குறையின்றி கறையின்றி கவலையின்றி வாழ்வோம் பசுமை வளர்ப்போம், பசிபோக்கும் விவசாயம் காப்போம். வசிக்கும் பூமியை ரசிக்கும் பூமியாக்குபோம். புரிதலைத் துவங்குவோம் புவி பாலைவனம் ஆகுமுன் தடுப்போம். ஆசைகளைக் குறைப்போம் அழிவை தவிர்ப்போம்; ஆலைகள் சாலைகளை நிறைந்த நகரங்களை, பூஞ்சோலைகள் ஆக்குவோம்; ஆயிரம் ஆயிரம் மரங்கள் நடுவோம் புவியை சொர்க்க பூமியாக்குவோம். அன்பை மனதில் நடுவோம், மனிதப் பண்பை வளர்ப்போம், சுமையாய் நினைக்காது, சுகமாய் கூடி வாழ்வோம். பயிரை வளர்ப்போம், பசியைப்போக்கி உயிரைக்காப்போம். பணிவை வளர்ப்போம், பண்பை காப்போம். மரம் வளர்ப்போம் புவியை பூங்காவனமாக்குவோம்; வனத்தைப் பெருக்குவோம், வான் மழையை பெருவோம்; நன் மனம் வளர்ப்போம் . நற்குணத்தை பெருக்குவோம், மனிதம் காப்போம் கவனமாய் இருப்போம், கண்ணியத்துடன் வாழ்வோம். குறைகளை களைவோம். இனம் தாண்டி மதம் தாண்டி நற்குணத்தைத் தோண்டித் தேடுவோம்; குறையின்றி கறையின்றி கவலையின்றி நிறைவோடு வாழ்வோம். மதிய வணக்கத்தைக் கூறும் அன்பன் அ. முத்துவேழப்பன்
Snegaa
Chennai, Tamil Nadu, India.