மண்ணுக்குள் இல்லை சாதி; மரம் செடிகொடிகள் எங்கள் வேலி. மண்ட வேண்டாம் மனிதனுக்குள் விரோதம் குரோதம் பகைமை; அண்டவேண்டாம் கொலை கொடுமை; அன்பே மீதி; அகிலமே வீதி; ஆட்டிப்படைப்பது என்ன நீதி; உள்ளம் எங்கள் வீடு; உலகம் எங்கள் கோவில்; ஊரார் எங்கள் உறவு உடைவாலுக்கு என்ன தவிப்பு; மனிதன் எங்கள் சாதி; மன்னியம் எங்கள் நியதி; அன்பே எங்கள் நீதி அகிம்சை எங்கள் வீதி. தொடுக்கும் போரும், கொல்லும் பகையும் இங்கு இல்லை. சொல்லும் பாசமுண்டு சொட்டும் நேசமும் உண்டு. புகையும் பகையும் இல்லை; புரியாத மனமும் இல்லை; பிரியாத உறவும் இல்லை; அன்பில் பிறந்தது பூமி, அன்னை பூமியின் புதல்வர்கள் அணு ஆயுதத்திற்கும் போருக்கும் இல்லை ஜோலி. அப்பனும் சுப்பனும், எங்கள் உறவினர்; அண்டை நாட்டவரும், எங்கள் உடன் பிறப்பு; சண்டை சச்சரவு இனி இல்லை. வர்க்கப்போரும் வாதப்போரும் இங்கு இல்லை. வாழ்க்கையில் தந்திரம் இல்லை அன்பே எங்கள் மந்திரம். தரணி முழுவதும் வீசுது (வி)சுவாசக்காற்று. தந்திரம் சூனியத்திற்கு, இடம் இல்லை பாரு. மார்டின் அக்பர் ரகுவும் மனித சாதி; அல்லா ஏசு கிருஷ்ணனும் சிவனும் ஒரே சாமி; பாச மழையே எங்கள் பூமி; வெடித்தே வந்த பூமியடா; நெருப்பில் பிறந்த குடும்பமடா; நெருப்பாய்; வெந்திட விருப்பம் இல்லையடா; வெறுப்பும் வெறித்தனமும் ஏனடா தொத்திவாழும் உலகில்; கொத்தி அழிக்க விருப்பம் இல்லையடா; சுத்தித்திரியும் பூமியடா; சொந்தம் கொண்டாடுபவர் யாரடா; சுத்தி சுத்தி வருகிறது பூமி ; சுற்றாமல் நின்றுவிட்டால்; சுடுகாடு ஆகிடும் சாமி. சுத்தும் பூமியில் போர் சப்தம் எதற்கு, ஒன்றாய் வாழ்ந்திடு சாமி; ஓற்றுமையே நமது வேதம் சாமி; கொல்லும் ஆயுதமும் எதற்கு; கொலை வெறியும் எதற்கு; சொல்லும் பகையும் எதற்கு; அகிம்சை உலகில், அடிக்காது போர் முரசு; அலைந்தே திரியும் மனித நேயம். ஆயிரம் மொழிகள் உண்டு; எல்லாம் எங்கள் சொந்த மொழிகள்; சொல்லத் தெரியாத பாசைகள்; செல்லும் இடங்கள் எல்லாம் பாசங்கள். அள்ளிப் பருகியே உறவுகளுடன், ஆனந்தக் கும்மி அடித்திடுவோம். அன்னை தந்தையர்கள் உண்டு சுற்றத்துடன் வாழ்ந்திடுவோம். தீவிரவாதமும் இல்லை தீராத மதவாதமும் இல்லை. உலகம் அமைதிப்பூவில் உருண்டே ஓடட்டும்; உனக்கு எனக்கு என்று இல்லாது நமக்கு என்றே இருப்பதை பகிர்ந்து வாழட்டும்; அன்பு உலகில், இருண்ட மனம் இல்லை; இங்கே இருக்கமான உறவும் இல்லை; இருள் சூழ்ந்திட பகையில்லை. அமைதிப் பூஞ்சோலையில், அமைதியே மனித நேய சாலை; அழகாய் சுற்றித்திரியிது பூமி; அமைதியை சீர் குழைக்க வேண்டாம் (ஆ) சாமி கொட்டும் மழைக்கு இல்லைசாதி; கோடி கோடி உயிரினங்களுக்குள் இல்லை சாதி; மண்ணில் பிறக்கவில்லை இந்த சாதி; குருதியில் பாயவில்லை சாதி; மலைக்கும் இல்லை இந்த சாதி; மணக்காத சாதி; மனிதனுக்கும் மட்டும் என்ன நீதி. புத்தன் சொன்ன போதனை போல் அகிம்சை பாதையிலே, சத்தமிட்டே கூறுவோம்; அன்பும் அகிம்சையும், சகோதர நேயமும் எங்கள் வேலி என்று. உறவாடியே கொல்லும் சினம்; உடன் இருந்தே கொல்லும் பகை. ஒரே சாதி; ஒரே மதம்; ஒரே இனம்; என்ற ஒற்றுமை உலகை படைப்போம். காத்திடுவோம் உலக அமைதியை. சாய்த்திடுவோம் போராட்டத்தை; அறவே ஒழித்திடுவோம் வறுமை நோயை. வாழ்வதற்காக உலகை மாற்றிடுவோம், அன்புச் சோலையாய்; எங்கும் பசுமையாய்; எல்லாம் ஒற்றுமையாய்.
Chennai, Tamil Nadu, India.