கண்ணே முகம் பார்க்கும் கண்ணாடியே பொய் சொல்லக் கற்றுக்கொண்டாயா; பார்த்தாயா கசப்பு மூட்டும் கிழமைக் கோலத்தைக்காட்டு கின்றாய். எத்தனை முறைதான் துடைத்து துடைத்து பார்ப்பது; என் இளமை முகம் எங்கே போனது; கண்ணாடியே ஏன் மறைக்கின்றாய்; நான் அழகாய் இருப்பது பிடிக்க வில்லையா; உனக்குத்தான் பொறாமையா; அழகிய முகத்தை ஏன் இப்படி அசிங்கப் படுத்துகின்றாய் கண்ணே கண்ணாடியே எத்தனை தடவை சாயத்தை பூசுவது; மின்னிய கண்கள் இப்பொழுது மிரட்டு கின்றதே; மிடுக்கும் புருவம், மக்கிப் போன குப்பை போன்று கிடக்கிறது எத்தனை தடவை முலாம் (கண் மை;) பூச; அழகிய கூந்தலில் வெள்ளை நரையை மறைக்க கலர் அடித்தாலும் சுருங்கிய முகத்தை காட்டு கின்றாய்; கண்ணாடியே காண்பிக்காதே உன் கோபத்தை எங்கள் மீது; பள பள என்று பலிச்சிடும் கண்ணாடியே பல்லை காட்டாதே; உன் முன்னாடி தான் நிற்கின்றேன்; முறைத்துப் பார்க்காதே; முட்டாள் தனமாய் தவறாய் பிம்பத்தைக் காட்டாதே தயவு செய்து உண்மையைக் காட்டாதே முட்டாள் கண்ணாடியே, இது நான்அல்ல; பொய் சொல்லவும் கற்றுக் கொண்டாயோ; மாயக் கண்ணாடியே, மாறுபட்ட உருவத்தைக்காட்ட மாறுவேடம் தான் போட்டாயோ (எனக்கு); அழகுபெட்டகமே; என் இளமை ரகசியத்தை மறைக்காதே; ஏன் இந்த கிழட்டுகோலம்; என்ன கோபம் உனக்கு; என்ன தரவில்லை; எத்தனை தடவை செண்ட் அடித்திரும்பேன் உனக்கு; எத்தனை தடவை உன்னை துடைத்து பளிச்சென்று வைத்திருப்பேன்; பல்லைக்காட்டாதே; எங்கே என்பற்கள்; உனக்கும் எனக்கும் என்ன பகை; உண்மையைச் சொல்; சித்து வேலையைச் செய்யாதே; சுறுக்கமான முகத்தையும்; மேனியையும் காட்டாதே; மனசு இருக்கமாய் போய்விடுகிறது. என் சொத்தே அழகு தான்; சோடை போய் விட்டதோ; எத்தனை தடவை உன்னை எடுத்து சென்று இருப்பேன்; பத்திரமாக காத்துவந்தேன்; பைத்தியமே, பயப்படாமல் எனக்கு வயதாகி விட்டது என்று காட்டுகின்றாயே; போதும்போதும்; ஓடிப்போ இல்லை என்றால் உடைத்திடுவேன்; சிரிக்காதே சீண்டி விடாதே கோபத்தை; சிதைந்த கண்ணாடியே என் அழகை சீர் குலைத்தது போதும்; இன்றல்ல நாளையாவது காட்டு நான் நான் இளமை என்று; அட அன்பு தோழியே கோபப் படாதே ஆத்திரப் படாதே நான் மாயக் கண்ணாடியும் அல்ல; மயக்கும் கண்ணாடியும் அல்ல; உள்ளதை உள்ளபடி பிரதி பலிக்கும் முகம் பார்க்கும் கண்ணாடி தான்; நீ சிரித்தால் நான் சிரிப்பேன்; நீ அழுதால் நான் அழுவேன்; உன் பிம்மத்தைக் காட்டும் முகம் பார்க்கும் கண்ணாடி நான்; உள்ளதை உள்ளபடி காட்டுவேன்; பொய் பேசத்தெரியாது. நம்பிக்கையுடன் என்னைப் பார்; உன் பொக்கை சிரிப்பின் அழகு தெரியும்; உன் முதுமையின் ரகசியம் தெரியும்; இன்னமும் நீ திடகாட்டமாய் இருப்பது தெரியும்; தோல் சுருங்கினால் என்ன; தோழன் நான் இருக்கின்றேன் எத்தனை நேரம் என் முன் கழித்திருப்பாய் மறந்து விட்டாயா; நம்பியே, உன் உள்ளம் சுருங்க வேண்டாம் என்றென்றும் இளமையாக இருக்கட்டும் அது. மொக்கை போடாதே, பொக்கவாய் கிழவி என்பதை சொல்லாமல் சொல்கின்றாய்; நம்பியே, என்னைப் பார் சிரி ; உன் கோபம் மறைந்துவிடும்; உன் தனிமையை விரட்டும் தோழனே நான் தான்; என்னுடன் பேசு; என் முன் வந்து பேசு; புலம்பித் தள்ளாதே; மனப் பாரத்தை இறக்கிவை; மெளனம் சாதிக்காதே; உன்னைப் போன்று தான் நானும் விழுந்து உடைந்து விட்டால் , முழுதாய் பார்க்க முடியாது; முதுமையும் அப்படித்தான் முடங்கிக் கிடக்காதே; வா வந்தே பாரு பார்த்துக்கொண்டே இரு பழகு என்னுடன்; பழைய நினைவுகளை நினைத்துப்பாரு என் முன் நின்று; நினைவுகள் உன்னை நிம்பதி படுத்தும்; சரி சரி உன் உபன்யாசம் போதும்; எங்கே என் மூக்குக்கண்ணாடி; அது உன்னைப் போல் பொய் சொல்லாது; போலியாக நடிக்கத் தெரியாது; போதும் போதும் கண்ணாடியே பொய் சொல்லாதே.
Chennai, Tamil Nadu, India.