பாருக்குள்ளே எங்கள் நாடு; பழம் பெருமை கொண்ட பழமையான பாரத நாடு; . இந்திய நாடு அது எங்கள் நாடு; அது எங்கள் இதயக்கூடு; ஏமாற்றுபவனே எழுந்து ஓடு; . இந்திய நாடு ; எங்கள் தாய்வீடு; உருகும் பாசத்தை உள்ளத்தில் வைத்திடுவோம்; உருகுலைக்க நினைத்தால் உயிரையும் கொடுத்து காத்திடுவோம்; என் நாட்டிற்கு ஏதேனும் ஒன்று என்றால் உயிரையும் கொடுக்க தயங்க மாட்டோம்; உதவாக்கறையே நீ எட்டியே ஓடு; எங்கள் நாடு; அன்புத் தென்றல் உலாவிடும் வசந்தக் காடு; நாடு நாடு; மனித நேயத்தை நாடு; நாடு நாடு நாடு இது எங்கள் அமைதி குடி கொண்டிருக்கும் அன்பு பூக்காடு; மன்னியத்தை மறந்தால் கேடு கேடு; ஓடு ஓடு ஒற்றுமையை குலைக்க நினைத்தால் ஓடு ஓடு ; நாடு நாடு இது எங்கள் நாடு; அன்னையர் கோடி கூடியே அன்பைச் சொரிந்திடும் நாடு; இந்தியர் நாங்களடா இது எங்கள் தேசமென்றே இறுமாப்பு கொள்வோமடா; அன்பால் மனித பண்பால் சகோதரத்துவத்தால் இணைந்த கரங்களடா; விண்ணில் தாரைகளும் விழுதாய் விழுந்தே வடித்திடும் எங்கள் நாட்டில்; அன்னல் காந்தியின் அறவழில் வந்தேமாதிரம் என்றே முழங்கி அந்நியர்களை விரட்டிய நாடு; எங்கள் நாட்டிற்கு எந்த நாடு பெரியது; சிந்திய இரத்தமும், எங்கள் பெண்டியரின் நெற்றியில் பொட்டாய் தங்கும். பழம் பெரும் நாடு, பண்பாடும் கலாச்சாராமும் பெருக்கெடுத்து ஓடும் நாடு; பல கோடி மக்கள் வாழும் நாடு. பலநூறு மொழிகள் பேசிடும் நாடு பற்பல அதிசயங்கள் நிறைந்த நாடு; பாரம்பரியம் நிறைந்தநாடு; பழம்பெரும் பாரதநாடு; பாருக்குள்ளே எங்கள் நாடு; பார்த்திட வியக்க வைக்கும் நாடு; ஞாலத்தில் சிறந்த நாடு; ஞானியர்கள் பலர் பிறந்தநாடு. காற்றும் நல் கருமேகமும் கூடியே வந்து விளையாடும் நாடு; சுற்றிடும் மேகங்கள் சூழ் கொண்டமேகங்கள் நின்றாடி கொண்டாடி தாகம் தீற்க, கழனி செழிக்க வான் மழை பொழியும் எம் நாடு, இது வளமான இந்திய நாடு; மதிப்பும் மகத்துவமும் நிறைந்த நாடு; மரியாதைக்கு குறைவில்லாத நாடு; பாரம்பரியம் நிறைந்த நாடு, பவித்திரம் நிறைந்த நாடு, பழமையான புனித நாடு; பற் பல கலாச்சாரங்களை தூய ஆடையாய் கொண்ட நாடு; பக்திபரவசம் நிறைந்த நாடு; மதம் பல, மரபு கலாச்சாரம் பல, மதச் சடங்குகள் பல பார்த்த நாடு. அகம் பல கண்ட நாடு. ஆன்மீகம் அறம் நிறைந்தோடும் நாடு; அன்பு அறம் ஆன்மீகத்தை உலகிற்கு போதிக்கும் போதக நாடு; போதும் போதும் என்ற அளவிற்கு பாசம் பொங்கி வழிந்தோடும் நாடு; மானமே பெரிதென்று நினைக்கும் நாடு; மண்வாசைன நிறைந்த நாடு; விண்தொடும் இமயமும், விரிந்த கடலையும் எல்லையாகக் கொண்ட நாடு; இந்து கங்கையும் பிரம்மபுத்திரா யமுனையும் சிந்து சபர்மதி மாகி பூர்ணா, நல் கோதாவரியும் மகாநதியும் நர்மதை தபதி மேக்னா முதல் கிருஷ்ணா காவேரி தாமிரபரணி பாரதப்புலா யென்று பழமையான புண்ணிய நதிகள் பாயும் நாடு ; சிறு சிறு நதிகளும் கிளை நதிகளும் கூடியேத் திரியும் நாடு; பாருக்குள்ளே எங்கள் நாடு பசுமையான நாடு. வீரம் நிறைந்த நாடு நல் விவேகம் கொண்ட நாடு; அகம் புறம் என்றே வாழ்வை பிரித்து வாழ்ந்து காட்டிய நாடு; நாகரீகம் பல புதைந்த நாடு; கற்றோர் பலர் வாழும் நாடு; கேள்வி ஞானம் மிகுந்த நாடு; கோவில்கள் பல கொண்ட நாடு; மனைமாச்சியில் சிறந்த நாடு; மானமுள்ள நாடு; மக்களாட்சி தத்தும் கொண்ட மானசீகமான நாடு; யாக சாலைகளையும், நல் பாடசாலைகளையும் கொண்ட நாடு. மூவண்ணக் கொடியைக் கொண்ட நாடு. பச்சை நிறமது பசுமையைச் சொல்லும்; வெள்ளை அது எமது தூய்மையைச் சொல்லும்; சிவப்பு எங்கள் வீரத்தை பறைசாற்றும். வீர மறவர்கள் வாழ்ந்த நாடு; உயிரைத் தியாகம் செய்த எங்கள் இராணுவ வீர இளைஞர்கள் காத்த நாடு. எண்களின் பூஜ்ஜியத்தைக் கண்ட நாடு; பூமியின் சுழற்சியை கணித்த நாடு; கல்விக்கு கண் திறந்தநாடு; நல்ல கலைகள் நிறைந்த நாடு; நன்நாடு பொன்னான நாடு; இது எங்கள் பாரத திரு நாடு; பகைமையே என்னவென்று அறியாத நாடு, புத்தபிரான் பிறந்த நாடு; மருத்துவமும் பல மகத்துவமும், மதங்களும் பிறந்த நாடு; மக்கள் தொகை நிறைந்த நாடு எங்கள் நாடு; வேளாண்மையே முதுகெலும்பாய் கொண்ட நாடு; கனிமங்கள் பல நிறைந்த நாடு; காடு மலையும் நிறைந்த நற்பொன்னாடு; இயற்கை எழில் கொஞ்சும் நாடு, கனியொத்த கன்னியர்கள் கண்ணியமாய் சுதந்திரமாய் வாழும் நாடு; இளைஞர்கள் நிறைந்த நாடு; இளம் தென்றல் வீசிடும் நாடு; இனிதான பாரத நாடு; பலகோடி வருடத்திற்கு முன் பிறந்தநாடு. தலைமுறைகள் தாங்கிய நாடு; நல்லத் தலைவர்கள் வாழ்ந்த திரு நாடு; சமத்துவம் பிறந்த நாடு; நல்ல சம தர்மங்கள் தழைத்தோங்கிய நாடு; வேத நெறி முறைகளைக் கண்ட நாடு; நான்மறை கொண்ட நாடு; என் நாடு பாரில் சிறந்த நாடு; அண்டங்களை அளந்தநாடு; கண்டம் தாண்டி தாக்கிட வினை செய்த நாடு; யுகங்கள் பல கொண்ட நாடு யுத்தங்கள் பல கண்ட நாடு; வீணர்களையும் எதிரிகளையும் விரட்டியே அடித்த நாடு; பஞ்ச சீலக் கொள்கையை கடைபிடித்த நாடு; பாஞ்சாலம் குறிஞ்சி போன்று பல வரலாறு கண்ட நாடு; ஆயிரத்து ஐநூற்று தொண்ணுற்றொன்பது பாஷைகள் உள்ள நாடு அதில் நூற்று இருபத்தி இரண்டு பெரிய மொழிகளை பெருமையாக கொண்ட நாடு; பல ஆயிரம் வருடத்திற்முன் பிறந்த தமிழ் சமஸ்கிருதம் மொழிகள் வந்த நாடு. சாதி பல இருந்தும் பண்பாடு எங்கள் படைவீடு; யுத்தங்கள் பல கண்ட நாடு; யுவதிகள் பலர் வாழும் நாடு. எம்மதமும் சம்மதம் என்றே, சமரச சன்மார்க்க நெறிகளை கடைபிடித்தநாடு. இசை நடனம் நாட்டியம் என்று பல கலைகளைக் கண்ட நாடு; பண்டிகைகள் பல பல கொண்டாடும் நாடு; வழிமுறைகளையும் வாழ்வியல் நெறிமுறைகளையும் கண்ட நாடு; உழவுத் தொழிலை ஆதாரமாகக் கொண்டநாடு; பண்பாடு நிறைந்த நாடு; பணிவோடு பழகும் நாடு; கனிவோடு பேசுவோர் உள்ள நாடு; கண்ணியம் காக்கும் நாடு; மனித நேயத்தை நாடும் நாடு; புண்ணியம் நிறைந்த நாடு; பண்பாளர்கள் நிறைந்த நாடு; பகையே வேண்டாம் என்று நினைக்கும் நாடு; பகுத்தறிவாளர்கள் நிறைந்த நாடு; பயம் என்பதையே அறியாத நாடு; வளம் நிறைந்த நாடு; வன்மம் இல்லாத நாடு; தாய்மை பாசம் தங்கிய நாடு; தூய்மை நிறைந்த நாடு; துடுக்கான துடிப்பான இளைஞர்கள் நிறைந்த நாடு; பாசமும் நேசமும் படர்ந்து இணைந்து பிணைந்து கிடக்கும் நாடு; அன்புச்சகோதர்கள் ஒன்றாய் கூடி ஒற்றுமையாய் வாழும் நாடு; வாய்மை பேசும் அதன் மேன்மையை; தூய்மை பேசும் அதன் புனிதத்தை; தாய்மை பேசும் அதன் தெய்வீகத்தை; தன்னலம் இன்றி தியாகம் நிறைந்த நாடு மதங்கள் பலவானாலும், மார்க்கம் ஒன்றே என தீர்க்கமாய் இருக்கும் நாடு; தியாகங்கள் பல கண்ட நாடு; மாண்பு மிகு நாடு; மனிதாபி மானம் பொங்கி வழியும் பொன் நாடு நன் நாடு; எங்கள் பாரத திரு நாடு; வள்ளல்கள் பிறந்தநாடு; வள்ளுவன் மொழிந்த நாடு; வாழ்வியலில் நெறிமுறைகளை கண்ட நாடு; பொதுமறையாம் வள்ளுவம் பிறந்த நாடு; வானுயர் இமயம் அரணாய் இருக்கும் நாடு; ஞானியர் பலர் பிறந்த நன்நாடு; நற் குடிமக்கள் வாழும் பொன்னான நாடு; நட்பில் சிறந்தநாடு; பெண்களை தெய்வமாய் போற்றும் நாடு; பெண்மைக்கு பெருமை சேர்த்த நாடு; பார் போற்றிட பல தொழில்கள் செய்திடும் நாடு; கல்வி எங்கள் கண்ணடா; கலைகள் எங்கள் உயிரடா; மொழிகள் மூச்சடா; நல்ல நட்பே எங்கள் பேச்சடா; இறையாண்மை கொண்ட நாடடா; இறைமைக்கு தலைவணங்கிய நாடடா. வருடங்கள் ஓடினும், தலைமுறைகள் மாறினும், வந்தே கூறிடுவோம், ஒரே சொல்லாக வந்தே மாதிரம் என்ற தாரகமந்திரத்தை. வந்தே மாதிரம் என்ற வீர முழக்கத்தை; வந்தே மாதரம் என்ற ஒலி, வந்தே எங்கள் ரத்த நாளத்தை நணைத்திடும். நாட்கள் ஓடினினும், மக்கள் மடிந்து மாறிடினும், புற்கள் செடிகள் கொடி மரங்கள் ஆடி அசைந்தே, நாட்டுப்பண் பாடிடும் வந்தே மாதரம் என்ற தாரக மந்திரத்தை; கடல் அலைகள் ஓயாது அடித்து ஆர்பரித்தே ஒலித்திடும் தேசீய கீதத்தை, மரங்கள் அசைந்து இசைத்து இதமான காற்றை அழைத்து வந்து தேச மெங்கும் பாடிடும் எங்கள் நாட்டு பற்றை; பறவைகளும் இசைத்திடும், ஒரே வார்த்தை வந்தே மாதிரம், வந்தே மாதரம். அது எங்கள் வார்த்தை மாத்திரம் அல்ல வந்தே மாதரம் அது எங்கள் உடலில் புகுந்த ஜுவனடா. அ. முத்துவேழப்பன்
Sanjeev Kumar J V
Sanjeev Kumar J V
Chennai, Tamil Nadu, India.