Blog

போகிப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 14/01/2024
  • Category: others
  • Views: 107
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

போக்கிடு பழைமையையும் பகையையும் போகியன்று; தீய குணத்தை தீயால் எரித்துவிடுவோம்; தீண்டாமையை விட்டு விடுவோம்; தீதை விரட்டிவிடுவோம்; தீங்கு செய்யாது இருந்து திருந்தி வாழ்ந்திடுவோம்; வேண்டாமையை வேரோடு அறுத்து விடுவோம்; வேண்டாததை கழித்துவிடுவோம்; வேறுபாடு இன்றி வாழ்ந்திடுவோம்; பழியை சுமக்காது, பாவத்தை செய்யாது இருந்திடுவோம்; பகைமை மூட்டும் வெஞ்சினம் கோபம் வெறுப்பு பொறாமையை கொழுத்திவிடுவோம்; மடமையை ஒதுக்கிவிடுவோம்; நல் கடமையை செய்ய புறப்பட்டு விடுவோம்; சோகங்களை துடைத்துவிடுவோம்; சோர்வை நீக்கிடுவோம்; அறியாமையெனும் இருள் அகன்று போக, நம்பிக்கையெனும் விளக்கை ஏற்றிடுவோம்; மாண்புடன் மானத்தை காத்திடுவோம்; மரியாதையுடன் வாழ்ந்திடுவோம்; தீயவைகளை தீயில் இட்டு எரித்திடுவோம்; போக்கியாம் போகியை தீமைகளை போக்கிடவே புது பொழிவுடன் பொது உடமைக் கொள்கையுடன் வழிபடுவோம்; மனவீட்டில் ; மண்டி இருக்கும் குப்பையையும் நம்வீட்டில் தேங்கியிருக்கும் கும்பையையும் துடைத்து; அசிங்கத்தை, அருவருப்பை, அவமானத்தையும் எரித்திடுவோம்; அன்பாய் ஒன்று கூடி வாழ்ந்திடுவோம்; அழகாய் புதுவர்ணங்கள் பூசி; தூய்மையாக்குவோம் மனதையும் மனையையும், போகி அன்று போக்கிடுவோம் வேண்டாத பழமைதனை; வாழ்வில் நிதானம் தவறாது இருக்க வாழ்வியலை புனிதப்படுத்த வைகறைவிடியலில் நிலைப் பொங்கல் நிகழ்த்துவோம்; மனக்கசப்புகள், வேண்டாத தீய எண்ணங்களை விரட்டுவோம்; வாழ்க வளர்க நட்பும் நன் நேசமும் வையகத்தில்; நல்ல தேசத்தை உருவாக்குவோம்; உய்க்கும் உலகை சொர்க்க பூமியாக்குவோம்; சொந்த பந்தத்துடன் கூடி வாழ்வோம்; சொத்தாய் அன்பை பெருக்குவோம்; பழையவற்றையும் பயனற்றவையையும் பழுதாய் போனவற்றையும் பகுத்தறிவு கொண்டு விரட்டிடுவோம்; பாழும் சினத்தையும் பகையையும் எரித்து புதிய நட்பையும் தேடுவோம்; புவி இருக்கும் வரையும் புவிதாண்டியும் வாழட்டும் தமிழ் இனம் மணக்கட்டும் எங்கும் தமிழ் மணம்; புறப்படுவோம் புதுமை படைக்க; புத்தெழிச்சுடன் புவியை காக்க; போகம் மெனும் உவகை மகிழ்ச்சி பொங்கி வர இந்திரனுக்கு நன்றி கூறி; இதயத்தில் என்றென்றும் அன்பு மழை பொழிய, இனிதாய் போகியை கொண்டாடுவோம்; மங்கள விடியலன்று போகிப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் அன்புள்ளங்களுக்கு அ. முத்துவேழப்பன்

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media