Blog

வாழ்ந்து பழகு, வாழ்த்திப் பழகு

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 24/04/2024
  • Category: valkkai
  • Views: 135
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

ஓட்டைக் கடிகாரம் காட்டாது சரியான நேரத்தை தேடாத கண்களில் பிறக்காது இரக்கம்: பாடாத வாய் பாகவதர் ஆகாது; பழகாத மனசும் புழங்காத பாத்திரமும் ஒன்று; முள்ளின் கூர்மையை விட சொல்லின் கூர்மையின் வலி அதிகம்; வில்லை விட வேகமாய் வந்து [வ]தைப்பது விழி; உருகாத மெழுகுவர்த்தி கொடுக்காது இருடுக்கு வெளிச்சம்! உதவாத இதயம் கெடுக்காது விடாது. கொடுக்காது இரக்கத்துக்கு கருணையை, ஊதாத பந்து உதைக்க உதவாது, ஓதாத வாய் ஒன்றுக்கும் உதவாது; பாடாத ரேடியோ பார்வைப் பொருள் தான். பரிவு இல்லாத பார்வையும், பார்வைப் பொருள் தான். ஒட்டாத பாசம் எட்டி நிற்கும் தான்; கிட்டாத பொருளுக்கு மவுசு அதிகம் தான்; கிழக்கே உதயமாகும் சூரியனை மேற்கில் தேடாதே; கிரகங்கள் ராசி பலனை நம்பி கிறுக்குபிடித்து அழையாதே; கீழே விழுந்து கதறி சோகத்தை விரட்ட நினைக்காதே; கிழிந்த ஆடையும் கிழிந்த மனமும் ஒன்று, பயன் படாது. துணியை போத்தி வெட்கத்தை விரட்ட நினைத்தாலும், துணியை வாயில் பொத்தி துக்கத்தை விரட்ட நினாக்காதே; துணிவைப் போத்தி துக்கத்தை விரட்டு. ஆடு மேய்க்க ஓட்டை பிரித்து குச்சை எடுத்துச் செல்லாதே. துருப்பிடித்த இரும்பும், துருப்பிடித்த மனசும் ஒன்று துருப்பிடித்த இரும்பு உருதெரியாது போகும்; துருபிடித்த மனசு நம்மை உரு தெரியாது ஆக்காது விடாது. கொடிக் கம்பமாய் உதவாது நிற்காது தூர் வாரும் பொடிக் கம்பியாய் நெளிவது உத்தமம்! பிடரி இல்லாத குதிரையும் கழுத்தைதான். இறுதிச்சுற்றைத் தேடி ஓடும் தொடர் ஓட்டம் தான் வாழ்க்கைப்பயணம் இடறி விழுந்தாலும் எழுந்தோடு சிலந்தி போல் மீண்டும் . நகர்ந்து கொண்டே இரு கடிகாரத்தின் நொடி முள்ளாய்! சோர்ந்து போய் ஓரத்தில்அமராதே குத்துக் கல்லாய்! ஊர்ந்தாவது சென்றிடு நத்தை பூச்சி போல் முன் நோக்கி! விழுந்து கிடந்தால் சடலம் தான்; உயரத்தை அடைய உதவும் விடா முயற்சி. எண்ணத்தைப்போல வாழ்க்கை; வண்ணத்தைப்போல அழகு, வானத்தைப்போல மனது; துன்பத்தை போக்க இன்பம், இன்மே ஆகும் துன்பம்; கின்னத்தின் அளவு தான் கொள் அளவு; கன்னத்தின் அழகுதான் முகம்; சினத்தின் அளவு தான் கோபம்; சிக்கனத்தின் அளவு தான் நிம்மதியான வாழ்க்கை; பல வண்ணம் மலருக்கு அழகு; பல எண்ணங்கள் மனிதனுக்கு அழகு; வாழ்ந்து பழகு; வாழ்த்திப் பழகு; விழுந்தாலும் எழுந்து எழுச்சியுற்றுப் பழகு; தளர்ச்சியில் இல்லை வெற்றி; மனக் கிளச்சியில் இல்லை அமைதி; துளிர்க்காத மரம் வெறும் மரகட்டை; துடிப்பு இல்லாத மனிதனும் மரக்கட்டை; சேற்றைக் கண்டால் சுகம் எறுமைக்கு; சோற்றைக் கண்டால் சுகம் மனிதனுக்கு; காகிதத்தைக் கண்டால் சுகம் கழுதைக்கு; கழுதையாய் எறுமையாய் இருக்காதே, காணும் இடத்தில் எல்லாம் சுகத்தைத் தேடாதே; நேர்மையாய் இருப்பவனை அழவைக்கலாம், விழ வைக்க முடியாது. நேரத்திற்கு ஒன்று பேசுபவனை நம்பி வாழமுடியாது; கனவிலும் பிறர்க்கு தவறுகள் இழைக்காதே. கண்மூடித்தனமாய் செயல்படாதே; செய்த பின் தவறுக்கு வருந்தாதே; செய்யும் முன் வரும் தவறை உணரு; செலவுக்குப் பின் சேமிக்க நினைக்காதே; சேமித்த பின் செலவு செய்ய நினை; எல்லாவற்றையும் இழந்தாலும் நம்பிக்கை இன்னமும் இருக்கு என்று நினை. காலை வணக்கத்தைக் கூறும் அன்பன் அ. முத்துவேழப்பன்

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media