மனமே மனமே மறதியே மா மருந்து; காலமே மனக் காயத்திற்கு களிம்பு; மறதியே மனம் நல்கும் நல் விருந்து; மறதியே நல் அமுது; விழுந்தே மறையும் சோகம் துக்கம் நம்மை மறந்து. மனமே மனமே போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து; போகவேண்டும் சோகம் நம்மை விட்டு மறந்து.; மனமே மனமே மறதியும் வரமெனும் துரும்பு வந்தே போகும் கோபங்கள் யாவும் மறந்தே போகும் நம்மை விட்டு. மறதியும் நமக்குக் கிடைத்த ஆறுதல் என்னும் பரிசு ஆறவைக்கும் கவலைகளை நம்மை மறந்து; மனமே மனமே மறதி மனக்காயங்களை ஆற்றும் தான்; கவலைகளை விரட்டும் தான்; கண்ணீரை துடைக்கும் தான்; நிகழ்வுகளை நினைவுகளை தொடராமல் மூடி மறைக்கும் தான்; மறதி ஏமாற்றத்தைம் ஏக்கத்தையும் விரட்டும் தான். மறதியும் நியதிதான் நம் நிம்மதியை காக்கும் போது; மறதியும் நிம்மதிதான் மனதை நொறுக்காத போது; நெருங்கி வரும் சோகங்களை மறக்கடிக்கும் போது. மறதியும் அவதிதான் மறக்கக்கூடாததை மறக்கடிக்கும் போது. மனமே மனமே போதை தரும் கண்ணே விருந்து; பொல்லாத கோபம் பொங்கவைக்கும் வெறுப்பை; சொல்லாமல் வந்தே கொல்லும் நட்பு பாசத்தையும் மறந்து; நாம், போக வேண்டாம் போக வேண்டாம் கோபத்தைச் சுமந்து; போக வேண்டும் போக வேண்டும் கோபத்தை மறந்து. மறதி; மறதி; நம் மனத்திற்குத் தரும் உறுதி; மனக்காயங்களை ரணங்களை மரத்துப்போக வைப்பது உறுதி; போதை மனமே போதை மனமே போக வேண்டும் மாயை மனதை விட்டு இறங்கி; மனமே மனமே மனதுக்கு வேண்டும் மாத்து மருந்து; போதும் என்ற மனமே தரும் சிறப்பு; சினமே சினமே சீறிப்பாயாமல் சிணுங்கியே சிறிதாய் சிந்து ; சிரிப்பே சிரிப்பே சிரிப்பாய் சிரிக்காமல் சிரித்தே மகிழ்ந்திடு; சிரிப்பால் செய்திடு குரும்பு; சிறப்பே சிறப்பு சீர்தூக்கி வாழ்வது சிறப்பு; பிறர் போற்றி வாழ்வது சிறப்பு. கசப்பே கசப்பு சோகத்தை சுமந்து வாழ்ந்தால் கசப்பு. பசப்பே பசப்பு பாழாய்போன பசப்பு; படுத்தியே விடும் இந்த பசப்பு; பகட்டே பகட்டு பாழ்படுத்தும் இந்த பகட்டு; மனமே மனமே புகட்டு புகட்டு நல்ல பாடம் புகட்டு; காயமே காயமே காயத்துக்கு வேண்டும் மருந்து; காயமே காயமே காயத்திற்கு வேண்டும் புன்னகை என்னும் மருந்து; குணமே குணமே குற்றம்காணின் வந்து ஒட்டும் கறை என்னும் குறை வந்து. மனமே மனமே செய்திடு செய்திடு நல்லதை மனம் உவந்து. நெஞ்சமே நெஞ்சமே வஞ்சம் செய்தால் உள் வந்தே உழட்டும் பகை; நஞ்சே நஞ்சே நாவிலிருந்து விழவேண்டாம் சுட்டெடுக்கும் வார்த்தைகள். மனமே மனமே ஏற்றிடு மாற்றத்தை; மறந்திடு ஏமாற்றத்தை; நல்ல மாற்றத்தை துவங்கிடு; மாற்றமே மாற்றமே மனம் உவந்ததை செய்திடு; ஏமாற்றமே ஏமாற்றமே எட்டி போய்விடு சோகத்தை மறைத்து. மனிதனே மறதியே பகைவருக்கு தரும் பெரும் தண்டனை; நடந்ததை மறந்து மீண்டும் பேசும் போது பெறுவான் மாபெரும் தண்டனை. மறைத்திட பழகாதே; மறந்திடப்பழகு; நல்லதை நினைத்திட பழகு. மன்னிக்க நினைக்காவிட்டாலும் மறக்க நினை மனமே மறதியே மா மருந்து
Chennai, Tamil Nadu, India.