Blog

ஒழுக்கம் பழகு ஒழுங்காய் வாழப்பழகு

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 14/03/2024
  • Category: valkkai
  • Views: 646
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

ஒழுக்கம் பழகு; அது அழகு; ஒழுக்கம் அது நல்ல பழக்கம்; ஒழுக்கம் அது ஒரு நல்ல துவக்கம்; நல்லப் பண்பே ஒழுக்கம்; நற்குணமே ஒழுக்கம்; சீரிய பழக்க பழக்கமே ஒழுக்கம்; நன் மதிப்போடு வாழ்வது ஒழுக்கம்; நல்லதையே செய்வது ஒழுக்கம்; நேரத்தில் செய்வது ஒழுக்கம்; நேர்த்தியாய் செய்வது ஒழுக்கம்; நேர்மையாய் வாழ்வது ஒழுக்கம்; நேயத்தோடு இருப்பது ஒழுக்கம்; நேசித்தே பழகுவது ஒழுக்கம்; தவறு செய்யாமல் இருப்பது ஒழுக்கம்; தவறியும் புறம் கூறாமல் இருத்தல் ஒழுக்கம்; புறணி பேசாமல் இருத்தல் ஒழுக்கம்; புண்படுமாறு பேசாது இருத்தல் ஒழுக்கம்; பிறர் புரியும் படி பேசுதல் ஒழுக்கம்; கடமை கட்டுப்பாடு நேர்வழியே ஒழுக்கம்; தவறே செய்யாது, தவறியும் தவறு செய்தால் மன்னிப்பு கேட்பது ஒழுக்கம்; மன்னிப்பது ஒழுக்கம்; பிறர் செய்த உதவியை மறக்காமல் இருப்பது ஒழுக்கம்; மாற்றான் மனை நோக்காது இருப்பது ஒழுக்கம்; மற்றவர்கள் கேலி செய்யாது வாழ்ந்து காட்டுவது ஒழுக்கம்; மற்றவர்களை கேலி செய்யாது இருத்தல் ஒழுக்கம்; தீதை தீண்டாமல் இருப்பது ஒழுக்கம்; தீமைசெய்யாது இருத்தால் ஒழுக்கம்; திரும்பத் திரும்ப தவறு செய்யாது இருத்தால் ஒழுக்கம்; உடையில் வேண்டும் ஒழுக்கம்; நடையில் வேண்டும் ஒழுக்கம்; உள்ளத்தில் வேண்டும் தூய ஒழுக்கம்; பேச்சில் செயலில் பணிவில் பழக்கத்தில் வேண்டும் சுய ஒழுக்கம்; உண்மையில் வேண்டும் நமக்கெல்லாம் நல்லொழுக்கம்; சமூக ஒழுக்கமே சன்மார்க்க ஒழுக்கம் சாக்கடையாகாது சமுதாய சீர்கேடைத் தடுக்கும் இந்த சக ஒழுக்கம்; மனிதன் மனிதனாய் வாழ உதவுவது சமூக ஒழுக்கம்; ஒழுக்கம் உயிரிலும் உயர்வானது; அகப் புற ஒழுக்கங்களே ஆன்மீகமாம்; அகத்தை புண்ணாக்கி விட்டு புறத்தில் சீழ் வடியக் கூடாதாம்; ஒழுக்கமாய் வாழ்ந்தால் தவமாம் ஒழுக்கம் கெட்டால் சவமாம் இழியும் பழியும் இழுக்கு இறுகிக்கிடந்தால் பெரும் துயரு; நெறி பிசகாமல் வாழ்ந்தால் அழகு நேர்மை தரும் உய்வு கோணியவன் கூனாமல் இருப்பதில்லை குழிதோண்டியவன் புதையாது இருப்பதில்லை; தோன்றியதைச் செய்து புழுங்காது புகையாது புகழுடன் வாழப் பழகு; ஒழுக்கம் பேணுதல் அறம்; ஒழுங்காய் வாழுதல் தவம்; ஒழுக்கம் தழுவி அழுக் கைக் கழுவி, உண்மையைத் தழுவி மாயையை விட்டு விலகு; ஒழுக்கம் அது நம்மைக்காக்கும்; ஒழுக்கம் அது ஒரு பழக்கம்; பழகப் பழகத்தான் வரும் நடத்தையில் ஒழுக்கம்; பழுதானால் இல்லை ஒழுக்கம்; பாதியில் வராது ஒழுக்கம், மீதியில் இல்லை ஒழுக்கம்; பாலப்பருவத்தில் இருந்து படிக்க வேண்டும் ஒழுக்கம். படுக்கையை சுருட்டாமல் எழுந்தால் வராது ஒழுக்கம் பண்பாட்டை மறந்தால் தொத்தாது ஒழுக்கம்; ஒழுக்கம் அது நம் ஆற்றலின் உரம், அதுவே என்றும் அறமாகும்; மனஒழுக்கம் மனதை மகிழ வைக்கும். புற உழுக்கம் புரிதலின் துவக்கம் பூத்தே மணக்கும்; உரிய உயரிய செயலே உண்மையான ஒழுக்கம். ஓதுபவனோ ஊதுபவனோ ( பத்தர்) உயர்ந்தவனோ நெழிந்தவனோ ஒழுக்கமே ஓம்பப்படும் ஒழுக்கம் உயிராய் இருந்து நம்மை காக்கும். வழுக்கையிருக்கலாம் வாழ்வில் வழுக்கள் (தவறுகள்) இருக்கக் கூடாது; ஒழுக்கம் அது உயரிய சீரிய பழக்கம்; வெற்றிக்கு வேண்டும் சத்தான ஒழுக்கம். வித்தான ஒழுக்கம் விளைக்கட்டும் நல்ல பழக்க வழக்கங்களை . ஓழுக்கமே ஓம்பப்படும் இப்படித்தான் வாழ்வேன் என்றால் நெறி; எப்படியும் வாழ்வேன் என்றால் வெறி; இப்படியும் அப்படியும் எப்படியும் வாழ்வேன் என்றால் சதி. நேரத்தில் எழுந்தால் ஒழுக்கம்; நேர்தியாய் செய்தால் ஒழுக்கம்; நேர்மையாய் வாழ்ந்தால் ஒழுக்கம்; தூய்மை வாய்மையைக் கடைபிடித்தால் ஒழுக்கம்; பிற ஜீவன்களையும் துன்புறுத்தாது இருந்தால் ஒழுக்கம் தூய வாழ்வியலே ஒழுக்கம்; விழுமியம்(Vaue) - கலாசாரம், பண்பாட்டு மற்றும் வாழ்வியல் அறநெறிகளின் தொகுப்பு - காப்பது ஒழுக்கம். விடா முயற்சியே ஒழுக்கம்; திறமை மூலம் புகழைப்பெறலாம்; ஆயின் நல் ஒழுக்கம் மூலமே நல்ல மனிதன் என்ற அடையாளத்தை பெறமுடியும்; மனிதன் தெய்வநிலை அடைவது நல் ஒழுக்கத்தால்; மனிதனை மனிதனாக்குவது ஒழுக்கம்; நல்வழி படுத்துவது ஒழுக்கம்; நல்லவனாக்குவது ஒழுக்கம்; நல்லோர் வழி நடத்தல் ஒழுக்கம்; நல்வழி காட்டுதல் ஒழுக்கம்; நன் மதிப்பு பெறுதலே நல் ஒழுக்கம் பிறர் நம்மை மதித்தால் ஒழுக்கம்; பிறருக்காக வாழ்வதே ஒழுக்கம்; பிறவிப் பிணியை தாண்ட உதவுவது ஒழுக்கம்; பிற உயிரினங்களையும் நேசிப்பது ஒழுக்கம்; ஒழுக்கம் உருகும் கருணையாம்; ஒழுக்கம் ஓடும் பாசமாம்; ஒழுக்கம் தேடும் அறமாம்; ஒழுக்கம் விளகக் கூடாத ஞான ஒளியாம்; சிந்தனையிலும் செயலிலும் நித்தம் உதிக்க வேண்டும் நல்ல சிந்தனையும் ஒழுக்கமும்; செம்மையாய செயலே ஒழுக்கம்; சிறப்பான செழிப்பான வாழக்கைக்கு வேண்டும் நமக்கு நல்லொழுக்கம். செயலில் வேண்டும் நல்லொழுக்கம்; தூய்மையான எண்ணமே ஒழுக்கம்; தூய பாசமே ஒழுக்கம்; தாங்கும் உண்மை அன்பும் பண்பும் பழக்க வழக்கமுமே ஒழுக்கம்; தவறுகள் இல்லா செயலே ஒழுக்கம்; தலைகனம் பிடிக்காதது ஒழுக்கம்; தன்னலம் தேடாதது ஒழுக்கம்; தன்மையான செயலே ஒழுக்கம்; தருமத்தின் மறு பிறப்பே ஒழுக்கம்; வன்மம் சூழ்ச்சி கயமை கள்ளாமை பொய்மை குரோதம் விரோமம் தெரியாதது ஒழுக்கம்; கள்ளுண்ணாமை காமம்; இல்லாமையே ஒழுக்கம்; ஒழுக்கம் இருந்தால் உலனமே நம்மைத் தொழும்; ஒழுக்கம் எனும் பண்பு இருந்தால் உண்மை அன்பு கூடி வரும்; நம்மை பெருமை தேடி வரும்; அழியா அப்பழுக்கு இல்லாத ஒழுக்கம் அடக்கம், அறத்திலிலும் சிறந்ததன்றோ; அழுக்கு இல்லாத ஒழுக்கம் குடி கொண்ட உள்ளம் கோவில் அன்றோ ; ஒழுக்கத்திற்கு வேண்டும் உயர்ந்த எண்ணம்; உண்மைபேசிட வேண்டும்; உற்றோர் உறவினர் மற்றோறை மதித்திட வேண்டும்; நல்லது செய்திட ஆர்வம் வேண்டும்; வள்ளவராய் இருக்காவிடினும், நல்லதே நினைத்திட வேண்டும்; நல்லவராய் இருக்கவேண்டும்; நாலும் தொண்டு செய்திட வேண்டும்; தேடி வருமுன் ஓடிசென்று உதவிட வேண்டும்; நல்ல தூய்மை இதயத்தில் வேண்டும்; வாய்மை வென்றிடவேண்டும்; பினக்கம் இல்லா வாழக்கை வேண்டும்; பிசகு இல்லா செயல் செய்திட வேண்டும்; பிடிவாதம் இல்லாமை வேண்டும்; பிடிப்போடு செயல் வேண்டும்; நல்ல படிப்பினை வேண்டும்; உறுதி உள்ள நெஞ்சம் வேண்டும்; உயர்ந்த எண்ணம் வேண்டும்; இரக்கம் இறுதிவரை வேண்டும்; ஒழுக்கத்தை தரா கல்வியும் விளைச்சல் தரா வயலும் வீண்; ஒழுக்கத்தோடு வாழ்வோம் ஒளிமயமான எதிர்காலத்தை படைப்போம் “ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி” குறள். ஒழுக்கம் பழகு ஒழுங்காய் வாழப்பழகு

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media