கருவறையை கல்லறையாக்காதே; கருப்பை தாய்மை தாங்கும் உயிர்ப்பை; கருவை சுமப்பதை இம்சை என்று நினைக்காதே; இன்ப தேடல் என்று நினை.
Chennai, Tamil Nadu, India.