Blog

காட்டில் திரிந்த மனிதா

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 03/03/2024
  • Category: valkkai
  • Views: 125
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

காட்டில் திரிந்த மனிதா; கடல் சுமந்த புவியில் வாழ்ந்தாய் ; வனத்தை வாசமாகக் கொண்டாய்; வானரமாய்த் திரிந்தாய்; ஒன்றும் இல்லாமல் இருந்தாய்; ஊமையாய் ஓடி ஓடித் திரிந்தாய்; ஒலி எழுப்பியே, உன் பரிபாசையைத் துவங்கினாய்; ஓயாது அடித்தே திரிந்தாய்; தேடித் தேடியே அலைந்தாய்; காட்டுமிராண்டியாய் இருந்தாய்; சலனத்தின் அசைவில், மொழிந்திட இசைந்தாய்; ஓடி ஓடி திரிந்த நீ, கூடி கூடி இருந்தாய்; கூட்டமாய் ஓர் இடத்தில் அமர்ந்தாய்; இலை தழை பழங்களைத் தின்ற நீ, இருட்டில் இடிக்கும் மின்னலுக்கும் பயந்தாய்; எட்டி வந்த மிருகங்களைக் கண்டு எடுத்தாய் ஓட்டம்; எங்கோத் திரிந்த நீ, நதிக் கரையோரம் அமர்ந்தாய்; நக்கிக் குடித்த நீ , நாணம் வரக்கண்டாய்; இலையால் உடம்பை மறைத்தாய்; வெட்கம் வந்திடவே, விரும்பியபடி மிருக வாழ்க்கை வாழாது, மரத்திலிருந்து இறங்கி, மரப் பொந்திலும் குகையிலும் வாழத்துவங்கினாய் போராட்டம் போராட்டம் என்றே போராட்டத்தில் வாழ்வைத் துவங்கினாய் போய் வந்த இடங்களிலெல்லாம், பாதை கண்டாய் பயணம் செய்தாய்; இப்படியும் அப்படியும்; இனத்தைப் பெருக்கிய நீ, இனம் கண்டாய், துணைகொண்டாய்; இசைவு பாட்டாய், வாழத்துவங்கினாய்; வந்தே குடியேரினாய்; நெருப்பைக்கண்டாய், நெருப்புச் சுடும் என்பதை உணர்ந்தாய்; உணர்வு தான் உதித்தது, உயரிய ஓழுக்கமாய்; நீ ஓசை வடிவத்திற்கு, பொருள் தரத்துவங்கினாய்; வாய்மொழியில் துவங்கிய வாழ்வில், நீ; வளைந்து வளைந்து படம் வரைந்து, உன் சித்திர எழுத்துக்களால், செய்திகளை மொழிந்தாய்; அற்புதப்படைப்பு, நாகரீகத்தின் பிறப்பு; சமூகமாக வாழத்துவங்கினாய்; சமுதாயத்தைப் படைத்தாய்; குழும வாழ்வு, குடியாமை தந்தது, குடும்பத்தைத் துவங்கினாய்; குடியிருக்கக் கற்று கொண்டாய்; குந்தி குந்தி நீ குடில்கள்; கட்டத்துவங்கினாய். விழுதில் தொத்தி, விலங்குடன் வாய்ந்த நீ விடியலைத் தேடினாய்; முடிவில் விலங்குகளை, உன் ஆளுமைக்குள் கொணர்ந்தாய்; உணர்ந்தாய், உன் புத்தியின் வலிமையை; ஒருதலைவனுக்குக் கீழ் வாழ்ந்த நீ, ஒரு அரசை உருவாக்கத் துவங்கினாய்; எல்லாம் எல்லாம் மாறியது, வாழக்கற்றுக் கொண்ட நீ, வாழ்க்கை வாழத்தான் என்பதையும் கற்றுக்கொண்டாய்; உறவைப் படைத்தாய்; உணர்வை ருசித்தாய் ரசனை பெற்றார், ரசிக்கத் துவங்கினாய்; ருசிசையைப் பெற்றாய், ருசிக்கும் அடிமையானய். பிறப்பின் ரகசியம் அறிந்தாய், பேய் வாழ்க்கையைத் துவங்கினாய், பிடிவாதம் பிடிக்கத் துவங்கியாய்; பிழைசெய்யவும் துவங்கினாய்; பிழைப்பைத் தேடினாய்; கல் கட்டை எலும்பை ஆயுதமாகக் கொண்ட நீ, இரும்பின் பயனறிந்தாய்; உலோக வாழ்க்கையைத் துவங்கினாய் உனக்குள் தேவையின் தூண்டுதலுடன் ஆசையும் பூத்தது, ஒவ்வொன்றாய் படைத்தாய்; உழுதாய் உயர்ந்தாய்; தொழுதாய்; வேல் வடித்தாய்; போர் செய்தாய் வினைசெய்தாய்; தொழில் பிடித்தாய் விளையாடத் துவங்கினாய்; விடிந்தது புது உலகம் தேடல் தேடல் தேடலின், துவக்கம்; உன் புத்தியில் யுத்தத்தைக் கற்றுக்கொள்ள, விலங்கு பறவை, இயற்கை மனிதர்கள் அனைத்தையும், தன் ஆதிக்கத்தின் கீழ்கொண்டு வந்தாய். தம்பதியாயினாய், தாயாதி உறவு பிறந்தது; சக உதரன் சக உதரி; என்று உறவுகளுடன் சூழ்ந்தாய்; மரபைப் படைத்தாய்;உறவை வளர்த்தாய்; மனத்தைப் படைத்ததாய்; மத்ததைப்படைத்தாய்; ஒரு ஜீவனாக இருந்த நீ, ஜீவிதியாகத் துவங்கினாய் எத்தனை யுகம்; எத்தனை யுகம், இத்தனை மாற்றங்கள்; எடுத்த ஓட்டம், எல்லாம் மாறியது. மொழியக்கற்றாய், மொழிந்தாய்; தொழிலைத் தொடர்ந்தாய்; எல்லாம் தேடல் தான், சுகத்தைக் கற்றாய், சுகபோகத்தில் சொர்க்கத்தைத் தேடினாய்; சுவைக்கத் துடித்தாய்; நடித்தாய், புதிய நாடக உலகை படைத்தாய்; நாகரீகத்தின் துவக்த்தில் காலடி வைத்த நீ முதிர்ச்சி பெற்றாய்; முடியும் வரை போராடிய நீ; முயற்சி என்னும் வித்தையும் விதைத்தாய்; முடிவில் பலனைக்கண்டாய்; முழங்கியது தாதாதையர்கள் போர் போர் போர் போர்; எங்கும் ரணகளம் தான்; அன்பான வாழ்வையும் சமைத்தாய்; அழகிய இடத்தை அமைத்தாய்; அன்புக்குள் அடைக்கலம் ஆனாய்; உயர்ந்ததொரு நாகரீகத்தைப் படைத்தாய்; ஏகலைவனாய் நிற்கத் துவங்கினாய்; ஆகமம் வடித்தாய்; ஆணவம் பிடித்தாய்; எழுதத் துவங்கினாய்; உயர்ந்த உன் வாழ்க்கையில்; எல்லாம் எல்லாம் எனக்கே; என்றே பேராசையையும்; சேர்த்தே வளர்த்தாய்; ஆசையின் துவக்கம்; அழிந்தது பல வர்க்கம்; இனப்பெருக்கம், எடுத்தாய் ஓட்டம் இயற்கையின் சீற்றம், பாதுகாப்பைக் கற்றாய்; பல பகையை படை எடுத்து முடித்தாய்; பொன்னாசையுடன் பெண்ணாசையின் பிடியிலும் பட்டாய்; வித்தைகளோடு; பல விந்தையையும் செய்தாய்; வேளாண்மை தாண்டி, கலை ஞானம் அறிவு விஞ்ஞானம் மெய்ஞானம், என்று உன் எல்லையை விரித்துக் கொண்டே போனாய்; விரைந்து செயல்பட்டாய்; விண்தான்டிப் போனாய் வேறு கோள்களையும் வெல்லத்துடித்தாய்; மண்ணை நோண்டினாய்; கனிமங்களை கடைந்தாய்; கட்டுப்படாத ஆசையில்; கண்டதை செய்தாய்; நீருக்காகப் போராடினாய்; நிலத்தை விலைபேசினாய்; நிம்மதியிழந்தாய் கனினி மென்பொறியியல் உலகில் மெல்ல அடிஎடுத்து வைத்தாய்; உலகை ஒரு பிடிக்குள், கொணர்ந்தாய்; தொழில் நுட்பப் புரட்சியால், தொல்லைகள் பலதந்தாய்; தொடுவானமும் எனக்கே என்று துடித்தாய்; தொட்ட பொருளுக்கெல்லாம், விலை பேசினாய்; இயந்திர மனிதனாயினாய்; இதயத்தை இரும்பாக்கினாய்; மீண்டும் உலோக காலம் தாண்டி; மனதை பழைய காட்டுவாசி வாழ்விற்கே கொண்டு சென்றாய்; சரித்திரம் படைத்தாய்,சரிவின் துவக்கம் சமுதாயத்திற்கு சாவு மணி அடிக்கத் துவங்கினாய். மொழியின் முதிர்ச்சி, சாதிகளின் பிரிவு; ராஜ்ஜியம் சேர்க்கை; படைப்பில் புதுமை; பழக்க வழக்கத்தில் புதுமை; பேராசை பேராசை பேய் ஆசை; எத்தனை மாற்றங்கள்; எத்தை ஓட்டங்கள் எத்தனை ஏக்கங்கள்; எத்தனை ஏமாற்றங்கள். தாண்டித் தாண்டி பயணித்தாய்; தாண்டவமே ஆடத்துவங்கினாய்; மத குருமார்களின் ஆளுமை; மதம் சார்ந்த வாழ்க்கை; அரண்மை வாழ்க்கை; குடிம வாக்கை; ஆட்சி சார்ந்த வாழக்கை; வறுமையின் போராட்டம்; வந்தே பிறந்தது; வர்க்கப்போராட்டம். தொழிலுடமை; பொதுஉடமை; ;முதலாலித்துவம், சர்வாதிகாரம், என்று பல, பல, முற்றுப் புள்ளி வைத்தாய், மனித நேயத்திற்கு அழிவின் துவக்கம், ஆசையில் இல்லை வெட்கம் எல்லாம் முடிந்தது; நாகரீக ஓட்டத்தில் அநாகரீகம்; ஓட்டத்தில் சுகமாய் வாழ சௌகரீகங்களைக் கற்றுக் கொண்டாய்; போரின் முதிற்சி; வில் அம்பு போக கற்குண்டு; இரும்பு குண்டு; பீரங்கி வெடிமருந்து; என்று உலோக இரசாயணக் கலவைகளைச் சேர்த்து அழிவைத் துவங்கினாய்; இரசாயன குண்டுகள், கண்டம் தாண்டி தாக்கும் ஏவுகனைகள் என்று விஞ்ஞன விளையாட்டில் சித்துவித்தையே காட்டிவிட்டாய்; இயற்கை மருத்துவம் தாண்டி; அறுவைச் சிகிச்சைக்குள் சென்றாய்; பல பல நிலைகள் தாண்டி; பட்டோடபத்துடன் வாழத் துவங்கினாய்; ஆசை ஆசை ஆசை, எடுத்ததில் ஆசை எட்டிப்பாத்தது எல்லாவற்றிலும் ஆசை; கொலைகார ஆசையில்; குடும்பத்தையும் மறைந்தாய்; உன் உடல் நலத்தையும் மறந்தாய்; விலை பேசினாய் மனசாட்சிக்கு; விற்று விட்டாய்; தன்மானத்தையும், மனித நேயத்தையும்; உனக்குள்ளே அடிமையாகினாய்; உன் கண்டுபிடிப்புக் குள்ளேயே புதைந்தாய்; பூதமாய் வந்தது உன் படைப்பு; பூமியை ஆட்டிப் படைக்கத் துவங்கியது; கிருமியாய் பரவியது; விஷ வாயுவாய் பரவியது, கொடிய நோயாய் தொத்தியது; இயற்கையை அழித்தாய்; இன்ப வாழ்க்கையைத் துவங்கினாய்; எல்லாவற்றையும்; உன் மெய்யறிவால்; புதிய புதிய வற்றைக் கண்டு பிடித்தாய். உலகை சீரழித்தாய்; விளைவு அழிவு அழிவு அழிவு சிதைவு சிதைவு தான் சிற்றின்ப வாழ்க்கை தான் உயர்ந்த நாகரீகத்தின் உச்சியிலிருந்து ஊசலாடுகின்றாய். உயிர்க்கொல்லி உன்னைக் கொல்லத் துவங்கிவிட்டது. நடித்த நீ, துடிக்கின்றாய் மீண்டும், ஓடுகின்றாய்; ஓடுகின்றாய் ஒரு கிருமிக்காக ஒளிந்து கொள்ள நினைக்கின்றாய் உன்னால் தான் உனக்கு முடிவு உணர்ந்து கொள்; ஓடாதே ஓடாதே; தேடு தேடு மீண்டும் தேடு; ஒரு புதிய பாதையை ஒரு புதிய பயணத்தை; அது இருக்கட்டும், ஒரு புனித பயணமாக; இயற்கையோடு ஒன்றி வாழ்வோம் இருப்பதை வைத்து உண்டு வாழ்வோம் இருக்க வேண்டுமென்றால் இயற்கையும் வேளாண்மையும் வேண்டும் என்பதை உணர்வோம்.

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media