Blog

சிக்கனம்

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 10/01/2024
  • Category: thathuvam
  • Views: 217
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

சிக்கனம், சிக்காத விக்காத வாழ்க்கைக்கு வேண்டும் சிக்கனம்; சிக்கனம் அது இக்கனமே வேண்டும்; முதலில் இருந்து முடிவு வரை வேண்டும் சிக்கனம்; வாழ்வின் முதலே சிக்கனம்; சிக்காத வாழ்க்கைக்கு வேண்டும் சிக்கனம்; சீறும் சிறப்புமாய் வாழ வேண்டும் சிக்கனம்; பதரும் வாக்கை பாழ்படும்; சிதறும் வாழ்க்கை சீரழியும்; சிரமத்தை போக்க சிக்கனம் வேண்டும்; சிக்கல் இல்லாத வாழ்விக்கு சிக்கனும் சிக்கனம்; சிக்கனம் சீரிய வாழ்விற்கு இலக்கணம்; சிந்தாத வாழ்வில் இருக்குமாம் சிக்கனம்; சிறப்பாய் வாழ வேண்டும் நமக்கு சிக்கனம்; சிக்கனமாய் இல்லாதவன் சீரழிவான்; சேமிப்பு இல்லாத வாழ்க்கை சேற்றில் சிக்கியது போன்று தான்; வரவு அறிந்து செலவு செய்தால் வாழ்வு மலரும்; வரவு மீறி செலவு செய்தால் வாழ்வு கருகும்; சிக்கனமாய் இரு! சேமித்து பழகு! சேதம் இல்லாத வாழ்க்கைக்கு சேர்க்க வேண்டும் சிக்கனம்; செலவுக்குமுன் சேமிப்மிக்க பழகு; சேமித்தபின் செலவிழிக்க துவங்கு; செலவதித்துவிட்டு பணத்தைத்தேடி ஓடாதே; சேமித்தபின் செலவிட திட்டம் இடு; உழைத்துவந்த பணத்தை உதாசீனம் படுத்தாதே; ஒவ்வாத செலவை செய்து உதவாக்கரையாகாதே; சிறிய கசிவும் பொரிய கப்பலையே கவிழ்த்தி விடும்; விரும்பியபடி வாழாது, விரும்பியே வாழக் கற்றுக் கொண்டால், வீடுதேடி வரும் சிக்கனம்; வாசல் முதல் சமையல் அறை வரை வேண்டும் சிக்கனம்; சிரமங்கள் குறைய வேண்டும் சிக்கனம்; பணத்தை சேமித்தால் வாழ்வு இனிக்கும்; பகையை சேமித்தால் பலிவந்து சேரும்; அன்பை சேமித்தால் உறவு வழுப்படும்; பணிவை சேமித்தால் பன்பு வந்து சேரும்; பாசத்தை சேமித்தால் நேசம் வந்து சேரும் வாழ்க்கையில் சிக்கனம் செழிப்பு; வார்த்தையில் சிக்கனம் நட்பு. நீரின் சிக்கனம் புவியில் வாழ்வு; நிதானமாக செலவில் சிக்கனம் நிம்மதி வாழ்வு; எரிபொருள் சிக்கனம் எதிர்கால வாழ்வு; உணவின் சிக்கனம் வறுமையற்ற வாழ்வு; உனது சிக்கனம் நொந்துபோகாத நோயற்ற வாழ்வு; சிக்கனம் இல்லை என்றால் விக்கி தவிக்கனும்; மலைபோல் இருக்கும் சொத்தும் கற்பூரமாய் கரையும்; ஆசையில் வேண்டும் சிக்கனம்; ஆகாதது போதாதை வாங்க பழகினால் வந்தே சேரும் ஆபத்தாய் சிக்கலும்; ஆடம்பர வாழ்க்கையின் ஆரம்பபே அழிவாம்; இல்லத்தில் வேண்டும் சிக்கனம்; உள்ளத்தில் உதிக்க வேண்டும் சிக்கனம்; நாட்டை காக்க வேண்டும் சிக்கனம்; நம்மை காக்கவும் வேண்டும் சிக்கனம்; பாசத்தில் வேண்டாம் சிக்கனம்; பாவத்தை சேர்ப்பதில் வேண்டும் சிக்கனம்; வாழ்க்கையில் நாம் படிக்க வேண்டியது கடைபிடிக்க வேண்டியதும் சிக்கனம் ; சேமிக்க தெரிந்தவரே, பிழைக்கத் தெரிந்தவர்; செலவாளி என்றும் கடனாளி; சிறுக சேர்த்தால் பெருகும் இன்பம்; சிக்கனத்தில் வேண்டாம் கஞ்சத்தனம்; உபயோகம் இல்லாத செலவு உபத்திரம் தான்; உண்ணாமல் உறங்காமல் சேர்க்காதே; உகந்ததை சேர்த்திடு; உன்னால் முடிந்ததை சேர்த்திடு; உண்மையாய் சிக்கனத்தை கடைபிடித்துவிடு; சிறுவயதிலேயே கற்போம் சிக்கனம்; எதிர்பார்ப்பை தேடி ஏமாற்றத்தை சுமக்காதே; ஆசையை கூட்டி அழிவைத் தேடாதே; சேர்க்க பழகு; சேர்ந்து வாழப்பழகு; சேமிக்க பழகு; சேர்த்ததை பாதுகாக்க பழகு.

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media