Blog

விழித்திடு எழுந்திடு, எழுச்சி பெறு; விடியும் விடியல் உனக்கே

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 12/01/2024
  • Category: ookkam
  • Views: 102
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

விடியலில் இல்லை வேறுவாடு; விழுந்தே எழுவது சூரியன்; விடிந்தே உதிப்பது உதையம்; விதைத்தே முளைப்பது அதிகாலைபோன்று முயற்சி; விடியலும் புறப்பட்டுவிட்டான் விடைதேடி; விழுந்து கிடந்தது போதும், விழித்திடு உழைத்திடு, வெற்றிகான துடித்திடு, விதி என்று உறங்கினால் துவங்காது துவக்கம்; வீற்றிருந்தால் தொடாது வெற்றி; தள்ளிப்போனால் சொல்லாமல் போகும் வெற்றி; தளர்ந்து போனால் தயங்கும் வெற்றி; (மனம்) தடுமாறினால் தளைக்காது வெற்றி; தடம் புரண்டால் தவறிடும் இந்த வெற்றி; பிறக்கட்டும் நல்ல முயற்சி; விதைக்கட்டும் நல்ல துவக்கத்தை; தரட்டும் நல்ல முடிவை; முடங்க வேண்டாம் துவக்கம்; முட்டி முளைத்தால் தான் முளைப்பு; தட்டி எழுப்பினால் தான் எழுச்சி முனங்காமல் தொடங்கினால் தான் பிழைப்பு; முடியாது என்றால் விடியாது வெட்டியாக இருந்தால் வரும் கவலையும் களைப்பும்; அடங்க வேண்டாம் ஆக்கமும் ஊக்கமும்; அடங்கிட வேண்டாம் எழுச்சி; முயற்சிக்கு முட்டுகட்டை போட வேண்டாம் உன் சோம்பல்; விட்டு கொடு, விழுந்து கிடக்காதே; விரட்டி விடு விரக்தியை; சோம்பலை; தொட்டு பார்ப்பதற்கு இல்லை வெற்றி; தொடர்வதற்கு வெற்றி; எழுந்து நடந்தால் இருட்டில் கூட வழி கிடைக்கும்; விழுந்து கிடந்தால் இதயத்தில் கூட இடம் கிடைக்காது; கொசுக்கள் ஆயும் சாக்கடையாக, குவிந்து நாறும் குப்பைமேடாக, மனம் இருக்க வேண்டாம், இறக்க வேண்டாம் உத்வேகம், முடக்க வேண்டாம் முயற்சியை, மறுக்க வேண்டாம் சாதனையை சுமக்கவும் வேண்டும் சோதனைகளை; சோதனைகள் வேதனையாக மாறுமும் சாதனையாக்கு; வெட்டிக் களைந்த முடியாக , முடிவை எடு; முயற்சியை முழு மூச்சாய் துவங்கு; தயங்கினால் கோழை; தாங்கினால் பிழை; தூங்கினால் சோம்பல்; துவங்கினால் புரட்சி; பிழை ஆக வேண்டாம் துவக்கம்; பிடிவாதம் உன்னை சீண்ட வேண்டாம்; பிழைப்புக்கு இல்லை வாழ்க்கை; ஓப்புக்கு இல்லை உன் துவக்கம் ஒப்பாரி வைக்க வேண்டாம் உன் சோம்பல் தப்பு கணக்கு போடாதே தடுமாறாதே; பிடிப்புக்கு வாழ்கை பிடித்த வாழ்க்கை; நடிப்புக்கு இல்லை வாழ்க்கை; உத்தமனாக இருக்கா விட்டாலும் உதவாக்கரையாக வாழாதே; தன்னம்பிக்கை உன் நம்பிக்கையாய் இருக்கட்டும்; நம்பி கை வை நம்பிக்கை தானாய் பிறக்கும்; நல்ல எண்ணத்தை விதை, நன்மை பயக்கும்; விடியலில் இல்லை கலக்கம்; விடாது வருவது உதயம்; விடிந்தபின் ஓடுவது இருட்டு; விடாது விரட்டிடு சோம்பலை; வெற்றிக்குத் தேவை வேர்வை; வீற்றிருந்தால் சிந்தாது வெற்றியின் வேர்வை; விரக்தியை விட்டொழி வீழ்ந்திடும் சோகம். நாளை நாளை என்றே காலத்தை உதைத்தால் ஒட்டிடும் தோல்வி. ஓட்டம் எடுத்திடும் வெற்றி; எடுக்கட்டும் ஊக்கம்; எழுந்து வரட்டும் ஆக்கம்; எதிர்த்து போராடு விடாமுயற்சியுடன் சவால்களை; சரித்திரம் படைக்கட்டும் சாதனைகள்; உனக்குள் வேண்டாம் வேண்டாத துக்கம்; உனக்கு வேண்டும் தயக்கம் இல்லாத துவக்கம்; தவத்தில் சிறந்தது தியானம்; தானத்திலும் உயர்ந்தது நிதானம்; உதயம் உதிக்க வேண்டிய இடம் வானம்; உனக்கு உதிக்க வேண்டும் ஞானம்; தயங்கினால் தங்கிடும் சோகம்; தாங்கிடவேண்டாம் கோபம்; விழுந்தால் வந்திடும் சோகம்; விடிவே இல்லாமல் போயிடும் வாழ்வும். பிடிவாதமும் வாதம்தான்; பிடித்துவிட்டால் விழுந்துவிடும் வாழ்வும். பிடிப்பு இல்லாத வாழ்வும், பிடிபடாமல் போகும்; தடைகளும் உனக்கு தந்திடும் விடையும்; தடுமாற வேண்டாம் இனி நீயும். தாங்கிடு தாங்கிடு தயங்காமல் தாங்கிடு; தடைகளும் உடையும்; தடுமாற்றம் நீங்கிடும். வெற்றிக்கும் தேவை தோல்வி; வெந்திடவேண்டாம் நீயும். ஆறுதல் மாறுதலைத்தறாது ஆற்றுவெள்ளம் அடித்துச் செல்லாமல் இருக்காது காலச்சக்கரம் சுழலாமல் இருக்காது; தோல்வியைக் கண்டு பயப்படாதே, தோல்வியைத் தழுவாத வெற்றி தோகையில்லாத மயிலாம். வலிக்குப்பின் உறங்குவது வெறியடா; அது வெற்றிக்குப் போடும் வழியடா; விடியலைத்தேடாத காலையில்லை; விடைகிடைக்காத கேள்வி இல்லை; விழுந்தே முளைக்காத பொழுதும் இல்லை; விடையைத்தேடும் காளையாய் இரு; விழுந்து கிடக்கும் சோகத்தை உடைத்துவிடு; கவலையை கொட்டாதே; கவனத்தை சிதைக்காதே; கண்டபடி வாழ நினைக்காதே; கண்ணீர் சிந்தி கதறாதே; கண்டதை எல்லாம் உண்மை என்று நினைக்காதே; சோகத்தை சொந்தம் ஆக்காதே; சோம்பலை பந்தம் ஆக்காதே; நம்பிக்கை குடி கொண்டிருப்பவனிடம் அச்சம் அண்டாது; தன்நம்பிக்கை கொண்ட கைகள் உழைக்க மறுக்காது;   கண்ணீர்விடப் பிறந்தவன் இல்லை நீ! காட்டாறு நீ! வெட்டியே இழுத்துச்செல் வெற்றியை. முளைக்கும் மரம் நீ; தழைத்தபின் தாங்கும் நிழலும் நீ; தகர்த்திடும் வெடி தான் நீ; தடுமாற்றம் இல்லாத கரங்கள்தான் நீ; தடைகளை உடைத்திடு; தடுமாற்றத்தை உதைத்திடு; தவறுகளை திருத்தி விடு. பிழையை திருத்து, பழி பாவத்தை விரட்டு; பிடிவாதத்தை அகற்று; பிழைப்புக்காக உழைக்காதே; உயர்வதற்காக உழைப்பை தொடரு; காற்றில் பறக்கும் தூசி, காய்ந்து கிடந்தால் ஓய்ந்துவிடும் உனது எழுச்சி; சாய்ந்து கிடந்தால் வராது புத்துணர்ச்சி; பாய்ந்து பழகு; படை எடுத்து பழகு; படிப்பினை பெற்று பழகு; ஆசைப்படு ஆசைப்படு; ஆயிரம் ஆயிரம் படைப்புகளுக்காக ஆசைப்படு; அசிங்கத்திற்கு ஆசைப்படாதே; பாவங்கள் பிறப்பது இல்லை; பாசங்கள் அழிவதும் இல்லை; நேசம் நிற்பதும் இல்லை. வேஷம் கலையாமல் இருப்பதில்லை; நாசம் அழிக்காமல் போவதில்லை; போராடு போராடு; போதும் போதும் என்று கூறாது போராடு; பொறாமை கொள்ளாது போராடு; புயலாய் செயல்பட்டே போராடு. தன்னம்பிக்கையென்னும் விதைக்குள், ஒழிந்து கிடக்கின்றது வித்தாகி சொத்தாகப்போகும், முளைத்து தழைக்கும் வெற்றி. சோடைபோக வேண்டாம், சொத்தையாக வேண்டாம், சமரசம் வேண்டாம்; உழைப்பு என்னும் உரத்தையிடு; நம்பிக்கை வேர் ஊன்றட்டும்; பண்படட்டும் மனமும்; வெடித்து வளரட்டும் விருட்சமாக வெற்றியெனும் நன் மரமும். விழித்திரு உழைத்திடு; வெற்றி கான துடித்திரு; விடையைத் தேடு; விடியலைத் தேடி ஓடு; விடியும் விடியல் உனக்கே என்று எழுந்திடு; எழுச்சி பெறு. காலை வணக்கத்தைக் கூறும் அன்பன் அ. முத்துவேழப்பன் 12.01.2024

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media