Blog

இருக்காது இருக்காது

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 10/01/2024
  • Category: ookkam
  • Views: 99
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

குழையாத மண் குடமாகாது; குழையாத பெண்ணிடம் பெண்மை இருக்காது; குழையாத சோறு பசிக்காது; களையாத வேசம், நாடகத்திற்கு உதவாது; கலங்கிய வாழ்க்கை சுகப்படாது; குனிந்து நிமிர முடியாத உ டம்பு ஒன்றுக்கும் உதவாது; குறைக்கும் நாய் கடிக்காது; விடியாத பொழுது சிறக்காது; விரையாத கால்கள் வீடு திரும்பாது; விருப்பம் இல்லாத உறவு, விரட்டாமல் விடாது; விலைபோகாத பொருளுக்கு மதிப்பு இருக்காது; விருப்பம் இல்லாத கண்ணில் கருணை பிறக்காது; புழுங்காமல் வேர்வை சிந்தாது; புழுங்கும் மனதில் அன்பு பிறக்காது; புகழ்தேடி செல்பவன் வாழ்க்கை இனிக்காது; உழைப்பின்றி வெற்றிகிட்டாது; உழவு இன்றி உலகம் தழைக்காது; பொழுது விடியாமல் பகல் வராது; பொழப்பு இல்லாமல் பொருள்வராது; பொருப்பு இல்லாமல் செய்யும் செயல்கள் சிறக்காது; பொய்யான வாழ்க்கை நிலைக்காது; அருமை அறியாதவனுக்கு, பெருமை தெரியாது; பெயரை இழந்தவனுக்கு, புகழ் கிட்டாது ; பொறுமை இல்லாதவனுக்கு, பொறுப்பு இருக்காது; கனியாத காய் இனிக்காது; கசக்காத மருந்து, நோயை விரட்டாது; கல் மனதில் கருணை பிறக்காது; பதராத வாழ்க்கை சிதறாது; பகையால் உறவு சேராது; பாசம் இல்லாத இதயம் வடிக்காது; சோம்பேறியாய் இருப்பவனுக்கு சோறு கிடைக்காது; நிதானத்தை இழந்தவன் நிலைகுலையாமல் இருக்க முடியாது ; உண்மை பேசாவிடின் நன்மை பயக்காது; அறியாமை கொண்டவனுக்கு , அறிவு உதவாது; அப்பாவிக்கு ஆத்திரம் வந்தாலும் அன்பை மறக்காது; அகம்பாவம் பிடித்தவன், அழியாமல் போவது கிடையாது; ஆத்திரக்காரனுக்கு புத்தி இருக்காது; ஊமையின் பாசையை காது அறியாது; உண்மையின் பாசை அதர்மத்திற்குத் தெரியாது; தன்நம்பிக்கை என்றும் வீண்போகாது; தர்மத்தை அதர்மம் ஜெயிக்காது; பகைவனுக்கும் நம்மை செய்தால் பகை பிறக்காது; தர்மம் தலைசரிக்காது; கருமம் உன்னை விட்டு நீங்காது; அழகை இழந்தவனுக்கு அழங்காரம் உதவாது; அன்பை இழந்தவனிடம் பண்பு இருக்காது; பண்பை இழந்தவனிடம், மானம் இருக்காது; பணம் இல்லாதவனிடம் பயம் இருக்காது; ஆசையைத் துறந்தவனிடம், ஆரவாரம் இருக்காது; அதிகாரம் செய்பவனை, ஆங்காரம் விடாது; கனியாத கனியும், கனிவில்லாத மனதும் பலன் தருவது கிடையாது; இரக்கம் ஈகை இல்லாதவன் இல்லத்தில் உறக்கம்வராது; அனுபவத்தில் கிடைப்பதில்லை அலச்சியம்; அனுமானத்தில் கிடைப்பதில்லை வெற்றி; அவமானத்தில் கிடைப்பதில்லை நிம்மதி; ஏற்றிவிட்டவன் ஏறிச்சென்றது கிடையாது; ஏமாற்றுக்காரன் எடுத்துதான் பழக்கம்; எதையும் கேட்பது கிடையாது ஏழையின் பேச்சி அம்பலம் ஏறாது; பாடாய் படுபவன் ஓடாய் தேயாமல் இருக்க முடியாது; இளமையில் மோகம்,அலையாமல் விடாது; இயற்கையின் சீற்றம்; அழிக்காது விடாது; கரைந்த நிழல்கள், கண்ணீர் சிந்தும் கனவுகள்; மறைந்த நினைவுகள், மறுபடி பிறக்கத்துடிக்கும் இளமைகள்; பிரிந்த உறவுகள் நடிக்கும் இதயங்கள்; பிரியமான உறவுகள் வடிக்கும் இதயங்கள்; பரிதாபப்படும் உள்ளங்கள் கருணை தெய்வங்கள்; வடியாத சோகம்; முடிவடையாத தொடர்கதைகள்; விடியாத பொழுது வெரும் கனவு; படியாத வயது , பிடிவாத மனசு; முதுகில் சுமக்கும் பாரத்தை, முதுமை சுமக்காது; தோள் தூக்கும் பாரத்தை, மனம் சுமக்காது; பொறுமை இருப்பவனிடம், பொறாமை இருக்காது; பெருமை உடையவனிடம், சிறுமை சீண்டாது; வாடாத மனமும் கிடையாது; விடாத சோகமும் கிடையாது; தீஞ்சொற்கள் தீண்டாது விடாது; பிறரை வாழவைப்பவனுக்கு தன்னை வாழ வைக்கத்தெரியாது; பிடிவாதம் படு நாசம்; பிடிப்பு இல்லா வாழ்வு படுமோசம்; புண்ணியத்தை, மனதை புண்படுத்திவிட்டு தேடாதே; கண்ணியத்தை கண்டபடி வாழ்ந்து விட்டு தேடாதே; புத்தியை விற்று (விட்டு) புதையல் தேடி போகாதே; விரோதத்தில் உண்டு குரோதம்; தவறை செய்து விட்டு தண்டனை கேட்காதே; புத்தராக வேண்டும் என்று சித்து வேலை தேடி போகாதே; புனிதத்தை பாவத்தில் தேடாதே; புண்ணியத்தை புதைத்துவிட்டு கண்ணியத்தை தேடாதே; பணம் இருப்பவனிடம் பயம் ஒட்டும்; பணம் இல்லாதவனிடம் கவலை ஒட்டும்; பசி இல்லாதவனிடம் நோய் ஒட்டும்; பட்டினி இருப்பனிடம் வறுமை ஒட்டும்; பத்திய சாப்பாட்டில் உடம்பு ஒட்டும்; பகை இருப்பவனிடத்தில் குரோதம் ஒட்டும்; பாசம் இல்லாதவனிடம் சோகம் ஒட்டும்; மணம் இல்லா இடத்தில் நாற்றம் ஒட்டும்; `மனம் இல்லாதவனிடம் சினம் ஒட்டும்; மானம் இல்லாதவனிடம் அசிங்கம் அவமானம் ஒட்டும்; குணம் இல்லாதவனிடம் குற்றம் ஒட்டும்; படராத பாசம் பட்டுப் போகும்; தொடராத பாசம் விட்டுப்போகும்; தொலைத்த உறவு அலைந்து தேடினாலும் கிடைக்காது; விழுந்தால் சிரிப்பர்; எழுந்தால் ஓடுவர்; இலைகளுக்குத் தெரியாது காற்றின் பிறப்பிடம்; இதயத்திற்று நடிக்கத் தெரியாது துடிக்கத்தெரியும்; வலி இருக்கும் வாழ்க்கை வழிதேடும்; வழிதெரியாத வாழ்க்கை வழுக்கி விழும்; தடுமாற்றத்தை ஏமாற்றத்தை தடுங்கள் புத்திசாலியாக இருப்பதை விட தைரியசாலியாக இருங்கள்; வீழ்வேன் என்று நினைப்பதை விட வாழ்வேன் என்று நினை; திருத்தி பழகுவதைவிட திருந்தி பழகு; நிம்மதியை தேடி ஓடாதே, நிம்மதியை உன்னுள் தேடு; உண்மையாய் வாழா விட்டாலும் ஊமையாய் வாழாதே; தடுக்கி விழுந்தால் பள்ளம்; தடுக்காமல் விழுந்தால் உள்ளம்.

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media