Blog

மகளிர் தினம் மங்கையரின் புனித தினம்

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 08/03/2024
  • Category: others
  • Views: 137
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

மகளிர் தினம் மங்கையரின் புனித தினம்; மகத்தான சாதனைகளை மௌனமாக படைக்கும் வீர மங்கையர்களின் வெற்றித் தினம்; பெண் இல்லை என்றால் பிறப்பில்லை; பெண்மை இல்லை என்றால் சிறப்பில்லை; பிறப்பால் வேண்டாம் ஆண் பெண் பிரிவினை; பெண்ணாய் பிறப்பது பெருமை; பெண்ணே இந்த மண்ணின் மகிமை; பெண்மையின் வடிவம் அன்பு; பேனிக்காக்க வேண்டியது நம் பண்பு; பெற்றவளும் தாய்தான்; பெண்ணடிமை என்பவன் பேடி தான்; வாழப்பிறந்தவள் பெண்; வாழ்த்தப் பிறந்தவள் பெண்; வாழவிடுவோம் பெண்ணை. வீட்டையும் காப்பாள்; விண்ணிலும் பறப்பாள்; உன்னையும் என்னையும் சுமந்தவள்; உண்மை அன்பை சொறிவாள்; கருவில் சுமப்பாள்; கருணை வடிப்பாள்; உணவுச் சமைப்பாள்; உனக்கு ஒன்று என்றால் உதிரம் வடிப்பாள்; உழவும் செய்வாள்; உலகைக் காப்பாள்; நாட்டையும் காப்பாள்; ஏட்டையும் திருப்புவாள்; எட்டாத உயரத்தையும் தொடுவாள்; வீராங்கனை அவள்; விரட்டியே அடிப்பாள் வீணர்களை; அறிவியல் உலகில் சாதனை படைப்பாள்; அன்பின் தெய்வமே அவளென்பேன்; சாதனை படைப்பவள் பெண் என்பேன்; சாதிக்கவே பிறந்தவள் அவளென்பேன்;. விடிவெள்ளியே அவள், வீட்டுக்குள் அடைத்து வைக்காதே; வீம்பு செய்யாதே; கூண்டுப்பறவை இல்லை அவள்; குலதெய்வம் அவள்; சேவை செய்யப் பிறந்த செவிலியவள் பெண் அவள் புவியின் கண் அவள்; அஞ்சுகம் அவள்; அடுப்பங்கடையில் அடைபட்டுக்கிடக்கும் அஞ்சறைப் பெட்டியில்லை அவள்; அவமானங்களை சுமக்க பிறக்கவில்லை அவதாரம் அவள்; ஆதாரம் அவள்; சேதாரப்படுத்தப் பார்க்காதே; இசைதலே அவள் குணம் இரக்கம் கருணையே அவள் மணம்; ஈன்றெடுப்பாள்; உள்ளத்தையும் இல்லத்தையும் காப்பாள்; உயர்ந்த பிறப்பவள்; ஊமை இல்லையவள்; ஊன்றுகோலாய் இருப்பாள்; ஊக்கியே அவள்; எதையும் சாதிப்பாள்; ஏணியள்; ஏட்டையும் திருப்புவாள்; ஐஸ்வரியமே அவள் தான்; ஒற்றுமை காப்பாள்; ஓயாது உழைப்பாள்; ஓளடதமும்[நன்மருந்து]அவளே ஔவை மொழிந்த ஆத்திச்சூடியள் எஃகாய்[உறுதி[ இருப்பாள் அ ஃ [ஆதியும் முடிவும்] தாய் அவள். அஃதாய் நிறைந்திருப்பாள். ஃ தாய் தனித்தும் ஆயுதமாய் இருப்பாள் தாயாய் இருப்பாள் தாய்மை காப்பாள்; தீயாய் இருப்பாள், தீங்கு செய்யவருபவரை எரிப்பாள்; தீபமாய் சுடர்விடுவாள்; தூய ஒளிச்சுடரே அவள்; தீம்சுவையாய் தித்திப்பாள்; அவள் என்றாள் கவிதை; அவள் என்றாள் காவியம்; அவள் என்றாள் அத்தியாயம் அவள் என்றாள் சரித்திரம்; அவளை அவலாய் மென்று கொச்சப்படுத்த நினைக்காதே; அவளொரு பெண் தெய்வம்; பெண்ணே புயலாய் புறப்பட்டவா; புதுமை படைக்க புற்றீசலாய் பறந்துவா; பெண் என்ற பிறப்பில் இல்லை ஊனம்; பெண் என்றாள் அவமானம் இல்லை; பெண் என்றாள் புதுமணம்; பெண் என்றாள் மானம் பெண் என்றாள் நற்குணம். பெண்ணாய்ப் பிறந்தவள் பேடியும் இல்லை, அடிமையும் இல்லை. புழக்கடை நெழியும் பழுவல்ல துடிக்க; பூத்து மணக்கும் புதுமைப் பெண்; வேண்டாம் வேண்டாம் ; வேதனை தரும், சிசு வதை வேண்டாம்; பெண் வதை வேண்டாம்; பாலியல் வன் கொடுமை வேண்டாம்.; பெண் கொடுமை வேண்டாம்; அடுப்பங்கரையில் மட்டும் அரசி அல்ல அவள்; ஆட்சி செய்யும் வீட்டிற்கும், நாட்டிற்கே பேரரசி; ஆணின் மனதில் நடனமாடும் கலையரசி; பெண் குழந்தை இவள் அன்பைச் சொரியும் இளவரசி; பெண்ணே வீறு கொண்டு எழுந்திரு!!! விடியும் விடியும் என்று காத்திருக்காதே; பெண்ணே மூன்று முடிச்சுக்குள் முடங்கவில்லை உன் உலகம்; உன் மூச்சிக் காற்றுக்கும் வேண்டாம் அடிமைத்தனம்; உன் மூச்சுக் காற்றால் பகைவனை அழித்திடு. முழு சுதந்திரம் பெற போரிடு; முடிவைத் தேடி புறப்பட்டு விடு. பிரசவ வலிக்கு மேல் என்ன வலி உன்னை தீண்டும்; பெண்ணே விதி என்று விழுந்து கிடக்காது, விழித்தெழு; பிறர் வியந்திட செயல்படு; விண்ணைத் தொடும் அளவு புகழ் பெறு; வாழ்க மங்கையர்கள்; வாழ்துவோம் ஆண்கள் அணைவரும் பெண்களை மங்கையர் தினத்தில். உள்ளன்போடு உண்மையாக வாழ்த்துவோம் பெண்களை. அதிகாலை வணக்கத்தை கூறும் அன்பன் அ. முத்துவேழப்பன்

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media