Blog

பழம் பெருமை பேசும் பழைய சோறு

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 23/05/2024
  • Category: valkkai
  • Views: 110
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

குளு குளு ஐஸ் பிரியாணிதான் என் பழைய சோறு பழைய சோறு பழைய சோறு; பழம் பெருமை பேசும் பாசம் உள்ள வாசமான பழைய சோறு; தலை முறைகளாக வழக்கத்தில் இருந்த பழஞ்சோறு; ஆத்தா வடிச்ச சோறு; ஆறிப்போயி அடுத்த நாள் சாப்பிட வந்த அமிர்தமாம் இந்த பழைய சோறு; நொதித்தசோறு; நூறுவருத்திற்கு மேல் பண்டைய மனிதனை வாழ வைத்த சோறு; லாக்டோபேசிலஸ் உள்ளிட்ட உடலுக்கு நன்மை விளைவிக்கும் நுண்ணுயிரிகள் நிறைந்த சோறு; வைட்டமின்கள், நார்ச்சத்துகள்,அமினோ அமிலங்கள், தாது உப்புகள் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த சோறு; பாமரனிடம் பழகிய பழைய சோறு; அடித்தட்டு மக்களின் அன்றாட உணவே பழஞ்சோறு; உழைத்தவன் உண்ணும் சோறு; உழவனுக்கு கிடைக்கும் ஒரே சோறு; உண்டு கொழுத்தவன் உண்ண வேண்டிய சோறு; உடம்பின் உஷ்ணத்தை தனிக்கும் சோறு; நீச்சத் தண்ணியில் மிதக்கும் சோறு; நிரந்தரமாக கிடைக்கும் சோறு; நேத்து ஆக்கி, தண்ணீரில் ஊறவைத்து உறவாட வந்த ஊறச்ச சோறு; பாசத்தால் பிழிந்து, பவ்வியமாய் காலை மடக்கி காலையில் உண்ணும் சோறு; களைப்பை போக்கும் சோறு; காசு பணம் தேடாத சோறு; நோகாத மனத்தோடு உண்ணும் சோறு; நோயெல்லாம் பறக்க வைக்கும் சோறு; எளிமையான சோறு; ஏழ்மைக்கு உவந்த சோறு; ஏழை குடிசைக்குள் புகுந்த சோறு; குழம்பு சைடு டிஷ் என்று ஒன்றும் கேட்காத சோறு; இந்த சோறு என் பழைய சோறு; பழைய சோறும், தொட்டுக்க ஊருகாயும் கடித்து மிளகாயும் இருந்தால் நல்ல ஜோரு. அமிர்தம் தான் இந்த பழைய சோறு; இது உணவல்ல உடல் ஆரோக்கியத்தை காக்கும் அருமருந்து. குளு குளு ஐஸ் பிரியாணிதான் என் பழைய சோறு. பழம் பெருமை பேசும் பழைய சோறு

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media