Blog

விடியல்

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 19/03/2024
  • Category: iyarkai
  • Views: 151
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

விடியல்! கிழக்கில் பிறக்குது புதிய விடியல்; கிழித்தே உதயமாகுது இந்த விடியல்; நாட்கள் பூக்கும் விடியல்; நமக்குள் தேடவேண்டும் புதிய விடியல்; விடியல் காட்டட்டும் புதிய விடிவு; விரைந்து ஓடட்டும் இரவு; விடியலில் இல்லை வேறுபாடு; முடிவைத்தேடி நீ ஓடினால் கேடு; விஞ்ஞான விளையாட்டில் உண்டு சீர்கேடு; விடை தேடியே ஓடட்டும் பொழுது; விழுந்தே பிறக்கட்டும் முடிவு; வெறுக்க வேண்டாத உறவு; வெற்றிபெற உனக்கு வேண்டும் பணிவு; வேண்டாம் இந்த உடன்பாடு இல்லா வாழ்வு; உடல் ஒரு வீடு; உனக்குள் உன்னைத்தேடு; உணர்வோடு வாழ்ந்திடப் பழகு; உழைப்பு இல்லையென்றால்; உனக்கு இல்லை உணவு; ஓடி ஓடியே வாழு; ஒட்ட வேண்டாம் நாகரீகச் சீர்கேடு; ஒன்றாய் ஒற்றுமையாய் வாழ்ந்திடு; ஒன்றும் இல்லை என்றால் உன் உடம்மே பிணக்கூடு; ஒன்றுபட்டால் உய்வு; ஒற்றுமையில் இல்லை பிளவு; ஒருவேலை ஒன்றாய் கூடி உண்டு பாரு; உறவின் உயிர் ஓட்டம் தெரியும்; உண்மை விடியலின் அர்த்தம் புரியும்; அன்பாய் பழகு, அகிலமும் அடிமையாகும் உனக்கு; இயல்பாகப் பேசு இனித்திடும் உன் வாழ்வு; பாரம்பரியத்தில் பழகிப்பாரு; பழமையில் பவித்திரம் இருப்பது தெரியும்பாரு: ஆத்திரப்பட்டால் உனக்கு உண்டு கேடு: அறிவை அழிவுக்கு பயன்படுத்தாமல் இரு; ஆயுத விளையாட்டில் உண்டு அழிவு; ஆன்மீகப் பயணத்தையும் தொடரு; விட்டுக் கொடுத்து வாழு; விலை மதிப்பில்லாத அன்பு பிறக்கும் பாரு; மனம் இருந்தால் மனிதனாகலாம் கேளு; பணத்தை பயிரிடமுடியாது பாரு: பாசத்தை விலை கொடுத்து வாங்க முடியாது பாரு; பாவ மூட்டையைச் சுமக்காமல் இருந்தால் சிறப்பு; மனதைத் திறந்தால் நீயும் சித்தனாகலாம் பாரு; பாசத்தை விதைத்துப்பாரு; பாவத்தை பயிரிட வேண்டாம் கேளு; நிதானமாக இரு; நீ வாழும் பூமியை நீயே சுரண்டாமல் இரு;  முடிவைத்தேடி ஓடி முடக்கியது போதும், முடங்கியதும் போதும்; விடியலைத் தேடி ஓடவில்லை என்றால், விழுந்து கிடக்கலாம் பாரு; எதிர்காலம் என்ற ஒன்று வேண்டும் என்றால், இயற்கையை எதிர்த்து போராடுவதை நிறுத்து; ஒன்றாய் வாழ்ந்திடப்பழகு உழவு இல்லை என்றால் சுழலும் உலகமே ஒரு சவக்குழி ஆகும் பாரு; விடியும் விடியல் புதிய விடியலைக் காட்டட்டும்; விரைந்தே எழுந்து விடியலைச் சுமந்துவரும் சூரியனை வணங்கிடு; பிறக்கட்டும் புதியவிடியல் புவியில்; நம்பி பிறக்கட்டும் நம்பிக்கையெனும் புதிய விடியல் நம் மனதில். காலை வணக்கத்தைக் கூறும் அன்பன் அ. முத்துவேழப்பன்

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media