Blog

யோசித்துப்பார் நேசித்துப் பார் வாசித்துப்பார்

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 17/01/2024
  • Category: valkkai
  • Views: 133
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

யோசித்துப்பார் நேசித்துப் பார் வாசித்துப்பார்; மறப்புலி[வலிமையான] பாய்ச்சலுக்கு முன் மையல் விழி மான் துள்ளி விளையாடுமா ? அறப்பணிக்கு முன் ஆக்கப்பணி வீணாகுமா ? மழலையின் பேச்சிக்கு முன் மணி ஆரம் முத்துப் பவளத்தின் மதிப்புத்தான் கூடுமா ? வேட்டையாட வந்த நாய் முயலிடம் சொல்லி விட்டுத்தான் வேட்டையாடுமா ? மேட்டைப்பார்த்துத்தான் நீர் பாயுமா; மேடையேரினாலும் திக்குவாயன் பேச்சி அரங்கேறுமா ? மெட்டுக்குச் சேராத பாட்டு மெல்லிசைப்பாடலாகுமா ? மொட்டு மலர்ந்தாலும் உதிராது இருக்குமா ? கொட்டு வாங்கினால் மட்டும் தவறு திருந்துமா ? சொட்டும் தேனை பூக்கள் சொந்தம் கொண்டாட முடியுமா ? பட்டும் திருந்தாதவன் படித்துத் திருந்துவானா ? கட்டும் குளிரில் காற்று சுகம்தேடுமா ? பட்டும் திருந்தாத மனிதனிடம் பண்பாடு தேடலாமா ? தட்டும் கைகள் தாளம் போட்டாலும் தடிமாறி நடு நடுங்காமல் இருக்குமா ? மெல்ல வந்த பூனை சொல்லித்தான் பாலைக்குடிக்குமா ? தள்ளி தான் நிற்குமா ? எட்டிப் பார்க்கும் எலி சட்டிப்பானையை உருட்டாமல் இருக்குமா ? மதிகெட்ட ராசாவே எலியைப்பிடிக்க பூனை எட்டுநாள் விரதம் இருக்குமா ? புலி வேட்டைக்கு பூனைபோகுமா? மங்குனி ராசாவே; வயிற்றெரிச்சல் பட்டவன் வாயை வைத்துக்கிட்டு சும்மா இருப்பானா? வக்கணை பேசும் வாய் சும்மா இருக்குமா ? வங்கு புடிச்ச கை சொரியாமல் இருக்குமா ? வம்புக்கு போகும் நாய் வாங்கிக்கட்டாது இருக்குமா ? மண்பானையில் ஆக்கத் தெரியாதவ பொன்பானையில் ஆக்கத்துடித்தாளாம்; வக்கத்த வனுக்கு வப்பாட்டியாம், போக்கத்தவன் பொறுப்ப சுமந்தானாம்; கலகலன்னு சிரிப்பவன் பொல பொலன்னு அழுதானாம்; கவலைப்பட்ட காதுகள்தான் கெட்டதை கேட்காமல் இருக்குமா ? நஞ்சை அமிர்தம் என்று கூறுவர் உளரோ; நெஞ்சை நிமித்தி நடக்காதார் நாலுபேருக்கு நல்லதை செய்ய முன் வருவாரா? நேரத்தை வீணடிப்பவர் நேர்மையாய் நடப்பாரா? சிந்திக்க மறக்காதே மனமே; ஞாயிற்றுக்கு முன் இருளா ! ஞானி பெறாத அருளா ! காது கேட்காத பொய்யா ! கண்கள் பார்க்காத தவறா ! ஊமை கேட்காத அவச்சொல்லா ! உள்ளம் தொடாத இறுக்கமா ! மன இல்லம் சுமக்காத புழுக்கமா ! உண்மைக்குத் தெரியாத பொய்யா உருக்கம் இல்லாத கருணையா ! உறக்கம் இல்லாத அமைதியா ! உயரம் இல்லாத சிகரமா ! உண்மைக்குத் தெரியாத பொய்யா ! வண்டு நாடாத மலரா ! வட்டி போடாத குட்டியா ! தீ இல்லாமல் நெருப்பா ! தீபம் இல்லாமல் ஜோதியா ! தீவட்டி பார்க்காத இருட்டா ! தீண்டாமை என்ன தீட்டா ! வேண்டாமை என்ன வேண்டுதலா ! வேண்டிக்கிடைப்பது அருளா ! தோண்டிக்கிடைப்பது புதையலா ! தாண்டினால் தடுமாறுமா ! நோண்டினால் சினம் சிரிக்குமா ! தூங்கினால் பொழுது விடியுமா ! தயங்கினால் துவக்கம் துவங்குமா ! ஓங்கினால் ஓட்டம் எடுக்காதா ! தும்மினால் துன்பமா துக்கமா ! துடித்தால் வெட்கமா ! துணிந்தால் கோழையா ! நடித்தால் வீரமா ! விம்மினால் ஏக்கம் தீருமா ? அசிங்கத்தைப் பூசி பகட்டு அழகை தேடுவாரா ? அல்லி தடாகத்தில் பூப்பதை விட்டு தரையில் பூக்குமா ? அள்ளித்தின்றவன் அடக்கிக்கிட்டு இருப்பானா ? சொல்லிக்கொடுக்கும் வாய் சும்மா இருக்குமா ? நண்டு வலையில் எலி தங்குமா ? நல்லதை வாய் சொன்னாலும் காது கேட்குமா ? இளமையில் கற்காதப் பாடமா ? முதுமை கற்பிக்காதப் பாடமா ? நந்தவனத்தைத் தாண்டி பூத்த பூக்கள் நறுமணத்தை வீசாதா ? விளக்கு இல்லாமல் வெளிச்சமா? இலக்கு இல்லாத வெற்றியா; வம்பு பேசுபவன் வாயில சனியாம்; வீம்பு பிடிச்சவன் கால்ல சனியாம்; நா வற்றினால் தெரியும் தாகம்; நீர் வற்றினால் தெரியும் வரட்சி; நம் சேமிப்பு வற்றினால் தான் தெரியும் வறுமை: அதிகமாக கண்ணீர் விடும் போது தான் ஆண்டவனைப் பற்றி நினைப்பு வரும்; இறந்த காலத்தை எட்டிப்பார்த்தால் எதிர்காலம் தடுக்கி விடாது: கண்டதையும் கேட்கும் காது பேசாது; வருத்தப்படாத வாய் வறுத்தே எடுக்காது விடுவதில்லை. வெளிச்சத்தில் இருட்டைத்தேடாதே; இல்லாததை நினைத்து இருப்பதை கைவிடாதே: சொல்லாததைச் சொல்லி பொல்லாப்பைத் தேடாதே; சொ (செ)ல்லாததை செய்தால் கோழையா; துடித்தால் வெட்கமா ; நடித்தால் வீரமா ; யாரையும் நம்பி தாரை வார்த்துட்டு செல்லாக் காசாகாதே ; வாயாடினால் பேச்சிப் போட்டியில் வெற்றி பெறலாம் என்று நினைக்காதே ; விதியை வீதியில் தேடாதே ; வீட்டுக்குள் நிம்மதியைத் தொலைக்காதே; மதியை மண்ணில் தேடாதே: மனதை வெளியில் தேடாதே; நீருக்குள் நெருப்பைத் தேடாதே; நிம்மதியைப் பணத்தால் தேடாதே; நிதானத்தைத் தடுமாற்றத்தில் தேடாதே; நியாயத்தை அநியாயத்தில் தேடாதே; நீதியை அநீதியில் தேடாதே ; சுகத்தை சோகத்தில் தேடாதே ; பாதையை பள்ளத்தில் தேடாதே; பாசத்தை வேசத்தில் தேடாதே; பயணத்தை சயனத்தில் தேடாதே; வலியோடு சிரித்தாலும் (வேற) வழி இல்லை என்று சிரிக்காதே; இறங்கும் நேரத்தில் உறங்க நினைக்காதே; இருக்கும் போது இறந்து இறந்து சாகாதே; இலையில் சோற்றை வைத்துக் கொண்டு ஈயைத்தேடிப் போகாதே; உலையில் சோறு இருக்கின்றதே என்று உறங்கப்போகாதே; சிலையில் அழகு இருக்குது என்று சீண்ட நினைக்காதே ; தெய்வீகத்தை சிலையில் தேடுவதை விடுத்து, தெய்வத்தை சிலையில் தேடாதே; தேளுக்கு இரக்கம் காட்டாதே; தேடிவருபவனுக்கு முடிந்த உதவியைச் செய்ய மறக்காதே; மனம், அமைதியை இழக்கும் போது தான் கடவுளைத்தேடும் ; மனம் அமைதியாக இருக்கும் போது தான் கடவுள் தெரியும்; மதிப்பு இல்லாத இடத்தில் மரியாதை தேயும்; தட்டிப்பார்க்க வேண்டிய இடத்தில் முட்டி மோதிப் பார்க்காதே; தட்டிக் கொடுக்க வேண்டிய இடத்தில் தண்டனைக் கொடுக்க நினைக்காதே; தேயும் ஆயுலில் தோசத்தையும், தேடும் ஆசையில் பரிகாரத்தையும் தேடாதே; முடிவை முயற்சி செய்து தேடுவதை விடுத்து, முக்கி முணகாதே; முக்குவதிலும் விக்குவதிலும் வியாதி வந்து சேரும்; வெற்றி பெற ஜோசியத்தைபார்க்காதே; தோல்விக்குப் பின் ஜாதகம் பார்க்காதே; நீர்மேல் எழுத நினைக்காதே; நீந்திப்பழக தரையைத் தேர்ந்தெடுக்காதே; நினைவுகளை அழிக்க நினைக்காதே; நீயா நானா என்று போட்டி போடாதே; ஆயுலை ஆயுல் ரேகையில் தேடாதே; ஆயுதத்தை கையில் ஏந்தி அகிம்சையைத் தேடாதே; ஆதாயத்தைப் மனபையில் ஏந்தி பக்தியைத் தேடாதே ஓடும் ஆற்றில் ஊற்றைத்தேடாதே; தார்மீகத்தை ஆன்மீகத்தில் தேடாதே; ஆண்மிகத்தை அடக்கு முறையில் அடைய நினைக்காதே; இலைகள் அசைகின்றோம் என்று அலுப்பு தட்டியது கிடைகாது; உலைகள் கொதிக்கின்றது என்று கொந்தளித்தது கிடையாது; சிலைகளுக்கு சிரிக்கத்தெரிந்தாலும் சிந்திக்கத் தெரியாது; சிலைகள் நிற்கின்றோமே என்று அழுதது கிடையாது; விரிசலில் வெளிச்சத்தை தேடாதே; நெரிசலில் காற்றைத் தேடாதே; நெருப்பில் குளிரைத்தேடாதே; நெருங்கிய நட்பில் பகையைத்தேடாதே; பலிகொடுத்து பாவத்தை தீர்க்க நினைக்காதே; பலியாட்டிடம் பாசத்தைக் காட்டாதே; புலியிடம் போய் புரட்சிசெய்யாதே; மலை உச்சிக்கு சென்ற பின் திரும்பி வர தயங்காதே; தோற்பதில் கற்காத பாடம் பாதிப்பில் கற்கலாம்; சாதிக்கும் போது கிடைக்கும் திருப்தியைவிட, சகித்துக் கொள்வதில் அடையும் திருப்தி பெரியது; சாதியைவைத்து சண்டைபோட்டு சாவதை விட, நாதியத்து சாவதே மேல்; வெற்றியில் வரும் சிரிப்பைவிட விரக்தியால் வரும் சிரிப்பு அழுத்தமானது; போதனையில் கற்காத பாடத்தை பாதிப்பில் கற்கலாம்; போதையில் கற்காத பாடத்தை பாதையில் கற்கலாம் காலம் கவலைகளை ஆற்றினாலும், கவலைகளை காலம் சுகக்காது இருக்காது; காற்றால் உன் மனத்தூசியை தட்ட நினைக்காதே; விட்டதை நினைத்து விவாதம் செய்யாதே; விடியலை இருட்டில் தேடாதே; முடிவை துவக்கத்தில் தேடாதே; சாதிக்க சாதிக்குள் சிக்கித்தவிக்காதே சந்தர்பங்களை ஆதாயம் ஆக்கப் பார்க்காதே; சாக்கடைப் புழுவாய் நெளியாதே; விருப்பம் இல்லாத செயலைச் செய்யாதே; விதிகுள் உன் வெற்றியைப் புதைக்காதே; வீதியில் வந்து விழுந்து கிடக்க நினைக்காதே; பைபையாய் பணத்தை நிறப்பினாலும் கை கையாய் தான் எடுத்து உண்ண முடியும் மறக்காதே; பொய் பொய்யாய் அடுக்கினாலும் மெய்யை அடக்கமுடியாது; பணத்திற்குப்பின் பிணம் ஓடாது; பிணத்துக்குப்பின் மணம் ஓடாடு; பணத்துக்குப்பின் பாசத்தை தேடமுடியாது; குணத்துக்குப்பின் கொடும்பகை குடி இருக்கக் கூடாது; சினத்துக்குள் சிரிப்பைத் தேடினால் கோபம் வராது; வாய்பை வாய்க்குள் தேடாதே; வாழ்க்கையை தொலைத்து விட்டுத் தேடாதே; உழைப்பை சோம்பலில் தேடாதே; பிழைப்பை சூதாட்டத்தில் தேடாதே; சுமைமேல் சுமையை ஏற்றாதே; சுகத்திற்கு மேல் சுகத்தை தேடாதே; சமையல் சமையல் என்று சமயலுக்குள் சதி ஆலோசனை செய்யாதே; தவறான முடிவுகள் சில நேரம் சரி என்று தோணும்; தவறி விடாது தவறிவிடாது என்று நினைத்து தவறுசெய்தால் முடிவுகள் தவறிப்போய் விடும்; மனம் போல் வாழாது, மனசாட்சிப்படி வாழ்ந்தால் வாழ்வு சுகப்படும்; மணம் வீசும் மலர்களை விட்டு காகிதப்பூவைத்தேடாதே; வாழ்க்கையின் சுவாரசியம் வலியை சுமக்கும் போது தெரியும்; இன்பத்தை இனிப்பில் தேடாதே; துன்பத்தை தூண்டில் போட்டுத் தேடாதே; பிடிவாதம் பிடிக்காதே; பிடிக்காவிட்டாலும் பிடித்தது போல் நடிக்க மறக்காதே; வாய்ப்பு என்பது வாரி எடுப்பதற்கில்லை; வாழ்க்கை எதுவும் தெரியாத போது துவங்கும், எல்லாம் தெரியத் துவங்கும்போது முடிந்து விடும்; விழுந்த விதையானாலும் வீரியமாய் இருந்தால் தான் விருட்சமாகும்; எதிர்ப்பைவிட எதிர்பார்ப்பு இல்லாமல் வாழப்பழகு; புரிதல் இல்லாத வாழ்வை வாழாதே. புண்ணுக்கு மருந்து போடுகின்றேன் என்று புண்ணை நோண்டி புண்ணைப் பெரிதாக்காதே; முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்ப்பதைவிட, மனக்கண்ணாடியில் உன் உண்மை முகத்தை பார்க்க மறக்காதே; முரடனையும் திருத்துவது அன்பென்னும் ஆயுதம் ஒன்று தான். மழைத்துளிகளை சிறிதாய் விழுகின்றது என்று நினைக்காதே; விழும்துளி விடாது தொடர்ந்தால் பெருக்கெடுக்கும் பெரும் வெள்ளம் தான்; சிறியவனை சிறிதாய் எடைபோடாதே; புண்ணியத்தைத் தேடுவதை விட கண்ணியத்தைத் தேடு; கடமைக்குள் உடமையை அடைக்காதே; உடமையை இழந்தாலும் கடமை தவறாதே; கண் பார்க்கும் கொடூரத்தை விட கதறி சிந்தும் கண்ணீர் கொடுமையானது; நிம்மதியுடன் வாழ நேர்மையுடன் நிதானத்தை கடைபிடி; உண்டிலில் போடும் காணிக்கையை விட உண்டிக்கு வருந்தி தவிப்பவனுக்கு ஒரு பிடி உணவு வழங்குதல் புண்ணியம் ; மனம் சுமையாக இருக்கும் போதுதான் கடவுளை நினைக்கத்தோனும்; கவலைகள் அதிகமாக இருக்கும் போதுதான் அடுத்தவன் துக்கம் தெரியும்; தட்டிப்பார்க்க வேண்டிய இடத்தில் முட்டிப்பார்க்காதே; கொட்டிக்கேட்க வேண்டிய இடத்தில் தட்டிக்கொடுக்காதே; ராசிகளில் உன் ரகசியத்தைத்தேட நினைக்காதே; ஆகாத போகாத காரியத்திற்காக முடிவை முயற்சி செய்து தேடுவதை விட்டு முக்கி முனகித் தேடாதே. முக்குபவனையும் விக்குபவனையும் வியாதி தான் தேடும்; யாருக்காகவும் [ஏ[மாற்றிக்கொள்ளாது உனக்காக ஏமாற்றத்தையல்ல மாற்றத்தை தேடிக்கொள்; ஆயுதத்தை கையில் ஏந்தாதே; ஆற்றுக்குள் ஊற்றைத்தேடாதே; தார்மிகத்தை ஆன்மீகத்தில் தேடாதே; தர்மத்தை அதர்மத்தில் தேடாதே; இலட்சியத்தை அலட்சியத்தில் தேடாதே; இலக்கை நழுவ விட்டு இழுக்கைத்தேடாதே; பேசிக்கொண்டே இருப்பதை விட்டு யோசிக்கத்துவங்கு; பெயருக்காக செய்யாது பெருமைபடும் படி செயல்படு. கிடைக்காததை நினைத்துக் கதறாதே, கிடைத்தை வைத்து அமைதி கொள்ள மறக்காதே; கிழக்கில் உதிக்கும் சூரியனை மேற்கில் தேடாதே; காக்கவைப்பதை விட காத்திருக்கக் கற்றுக்கொள்; காக்காப்பிடிப்பதை விட காரியத்தில் கண்ணும் கருத்துமாய் இரு; கரிக்கட்டைக்கும் மதிப்பு உண்டு; செருக்கு சறுக்கத்தான் செய்யும்; செயல் துவக்கத்தில் தான் வரும்; அழகுக்குள் அசிங்கத்தைத் தேடாதே; அறிவுக்குள் அழிவைத்தேடாதே; புரட்சி புரட்சி என்று வரட்சியைத் தேடாதே. காலை வணக்கத்தைக் கூறும் அன்பன் அ. முத்துவேழப்பன்

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media