Blog

ஒன்று முதல் பத்துவரை

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 15/03/2024
  • Category: thathuvam
  • Views: 112
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

ஒன்று முதல் பத்துவரை பூஜ்ஜியமோ ராஜ்ஜியமோ, ஒன்றுமுதல் பத்துவரை ஓரொயிரம் உண்மைகளை பதுக்கிய வாழ்வே. ஒன்றும் பூஜ்ஜியமும் பிணைந்து உறவாடியதுவே; ஒன்றும் பூஜ்ஜியமும் ( பிறப்பு - 1 இறப்பு - 0) ஒன்ராய்ப் பிறந்த பிறப்பு, ஒன்றும் இல்லாது பூஜியமாய் முடிந்ததுவே. ஊமையானது மெய்யும் பொய்யும்; உன் உடம்பு சுமந்ததோ உயிரையும் மெய்யையும்; யாக்கையின் பயணம் யாப்பில் முடியும். பூஜ்ஜியமும் ஒன்றும் ஒன்றும் பூஜ்ஜியமும் எண்கணிதத்தை எட்டிப்பார்க்க, ஒன்றும் பத்தும் கூடியும் கழிந்தும் பெருகியும் வகுபட்டும் வர்க்க கணிதத்தை தர்க்கம் செய்யாது விகிதமாக்கி துவங்கியதுவே எண்கணிதத்தை. வாழ்க்கைத்துயரம் வந்தே தீரும் ஒரு உறுவோ மறுஉறவோ மாறுமோ மறையுமோ மரபும் வேதமும் தாங்குமோ தமிழும். ஓர் உயிரே ஓர் உடம்பே உலகில் வந்த முதல் ஓர் உயிரே வானில் ஓர் சுரியனோ ஈர் இனமே சீர் செய்த இரு இனமே; ஆணும் பெண்ணுமாய் வடிவெடுத்தனவே; முகத்தில் பதித்தது இரு கண்களே; முப்பரிமானமே முப்பரிமானமே முறையிடுவேன் முக்கண்ணையும் திறந்த ஞான போதகனிடம். முத்தமிழ் தந்த சுவையே; நான்வகை மரபே (இருவழி-ஒருவழி-ஈரியல்-இணை- மரபுகள்) நால்வகைப் பெண்ணும் எண்வகை ஆணும் நாற்கரமாய் வாழ்வில் நயந்தனரே. வாழ்வியலின் வழிமுறை 4 வேதங்களோ பார்த்த பஞ்ச பூதமே, படைத்தாயோ உலகை; வதைத்தாயோ உலகை; தமிழ் தந்த ஐம்பெரும் காப்பியமே அறுசுவையே, அறுசுவையே, அள்ளித்தான் பருகுவாயோ; 6 அறிவு படைத்த மனித இனமே, 6 வது அறிவை சீராய் பயன்படுத்து; எழு பிறப்பே ஏழு அதிசயங்களே; எட்டித்தான் பார்ப்பாயோ; ஏமாற்றத்தான் செய்வாயோ; ஏழு சுரங்கள் எழுந்த உலகில் ஏழு நிறங்களோ; எத்தனை நிறங்களில் இந்த மனிதர்களோ; எத்தனை மலர்களில், எத்தனை நிறங்களோ; எத்தனை மனிதர்களில் எத்தனை மனங்களோ; அத்தனையையும் ஏந்திய என்சீரே; என்சீரே; அடி எடுத்துத்தாயோ, விருத்தத்துடன் விரும்பியே அடி எடுத்துத்தாயோ. என்வகை மெய்பாடே (நகை- அடுகை-இளிவரல்(மூப்பு)-மருட்கை-அச்சம்- பெருமிதம்- வெகுளி-உவகை) என்வகை மெய்பாடே ஏன்இந்த வெளிப்பாடோ என்திசையிலும் முழங்கட்டும். உன் மெய்பாடு. நவகிரகமோ, நவரசமோ நவமணியோ நவபாசனமோ ஒன்றும் புரியாத ஒன்பது வழியோ. தசாவதாரமோ பத்தைச்சுமந்த திருமண மங்கையின் அழகோ; தின பொருத்தம்; கண பொருத்தம் மகேந்திரம் பொருத்தம்; ஸ்திரீ தீர்க்கம் -பெண்ணின் ஆயுள்; ஆவுடை பொருத்தம் ; இராசி பொருத்தம்; ; இராசி அதிபதி பொருத்தம், வசிய பொருத்தம் வேதை பொருத்தம் பத்தை அடியாகக் கொண்ட எண் முறையோ; தலைவணங்கு தமிழுக்கு தந்திடும் உயர்வு, உயிரும் மெய்யும் உய்க்கும் வரை வாழ்ந்திடு தமிழனாய் தூய தமிழனாய் வாழ்ந்திடு வாழிய தமிழ். காலை வணகத்தைக் கூறும் அன்பன் அ. முத்துவேழப்பன்

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media