ஊன்றி வளர்ந்த ஆணி வேர்; உயிர் நாடியே ஆணி வேர்; ஊட்டமாய் செடி வளர ஊன்ற வேண்டும் ஆணி வேர்; உயர்ந்து ஓங்கி வளர்ந்து, மரத்தை தாங்க ஆழமாய் ஊன்றிப் பற்ற வேண்டும் ஆணிவேர்; ஆணுக்கு பெண் ஆணிவேர்; ஆசைக்கு மோகமே ஆணிவேர்; அன்புக்கு பாசமே ஆணிவேர்; அறியாமையே துன்பத்தின் ஆணிவேர்; அறுக்க முடியாத பந்தமே உறவின் ஆணிவேர்; பொறுக்கமுடியாத சினமே கோபத்தின் அணிவேர்; மறுக்கமுடியாத நினைவுகளே ஏக்கத்தின் ஆணிவேர்; மறைக்கத்தூண்டிம் தவறுகளே குற்றங்களின் ஆணிவேர்; மறக்காமல் தொடரும் பாசங்களே உறவின் ஆணிவேர்; மறைந்து புதைந்து கிடக்கும் ஆணிவேரே மலைபோல் உயர்ந்து நிற்கும் மரத்தின் ஆதாரம்; நம்பிக்கையே ஊட்டம் என்னும் ஆணிவேர்; விடாத முயற்சியே வெற்றிக்கு ஆணிவேர்; மாறாத தாய்மையே பெண்மையின் ஆணிவேர்; மனம் உவந்து செய்யும் தியாகமே தர்மம் என்னும் ஆணிவேர்; முதியோர்கள் கூட்டுக் குடும்பத்தின் ஆணிவேர்; முனைப்பு துவக்கத்தின் ஆணிவேர் பிணைப்பு இணைப்பின் ஆணிவேர் அயனியமாம் மனித ஆற்றலுக்கு அறிவே ஆணிவேர்; உறவுக்கு பாசம் தான் ஆணி வேர்; உடம்புக்கு உயிர் தான் ஆணிவேர்; மரத்தின் ஆணிவேர் போன்று மறத்திற்கு (பத்துப் பண்புகள் - தீரம், வீரம், சினம், சீற்றம், வலிமை, ஆற்றல், வெற்றி, அமர், அழித்தல், கொல்லல்) அறமே ஆணிவேர்; மனதிலும் ஊன்ற வேண்டும் கருணை கண்ணியம், அன்பு பண்பு மாண்பு என்னும் ஆணிவேர்; வாழ்வோம் என்ற நம்பிக்கையே வாழ்க்கையின் ஆணிவேர்; வேருக்கு ஆதாரம் மண்; வேதனைக்கு ஆதரவு ஆறுதல்; பொறுமைக்கு ஆதாரம் அடக்கம் பொறாமைக்கு ஆதாரம் வஞ்சினம் வயிற்றெரிச்சல். காட்டுக்கு வேலியில்லை; கவலைக்கு அணையில்லை; கண்ணீருக்கு தடுப்பில்லை; நெருப்புக்கு நீர் உறவாவதில்லை; நீருக்கு வேர் இல்லை; நிலையாமை பொய்பதில்லை; முதுமை இளமையாவதில்லை எனவே; வேராய் இரு வேர்வை சிந்து; விழுதாய் இரு; விழாமல் இரு; தடுமாறாமல் இரு; தடுக்கி விழாமல் இரு; விழுந்தபின் விசனம் (கவலை) வேண்டாம்; வேர்போன்று மனம் என்னும் மண்ணில் நற்செயல்களால் நற்பண்புகளால் ஊற்றிடு; நம்பிக்கையே மனிதனின் ஆணிவேர்; நன்றாய் மனதில் ஊன்றற்றும் நம்பிக்கை என்னும் ஆணிவேர்; மனிதாபிமானம் என்ற ஆணிவேர் மண்ணில் ஊன்றாது; மனதில் ஊன்றாவிடின் மக்கள் இனமே மக்கிவிடும்; ஒவ்வொரு மனிதன் மனதில் நன்கு ஊன்ற வேண்டும், பிடிப்பு என்னும் ஆணிவேர்; விதைத்து வந்த ஆணிவேர்; வித்தாகி விருட்சமாய் வளர்ந்த ஆணிவேர்; மனித இனம் தலைத்திட விதைக்க வேண்டும், தூய எண்ணம் தூய்மையான செயல் தாய்மை போன்ற பாசத்தை; கடமை கனிவு கண்ணியம் மன்னியம் என்ற சல்லி வேர்கள் விரிந்து படரட்டும், பக்கவேராய் நேசம் பாசம் நிதானம் விரிந்து படர்ந்து வளர்ந்து சமுதாயத்தில் மனிதநேயம் மண்டட்டும்; மக்கள் மாக்களாய் மாறாதிருக்க, அன்பென்னும் ஆணிவேரை சமுதாயத்தில் ஆழமாய் படர[வ] விடுவோம்; தேசம் என்ற ஆலமரம் வளர்ந்தோங்கி நிற்க தேசபக்தி என்னும் ஆணிவேரை ஊன்றுவோம்; நேசம் என்ற பாசம் பற்றட்டும்; பூத்துக் குலுங்கட்டும் அன்பு பூக்கள்; சுதந்திர வாசத்தை பரப்பட்டும்; புதைந்து கிடக்கும் மனித நேயத்தை புரிந்து கொள்ள பழகிடுவோம்; பணிவு கருணை இரக்கம் தியாகம் உதவி என்னும் நற்கனிகள், காய்கட்டும் மனிதம் என்ற மரத்திலே; நாறாய் பிரிந்து பிரிந்து போகாது, பிடிவாதம் பிடிக்காது பிண்ணிக்கிடக்கும் வேராய் இரு; வேண்டியதை பிறர்க்கு செய்திட முன் வந்திடு; புதிய வேர்களாய் பிறந்திடு, புரிந்து வாழ்ந்திடு; புதுமை பல செய்து விடு; சேதாரம் ஆகாது ஆதாரமாய் இரு; ஆதரவாய் இரு, அரவணைத்து போய்விடு; ஆணிவேர் போன்று உதாரணமாய் இரு, உறுதியான ஆணிவேராய் இருந்து மண்ணை மனித இனத்தை காத்திடு. அதிகாலை வணக்கத்தைக் கூறும் அன்பன் அ. முத்துவேழப்பன். .
Chennai, Tamil Nadu, India.