பச்சை வண்ண வயக்காட்டில், படுத்துறங்கும் பயிர்கள்; அடித்து வரும் தென்றல் காற்று, அதனை அசைத்தே வீசும் பாய்விரித்த பச்சைப் பசும்புற்கள்; பனித் துளிகளைச் சுமக்க பகலைவிரட்டும்; பழுத்து விழுந்த கதரவனும், பொன்னிறத்தை பூச; பொழுது சாந்த பொழுதில், புதிய சித்திரத்தை வடிக்கும் மேகம்; பொன்னிற நெல்மணியைச் சுமந்த நெற்கதிர்களும் தலைசாய்க்கும்; இச்சை தீர்க்க வந்த ஜோடி பைங்கிளி, இசையைக் கூட்டி, கீச்கீச் என்று கீதத்தை எழுப்பிட, கொரித்த பழத்தை கொத்தியும் கொதரியும், உண்டும், ஊட்டியும்; காதல் லீலை புரியும்; சாந்த பொழுது, சாயத்தைப் பூசி, சனநேரத்தில் சயனம் கொள்ள முயல, இரவும் இருள் ஆடையை உடுத்த; எங்கும் இருட்டாம்; உருட்டும் யுவதியின் கண்போன்று, இருட்டை விலக்கி, எழுந்தது வெண்ணிலவும், நீல் வானில்; விழுந்த இருட்டில், விளக்கைப்பிடித்தது நிலவும்; உலாவும் நிலவுக்கு, துணையாய் ஓராயிரம் நட்சத்திரங்கள் விண்ணில் பூத்து சிதறி ஜொலித்தே வானவீதியில் அழகைக் கூட்டும்; வட்டக் குளத்தில், வழுக்கி விழுந்தே , துள்ளி விளையாடும் மீன்கள், தள்ளியே விழ, தடுமாறிய தவளையாரும், தலைதெரிக்க ஓட, குவளை விழித்தாள், சமைந்த குமரியாக; காய்ந்த நிலவும், கட்டழகை கட்டிக்கிடந்த தடாகத்தில், முகம் பார்க்க, ஒட்டிக்கொள்ள ஆசைப்பட்ட நீரும் உரசிப்பார்க்க, தடுமாற்றம் தான்; தடாகத்திற்கு தடுமாற்றம் தான்; தண்ணீரும் பூங்காற்றில் தத்தி விளையாட, சுத்திக்கிடந்த இருளும், தட்டு தடுமாற; கைதொட்டு தண்ணீருடன் விளையாட விரைந்ததாம் நாணலும் பொத்திக்கிடந்த புதரிலிருந்து, புறப்பட்ட பாம்பும் சுத்திவர, கத்தி கதறி ஓட நினைத்ததாம் தவளையாரும் . இருட்டும் பொழுதில் நிலவுக்கும் இவளுக்கும் என்ன வேலையாம் ; ஆம் நிலவும் இவளும் அழகுப் பூரணம் தான்; அழகும் அர்பூதமும் ஆனந்த பரவசம் அடைந்தனவாம். பழுத்த நிலவும், பழகிய இவளும் பழம் சுவையாம்; நிலவும் நீல் வானத்தில் மலர்ந்தது; நினைவும் இவள் மனத்தில் மலர்ந்தது; நிலவு மகள் இரவைத்தேடி வந்தாள்; இரவி மகள் இவளோ இவனைத்தேடி வந்தாள்; நிலவும் வடித்தது படர் ஒலியை சுமந்து; அவளும் வடித்தால் அடர் நிற அழகை சுமந்து ஆம் நிலவோ இரவின் உறவு; இவளோ இவனின் உறவு; நிலவின் வரவு இரவுக்கு விருந்து; இவளின் வரவு இவனுக்கு விருந்து; இருளை சுவைத்தது நிலவு, இரவை சுவைத்தது இவள் உடலு, விண்ணில்; வீற்று விடைதேடி தேடி தேய்தே போனது நிலவு, மண்ணில் வீற்று விடுதலை தேடி தேடி தேய்ந்தே போனது இவளது தேகம்; ஏங்கித் தவித்தது விண்ணில் நிலவு, ஏங்கித் தவித்தது விழிக்குள் இவளது நினைவு; நிலவைத் மறைத்தது கார்மேகம்; அவள் முகத்தை மறைத்தது கருங்கூந்தல்; புவிக்கு பொட்டானது நிலவு; பொட்டே நிலவனாது இவளது முகத்தில்; போட்டி, நிலவுக்கும் இவளுக்கும் தான்; அழகு யார், யார், என்பதில் அப்படி போட்டியாம்; எப்படியும் நாம் தான் வெற்றிபெற வேண்டும் என்று வர்ணத்தை பூசியதாம் நிலவு, வடித்தே அழகை கூட்டியதாம், எப்படியும் நாம் தான் வெற்றிபெற வேண்டும் என்று வண்ண சாந்தை பூசியே வனப்பை கூட்டினாளாம் இவளும், உலர்ந்த இருளில் உலா வந்ததாம் நிலவு; உலர்த்திய கூத்தலில், உலாவும் மங்கையும் , உறக்கம் வராது தவிக்க, உறைந்த இரவும், உடன்பட்டு உலகை மறந்து, இவள் உடலை வதைக்க, உயிரோவியம் வரைந்ததாம் இரு உடல்கள், கண்கள் தத்தை மொழி பழக, இமைகள் மௌன பாசைபேச வித்தைக்கு தயார் ஆனதாம்; இதழ்கள் சுதிசேர்த்து; மெருகேறிய உடம்புதான், மெல்ல நனைந்த உதடுகள் தான்; மெய் சிலிர்க்க வைத்த பொழுதுதான்; வித்தைகாட்டிய வனப்புதான்; விரட்டி வந்த மோகம் தான்; விடிய விடிய விளையாட்டுத்தான்; விடுபட்டது இரவுதான்; விலகு அத்தான் விலகு அத்தான் என்க விளக்கத்தான் என்று அவன் உண்க, விண்விளக்கு விடுதலை பெற்றிடதவித்ததாம் ; மெல்ல நனைத்தது மழை மேகம் நிலவை ; வித்தை காட்டியதோ விரட்டி வந்த கார்மேகம் தான்; விளையாட தவித்தது முகிலும் நிலவும்; வில(க்)கத் தவித்தது இரவு; விளக்கை ஏற்றியதாம் மீண்டும் விடுதலை பெற்று (கருமேகத்திடம் இருந்து) நிலவும், வென்றார் யாரோ! வீழ்ந்தார் யாரோ! மாண்டிலரே! மௌனத்தை விரட்டியது, எங்கோ ஏக்கத்தில் ஓலம் இட்ட நாயும், நையாண்டி செய்த தவளையும்; காலைச்சேவல் வேலைபார்த்து கூவ; சலித்துபோன மேனியும் சிலித்து பார்க்க; வளைத்துப்போட்ட மேகமும் வந்தே விரட்ட; இருதயம் இல்லாத இரவும் பொழுதை தேட; பொல பொல வென்று விடியலும் துவங்க, வேதனைதான் நிலவுக்கும் இவளுக்கும்.
Chennai, Tamil Nadu, India.