தாய் தமிழை வணங்கிடு; தலை நிமிர்ந்து நின்றிடு; தமிழில் தாழாட்டு பாடிடு; தமிழா தமிழில் பாடியே சோறு ஊட்டிடு; தழைத்தோங்கும் தமிழ் நமது தமிழனின் இனமது; தை பிறந்தால் வழிபிறக்கும் மறவாது இருந்திடு; ஏரும் நீரும் உழவும் இல்லை என்றால் ஊர் இல்லை; ஊருக்குள் வாழ நாதி இல்லை; ஏருக்கு நிகர் எதுவும் இல்லை; ஏந்திய கரங்கள் இல்லையது ஓங்கிய கரங்கள்; தூக்கியகரங்கள். உழவு இல்லை என்றால் உணவில்லை; உழவன் இல்லை என்றால் உலகில்லை; கொழு பிடித்த கரண்களை தொழுதிடு; உலகத்தின் உயிர்நாடி உழவென்றால் மிகையில்லை! உழவனைப்போல் உழைக்கும் வர்க்கம் உலகினிலே வேறில்லை விலகிச் செல்லாது, உழவர்த் திருநாளில் கொத்துக் கொத்தாய் மாவிலை இஞ்சி மஞ்சல் தோரணத்தை வீட்டுவாயிலில் தொங்கவிடு; வாசலில் கோலமிடு; புத்தாடை அணிந்து, பசும்பாலில் உலை வைத்து அதில்புத்தரிசி புது வெல்லம் இட்டு பொங்கும் தருணத்தில் வாயால் குலவை போட்டு தீம் கரும்பை வைத்து தலை வாழை இலை இட்டு; முத்துப்போல் கதிரவனும் முந்தியே வந்து மூடுபனிமேல் இளங்கதிரை தூவுகின்றபோது விளக்கேற்றி மரபு காத்து மண்ணில் விழுந்து வணங்கிடு; எழுந்திடு எழுச்சிபெறு; கொடி கட்டிப் பறக்கட்டும் தமிழன் மரபு தமிழனின் பாரம்பரியம்; கொழுபிடித்த உழவனை வாழ்த்திடு; பொங்கலோப் பொங்கல் என்றே பொங்கல் திருநாளை கூவியே கொண்டாடிடு வாழவைத்த இந்த ஆதியும் அந்தமுமான ஆதவனை வணங்கிடு. தமிழனின் பொங்கல் இது தனித்து நிற்காது தமிழனாய் ஒன்றுபடு; கன்னித் தமிழை வணங்கிடு; கண்ணியமாக வாழ்ந்திடு; உழவனின் நண்பன் காளைக்கும் விழா எடுத்திடு; கன்னியர்கள் காளையர்கள் ஒன்று கூடி உலகம் உய்யும் வரை உழவு இருக்கும் வரை கழவுபோகாது பண்டு தமிழ் மரபும் பண்பாடும் என்றே கன்னித் தமிழால் பாடிடு; தைரியமாக நீயும் நடந்து காட்டு; தமிழுக்கு நீயும் தொண்டாற்று; தமிழா நீயும் உழவுக்கு உயிர் ஊட்டு; உழவன் கரங்கள் உயர்ந்திட வழிகாட்டு தரணிக்கே உணவு ஊட்டிய கரங்களது களவு போக வேண்டாம் நமது உழவு என்றே தொழுதிடு. விளை நிலங்கள் விலை நிலங்களாய் மாறாது இருக்கவே சபம் எடுத்திடு; உழவுக்கு உதவும் கதிரவனை விழுந்தே தொழுதிடு; வழிவிடு , வம்பெதற்கு என்று விலகிச்செல்லாது விவசாயத்தையும் விளைநிலத்தையும் காத்திட வந்திடு; விடை கொடுத்திடு வர்க்கப் போராட்டத்திற்கு; விதைத்திடு மனித நேயத்தை, விடியும் பொழும் தமிழிலே என்றே பாடிடு; தமிழனாய்வாழ விழா எடுத்திடு உழவுக்கு; பொங்கட்டும் அன்பு; தங்கட்டும் தமிழன் பண்பு; தாங்கட்டும் உழவன் கரங்கள் இந்த தரணியை; தங்கட்டும் உள்ளத்திலும் இல்லத்திலும் என்றென்றும் மகிழ்ச்சி; வடக்குப் பயணத்தைத் துவங்கும் கதிரவனை வாழ்த்தி வழி அனுப்பி வைத்திடு; உழவர்த் திருநாளை உலகத் திருநாளாய் கொண்டாடிடுவோம் வாழ்க தமிழ்; வாழ்க தன்மானத் தமிழன் ; தழைக்கட்டும் தமிழன் மரபு; வளரட்டும் தமிழால் தமிழன் உறவு. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அன்பன். அ. முத்துவேழப்பன்
Chennai, Tamil Nadu, India.