Blog

காதலித்துப் பார்

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 15/01/2024
  • Category: kadhal
  • Views: 160
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

காதலித்துப் பார்! முள்ளும் மலராகும்; கல்லிலும் ரோசாபூக்கும்; காலையில் நட்சத்திரம் மினு மினுக்குவது தெரியும்; வடிக்கும் நிலவு உன்னருகில் வந்தது வட்டமுகத்தைக் காட்டுவது போன்று தோன்றும்; மேகம் கூந்தலாய் தெரியும்; மோகம் குழாவும்; பார்க்கும் முகம் எல்லாம் உன்னவளாய் தெரியும்; பட்டாம்பூச்சி உன் கண்ணுக்குள் பறக்கும்; வண்ண தேவதை உன் முன் வந்து விளையாடுவது போன்று தோன்றும்; பேச மறப்பாய் பிறருடன் பேசுவதையே வெறுப்பாய் பேச்சில் பிடிப்ப இருக்காது உன்னவளுடனையே பேசிடத் துடிப்பாய் உன் கரங்களை யாரோ பற்றுவது போல் தெரியும்; உன் நினைப்பு உன்னையே பொசுக்கும்; நிற்கும் இடம் தக தகக்கும்; நீ நடக்காமல் மிதப்பது போன்று தோன்றும்; வானத்து நட்சத்திரங்கள் உன் வீட்டு வாயிலில் வந்து தோரணமாய் தொங்குவது போன்று இருக்கும்; வா வா என்று உன்னை யாரோ அழைப்பது போன்று இருக்கும்; கழுதையின் குரல் சங்கீதமாய் இருக்கும்; அண்டங்காக்காவும் மயிலாய் தெரியும்; பாம்பும் மாலையாய் தெரியும்; தீயை தாவி பிடிக்க நினைப்பாய் தீராத வாட்டம் வந்தே வதைக்கும்; சுட்ட உடன் ஆ என்று கத்துவாய், அவள் பெயரைச் சொல்லியே பதறுவாய்; தாமரை உன் வீட்டு முன் கட்டாந்தறையில் மலர்வது போல் இருக்கும்; தாவி தாவி வந்து உன்னை யாரோ அணைப்பது போல் இருக்கும்; உண்ண மறந்திடுவாய்; உடுத்த மறந்திடுவாய்; உறக்கம் வராது தவிப்பாய்; காதலித்துப் பார்! கண்கள் இருட்டுவது போல் தெரியும். காமம் கொப்பளிக்கும்; மோகம் உச்சந்தலைக்கு ஏறும்; கால்கள் தரையில் படாது காற்றிலே மிதப்பாய்; கனவு உலகில் தவிப்பாய் காயம் இல்லாது இதயத்தில் வலி எடுக்கும்; காதலித்துப்பார்! உடல் நடுங்கும்; உள்ளத்தில் ஊரல் எடுக்கும்; உள்ளுக்குள் ஆயிரம் தேடல்கள் ஓடும்; உலாத்தும் இந்த இதயம்; காதலித்துப் பார்! காயம் கூட வலிக்காதுஇ காதல் புளிக்காதுஇ கசப்பும் இனிப்பாகும்; கசங்கிய சட்டையும் உனக்கு அழகாய் தெரியும்; காதலித்துப் பார் தெக்கத்திய காத்தும் கனக்கும்; பச்சத்தண்ணீரும் சுடும்; பார்வை மங்கும் தேனூற்றாய் சுறக்கும் ஆசைகள்; இதயத்தை கொத்தியே எடுக்கும் நினைவுகள்; பொத்தியே படுக்கத் தோனும்; உறக்கத்தைக் கெடுக்கும்; உறக்கப் பேச மறுக்கும்; இரவெல்லாம் பகலாகும்; இதயம் பலம் இழக்கும்; இருப்பது எல்லாம் இல்லாதது போல் தோன்றும்; உன்னுள் சிரிப்பு வரும்; உன்கரங்கலே தேடும்; தனிமை முள்ளாய் குத்தும்; பஞ்சு மெத்தையும் முள்மெத்தையாகும்; பசியே எடுக்காதுஇ பசலை பூக்கும் உடம்பு தடுமாற்றமே தவவலியாகும்; கால்கள் பின்னும்; கண்கள் தேடும்; நடமாடும் பிணமாவாய்; மணித்துளிகள் கூட மரணத்துளிகள் ஆகும் வாய் குழரும்; வார்த்தைகள் திரும்பி திரும்பி ஒன்றையே கூறும்; வாலிபமே வலக்காடும்; நகக் கண்களை கடித்தே கடித்தே ஆ என்று பதறுவாய்; சட்டையில் பித்தானை மாற்றிப் போடுவாய்; நீ நீயாக இருக்க மாட்டாய்; நிதானம் தடுமாறுவாய்; எதிலும் அவனுக்கு அவள் முகமும்; அவளுக்கு அவன் முகமும் தெரியும்; அவன் இவளாவாள்; இவள் அவனாவான்; உண்ண வந்த கரங்கள் உணவை எடுக்காது; தட்டில் சோற்றை கிளருவாய்; ரசத்தில் மோரை ஊற்றுவாய்; அவளை நினைத்து விக்கல் எடுப்பாய்; ஏக்கம் தான் ஏக்கம் தான்; எதை எடுத்தாலும் ஏமாற்றம் தான்; எதார்த்தத்தை மறப்பாய்; எதை எடுத்தாலும் அவளுக்காக எடுத்து வைப்பாய்; உடையை போடக்கூட உடன் படாது உன் கரங்கள்; குடிக்கும் டம்லரில் கூட அவளது முகம் தெரியும்; குளிப்பான் சோப்புப் போட மறப்பான்; குனிவாள் நிமிர மறப்பாள்; குழாய் நீர் ஓடும் அவனாய் சிரிப்பான்; இவளோ குளித்து விட்டு உள்ளாடையைக் கூட உடுத்த மறப்பாள்; திடு திடு என்று ஓடிவருவாள்; வெட்கம் வந்து அவளை வாட்டும்; வெல்லக் கட்டியாய் ஆசைகள் இனிக்கும்; கண்ணாடி முன் நின்று ஏதோ யோசிப்பாள் சீப்பை சிகையிலேயே வைத்துவிட்டுத் தேடுவாள்; நீண்ட நேரம் யாரேனும் கூப்பிட்டாலும் சிலையாய் நிற்பாள்; ஊ ஊ என்று வார்த்தையைக் கொட்டுவாள்; உன்னையைத் தாண்டி என்று உழுக்கியவுடன்இ ஊ ஊ என்ன என்ன சொன்னீர் என்பாள்; இதாவேண்டும் அதா வேண்டும் என்றே புலம்புவாள்; கோனிய பொட்டில் கோலம் போடுவாள்; மைதீட்டுவதற்கு மசியை எடுப்பாள், மறந்து மறந்து போவாள்; முகத்திற்கு முப்பது முறை பவுடர் அடிப்பாள்; இவனோ துணிகளை மாற்றி மாற்றி போட்டு, அடுக்கிய துணிகளை களைத்து வாரி இறைப்பான்; இவளோ போட்ட துணியையே மீண்டும் மீண்டும் போட்டு விட்டு, என்ன வென்று கேட்டாள், உடை பத்தவில்லை என்று பச்சபொய் கூறுவாள்; சிறிது நேரம் தாமதித்தாலும் சிடு சிடு என்பாள்; இவனோ நேரத்தைப் பார்த்தே கடு கடுப்பான்; இவளோ நடுராத்திரியில் எழுந்து குளிப்பாள்; காதலித்துப் பார்; நடு இரவிலும் சூரியன் உதித்தது போன்று தோன்றும்; நல்லிரவும் அந்திப் பொழுதாகும்; அந்த வானில் பவனி வருவது போல் கனவு வரும்; யாரும் இல்லா மாயதேசத்தில் மறுபிறவி எடுத்த நினைப்பு வரும்; உனக்குள் கவிதை படிப்பாய்; படிக்க பிடிக்காது; பிடிக்க வலுக்குவாய்; பிடி தளரும்; பிடிவாதம் பிடிப்பாய் காலையில் எழுந்த உடன் கைபேசியைத் தேடுவாய் காதலித்துப்பார் ! நடு சாமத்தில் பல் துளக்குவாய் தலையணையே தவிக்கும் தறையில் விழுந்து கிடப்பாய்; புறண்டு புறண்டு படுத்தாலும் உறக்கம் வராது; எதையும் கவனிக்க மாட்டாய்; எதிரில் யார் வருகின்றார்கள் என்பது கூட தெரியாது மோதுவாய்; பள்ளத்தில் காலை வைத்து தடுமாறுவாய்; பாதை மாறுவாய்; பயணித்தாலும் உன் உயிர் உன் உடலைவிடு எங்கோ ஓடும்; காதலித்துப் பார்! இதய ஓட்டம் துடி துடிக்கும்; இரத்த ஓட்டம் கொதி கொதிக்கும்; உன் கண்கள் நடிக்கும்; உலருவாய்; உருலுவாய்; உரு தெரியாது உருகிடுவாய்; மேனி சிலிக்கும்; மெய் மறப்பாய்; மெய்யெல்லாம் பொய்யாய் தெரியும்; இட்டிலியை வடை என்பாய்; வடையை வட்டிலைவிட்டு தரையில் தேடுவாய்; எதற்காக ஓடுகின்றாய்; எதை தேடுகின்றாய் என்றே தெரியாது; புதிய உலகில் உலாவுவாய்; கடல் அலைகள் கூட மௌனமாகத் தெரியும்; மழையின் தூரல் கூட உனக்கு பூவைத் தூவுவதாக தெரியும்; நனைவாய் மோக மழையில் நனைவாய்; மோதியபின் நினைப்பாய்; உன் நரம்பே வீணை வாசிக்கும்; நாடித்துடிப்பும் அடிக்காதது போல் தவி தவிப்பாய்; உன்னுள் அவள் உறங்குவது போல் பரிதவிப்பாய்; ஆசைகள் பாடம் படிக்கும்இ அந்தரங்கள் மந்திரம் சொல்லும்; அட மழைதான் உன்னுள்: அடங்காத மோகம் தான் உனக்குள்; காதலித்துப் பார்! பார்ப்பதையெல்லாம் அவளுக்காக வாங்க நினைப்பாய்; சிறு சிறு பரிசுகளையும் சித்தரிப்பாய்; அவள் தந்தது அவள் தந்தது; அன்று தந்தது அன்று உண்டபோது பெற்றது; என்றே பிதற்றுவாய்; வார்த்தைக்கு வார்த்தை அவளது பெயரை கூறுவாய்; வாய்விட்டு பைத்தியம் போல் சிரிப்பாய்; அவள் இல்லாது வாழ்க்கையேது என்று தவிப்பாய்; அவளோ உன்னையே நினைத்து உருகுவாள்; ஒரு ரோசாப்பூவுக்காக இலகுவாள்; ஒன்றும் எடுத்துச் செல்லவில்லை என்றாள் சினுங்குவாள்; கோயிலுக்கு உன்னுடன் போக நினைப்பாள்; கைகோத்து தெரிவீதியில் நடக்க துடிப்பாள்; நீ தோளில் கையைப் போட்டுவிட்டாள் தோற்றே போய்விடுவாள்; பெண்மையை வடிப்பாள்; பேர் இன்பம் கொள்வாள்; பெய்யும் அடைமழையாய் சொல சொல என்றே பேசிக்கொண்டே இருப்பாள்; என்ன தான் அப்படி பேசுவாளோ; எங்கிருந்து தான் அத்தனை வார்த்கைள் வந்ததோ; அகராதியைத் தான் தேட வேண்டும்; அடங்காத ஆசைக்குள் ஆடை உடுத்துவாள்; உதடுகள் தவிக்கும்; உள்ளம் துடிக்கும்; ஊ ஊ என்றே நீ பேச ஆரம்பித்த உடன் ஊ கொட்டுவாள்; ஊல்லாசப் பறவையாய் உலகையே சுற்றி வர நினைப்பாள்; காதலித்துப் பார்! காமம் கண்ணை மறைக்கும் காதல் உன்னை வளைத்து போடும் நீ நீயாக இருக்க மாட்டாய்; நிதானம் தடுமாறுவாய். அன்பன் அ. முத்துவேழப்பன் .

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media