Blog

நீயே உனக்கு சொந்தமில்லை

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 12/01/2024
  • Category: thathuvam
  • Views: 439
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

நீயே உனக்கு சொந்த மில்லை; நிதானம் தவறினால் தொல்லை; நிரந்தரமாய் இருக்கப்போவது யாரும் இல்லை; இதில் நீ நான் என்ற போட்டிக்கு என்ன வேலை; எனக்கு எனக்கு என்பவன் எடுத்துபோவதற்கு எதுவும் இல்லை; எதையும் எடுத்துபோவதும் இல்லை; தனக்கு தனக்கு என்று தேடி தேடி வைத்து, தன்னலத்தில் சுயநலம் தேடுபவன், தடுமாறாமல் இருக்கப்போவதும் இல்லை; தான் தான் என்று அகந்தை பிடித்தவனும், பிறரை தாக்குபவனும், நிரந்தரமாய்த் தூங்கியபின், பிறர் தூக்கிட தாங்கிப் போகமல் போகப்போவதும் இல்லை; பாடு பட்டு சேர்த்து வைத்த சொத்தும் சுகமும் படுத்தபின், பக்கத்தில் இருந்தும் பயன் அற்று போகுது; பாவி இவனுக்கு இவன் பெற்றோர் வைத்த பெயரும், வாழ்க்கை முடிந்தபின் பிணம் என்றே ஆகுது. பிடிவாதம் பிடிப்பவனும் பிடி சாம்பலாகிறான்; பணத்தாசை பிடித்தவனும் பிணவாடை பிடித்தே போகின்றான்; தைத்த துணியும், வைத்த பெயரும், சொந்தமில்லாமல் போகுது; தைத்து உடுத்திய கால்சட்டையும் கந்தலாகுது; தைக்காமல் போத்திய தோல் சட்டையும் கந்தலாகுது; தங்கி இருக்கும் உடலும் வயது தாங்காது தடுமாறுது; தவழ்ந்து எழுந்து தடுமாறி நடந்த உடம்பு, தட தட என்று ஓடியும் ஆடியும் திரிந்தும், ஆர்பாட்டம் செய்தும், ஆடி அடங்கி ஒடுங்கிய பின், ஆட்டம் கண்டு ஓட்டம்தான் எடுக்குது; வாடகை வீடுதான் சரீரம், வந்தே புகுவது ஜீவக்காற்று; வந்த காற்று போனபின்பு காத்துபோன ஊதுபையாக (பலூன்), பந்தத்தை அறுத்தே, வீட்டை விட்டு ஊர் கோடிக்கு உறக்குப் போகுது ; பேர் வைத்த பிள்ளைகளும் பிணம் என்றே சொல்லுது; பார்த்துப் பார்த்து வளர்த்த சரீரம் பாடாய்ப் படுத்துது; பசி பசி என்று வந்த பின் துடி துடிக்குது; பாடுபட்டு சேர்த்தச் சொத்தும், பார்த்துப் பார்த்து வளர்த்த பிள்ளைகளும், படர்ந்து வளர்த்த உறவும் பாதியிலே போனது. ஊர்பேர்த் தெரியாமல் வந்த இவனும், உறங்கித்தான் போகின்றான்; யோனியிலே புகுந்த வித்து சிசுவாக மாறுது; சிசுவாக வளர்த்த உசுரு தசை நரம்பு எம்தோல் என்றே உருமாறுது; எழுந்து நடந்த உடம்பு, எழமிடியாது விழுந்து போகுது; பேர்த் தெரியாமல் வந்த இவன் பேர் மறந்தே போகின்றான்; கூடவந்த உறவும் கூடியே வந்து கூவியே வழிஅனுப்பப் பார்க்குது; கூடி கூடி சுத்திய பாசமும், குடு குடுன்னு ஓடுது; உடலுக்குள்ளே புகுந்த உசுரு, உடம்புக்குள்ளே ஓடித் திரிந்து உடம்பு ஒடுங்கியபின், உடம்பை விட்டு ஓடிப்போகுது; சிந்தி சிந்தி வாழ்ந்த இவன் சிரித்தாலும் அழ மறக்கப்போவதில்லை; பசியும் பிணியும் பின் தொடரும் வாழ்விது; பகுத்தறிவிருந்தும் பகுத்தாய்வு செய்யாமல், பாடுபடுவது எதற்கு; பாடாய்ப் படுத்துவதும் எதற்கு; பிந்தி பிந்தி போனாலும், பிடிவாதம் பிடித்தாலும்; பந்தியிலே முந்தி உண்டு எழுந்து போன கூட்டம்போல், புவியை விட்டுப் போக பூத உடல் தவி தவிக்குது; வந்து போகும் வழிப்போக்கன் நாம், தந்து போக வேண்டியது தர்மம் ஒன்று தான், அறவழியை அடைவதை விட்டு மானிடா, மன வலியுடன் மறவழியைத் தேடுவது எதற்கு; துடிக்கும் சோகம் இருக்க நடிப்பு எதற்கு; தடையம் இல்லாது போகும் மனிதா, தடுமாற்றம் தான் எதற்கு; சிந்திச் சிந்தி வாழ்ந்த உடம்பு சீழ்பிடித்தே சீரழியிது, சப்தம் அடங்கி விட்டால் சடலமடா; நித்தம் நித்தம் சிந்தித்து நிதானத்தைக் கடைபிடித்து சீர்பெறு மனிதா.

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media