கிழிந்த சட்டை 16.01.2024 பாசமான பழைய சட்டை பல்லை காட்டுது; நைந்து கிழிந்த சட்டை தான் நலிந்தவன் போடும் கிழிந்த சட்டை இது மானத்தை காக்க வந்த சடை இது மனுச சாதியிலே ஏழ சாதி போடும் சட்டையிது வானவீதியில் இரவில் பூத்துக் கிடக்கும் ஓட்டை நட்சத்திரங்களாய், உடம்பில் ஒட்டிக் கிடக்குது ஓட்டையுடன் கிழிந்த சட்டை; போட துணி இல்லாதப் பற்றாக்குறை வாழ்க்கை தான்; பாசமிக்க சட்டை இது பழசாகி பல்லைக் காட்டினாலும் பாசத்தை வடிக்கிது பல நாட்கலாய் உடம்போடு ஒட்டி உறவாடிய கந்தல் சட்டைதான்; வறுமை தந்த ஓட்டைதான்; வயிற்றுப் பிழப்புக்கே போராட்டம் தான்; பாரதியாரே ஓட்டைச் சட்டையை மறைக்க, ஒத்தக் கோட்டை போட்டு சுற்றினாறாம்; சோசலிசம் பேசும் சொக்காதான்; சோகத்தைச் சுமக்கம் சொக்காதான்; பைகிழிந்த சட்டை என்றாலும் பயனுள்ள சட்டைதான். தைத்துப் போட்ட சட்டைதான்; தபால் பெட்டி போன்று ஓட்டை உண்டுதான்; மானத்தை மறைக்க கைகளே உதவுமாம்; ஊசியால் குத்தப்பட்ட ஓட்டை சட்டைதான்; உடம்பை மறைக்க போட்ட ஏழையின் சட்டைதான்; மானத்தை காக்க கிழிசல் சட்டையை போடுது ஒரு கூட்டம் தான்; மானத்தை காட்ட அநாகரீகமாக கிழித்து போடுது சட்டை பேண்டை ஒரு கூட்டம் தான்; கிழித்தே தைத்த இந்த நாகரீக சட்டை ஏழையின் கிழிந்த சட்டையைப் பார்த்து நையாண்டி செய்யிது; தைத்ததை கிழித்தால் மவுசாம்; கிழிந்ததை தைத்தால் பழசாம்; கிழிந்து போன மனசுபோல கிழிந்த துணியும் சோகத்தை சுமக்குது; அனாதை இல்லம் தேடி அழுக்கு மூட்டையாய் இந்த கிழிந்த சட்டை பயணம் செய்யிது; பணக்காரன் சட்டை பட்டு கிழியும் போதுதான் ஏழையின் கிழிந்த சட்டையின் மவுசு தெரிஞ்சதாம்; கந்தல் சட்டை என்று ஏளம் செய்யாதே; கிழித்ததை போட்டால் மனசுக்கு வருத்தம் தான்; கிழித்தே போட்டால் மவுசும் ரவுசும் தான்; சண்டையில் முதலில் கிழிவது சட்டை தான். கீழ்த்தரமான அரசியல் சண்டையில் சட்டையைக் கிழித்தால் மதிப்பு கூடுமாம்; கசங்கினாலும் மனசு கசங்காத ஏழை போடும் கிழிந்த சட்டைதான்; அதன் மவுசு பவுசுக்கார பணக்கார சட்டைக்கு தெரியாதது தான்; கடனை திருப்பி தரவில்லை என்றால் பிடி பட்டு கிழிவது இந்த சட்டை தான். கிழிந்த சட்டை போட்டவனை நலிந்தவன் என்று கீழ்த்தரமாக பேசாதே; நலிந்தவனும் ஒருநாள் நாட்டை ஆள்வான்; கிழிந்த சட்டை என்று தூக்கி போடாதே; பல பயன்பாட்டை கொண்டது தான்; துடைக்க உதவுவது கந்தல் துணிதான்; வள்ளுவர் பாடப் பெருமை பெற்றது இந்த கந்தல் துணி தான்; கந்தையானாாலும் கசக்கி கட்டு என்று பாடிய பெருமை பெற்ற கிழிந்த சட்டை தான்; கந்தையைக் கட்டி வெளியே வந்தால் கண்ணாட்டி; வெள்ளையைக் கட்டி வெளியே வந்தால் வெள்ளாட்டி கந்தையை அவிழ்த்தால் குட்டி வெளிச்சம் தெரியும். கந்தையை அவிழ்த்தால் சிந்தை கலங்கும். என்ற பழமொழிகள் பல உண்டாம் பணநாயக உலகில் ஜனநாயகம் செத்து போய்விட்டதைப் படம் எடுத்துக் காட்டும் இந்த சல்லடைக் கண்ணாய் பொத்தகைகள் பல இருக்கும் இந்தக் கிழிந்த சட்டை அதிகாலை வணக்கத்தைக் கூறும் அன்பன் அ. முத்துவேழப்பன்
Chennai, Tamil Nadu, India.