Blog

நடமாடும் தள்ளு வண்டி

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 15/01/2024
  • Category: valkkai
  • Views: 108
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

நடமாடும் மிட்டாய் வண்டி, நாலு கால் சக்கர வண்டி; நம்மைத்தேடி வரும் நடமாடும் வண்டி; எரிபொருள் இல்லாமல் எல்லா இடமும் சுத்திவரும் ஏழையின் வண்டி; பலகாரங்கள் பல சுமக்கும் வண்டி; பல பலன்னு இருக்கும் வண்டி; பசிய போக்க வந்த பாசக்கார வண்டி; தேன் மிட்டாய்,தேனடை, சீரணி மிட்டாய், அதுரசம் பூந்தி, லட்டு, ஜிலேபி ,மைசூர் பா, பாதுஸா பால் பன்னு, பாதாம் அல்லா, பால்கோவா என்று பல இனிப்பு பண்டங்களையும் பலகாரங்களையும் சுமந்து வரும் வண்டி; மணியடித்தே வரும் வண்டி; மனதைக் கவரும் வண்டி; மகிழ்ச்சியாய் கூட்டத்தைக் கூட்டும் வண்டி; பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்திலே பலகாரத்தை எல்லாம் பல பலன்னு ஜொலி ஜொலிக்கவைத்து வந்த வண்டி; ஊரெல்லாம் சுற்றிவரும் உறவுக்கார வண்டி; உந்தித் தள்ளி உந்தித்தள்ளி காலையே கெந்த வைக்கும் இந்த வண்டி; மாலை வந்தாலே மட மட என்று ஓடிவரும் வண்டி; ஏழைக்கு உவந்த வண்டி; வேண்டியதை விரும்பி வாங்கலாம்; வேறுபாட்டை நீக்கலாம்; ஒண்ணோ இரண்டோ கூட வாங்கலாம்; கல கலண்ணு சிரிச்சி பேசியே தின்னலாம்; பொடி நடையா வருபர்கள் பொட்டலத்தில் நிரப்பி வாங்கிப் போகும் வண்டி; வாங்கும் இனிப்பு பலகாரத்திற்கு அச்சாரமாய் இரண்டு மூன்று சேவையும் பரிசா வாங்கலாம்; தின்னு பார்த்து திருத்தியாய் இருந்தா திரும்ப வாங்கிப்போகலாம்; தின்பண்டங்களை சுமந்து வரும் ஒயிலான வண்டி, வேடிக்கை பார்க்கும் கூட்டமும் உண்டு; வாடிக்கைக் காரராய் இருந்தால் பத்தாத காசை பக்குவமாய் நாளைக்கு வந்தும் தரலாம்; நடமாடும் தள்ளு வண்டி நடனமாடுது , எங்க தெருவுபக்கம் வந்தே இந்த வண்டி. விளம்பரம் இல்லாமல் வியாபாரம் செய்யும் வண்டி; விருந்து படைக்கவே விரு விருன்னு வரும் வண்டி; வருமானம் பெரிதாய் கிடைக்காது என்றாலும் அவமானம் இன்றி வாழவும், வறுமையை போக்க வந்த வண்டி ஏழை எளியவர்களின் வாழ்வாதாரத்தின் ஆதாரமே இந்த தள்ளு வண்டி; சேதாரம் இல்லாத வண்டி; நாகரீக ஒட்டத்திலே நம்மவிட்டு ஓட்டம் எடுத்து மாயமாய் மறைந்த வண்டி மதபேதம் இன்றி மக்கள் கூடி வாங்கி மகிழும் நடமாடும் போஜனசாலையே இந்த தள்ளுவண்டி வியாபாராம். அ. முத்துவேழப்பன்

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media