Blog

விடை கொடு அவசர அதிசய வாழ்க்கைக்கு

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 03/06/2024
  • Category: valkkai
  • Views: 115
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

பழைய உறவு பழகி சலித்துப் போன ஒன்று; பழைய மரபு பாழாகி பழுதானது; கலாச்சாரம் பண்பாடு, காணாமல்போன கண்ணிரெண்டு; காடு கழனி யெல்லாம், காய்ந்து கழண்டு போனது; அண்ணன் தம்பி அண்டை வீட்டு உறவும், உருண்டு அடித்தேபோனது அன்பை மறந்து. ஆடிப்பட்டம் விதைத்த நாளுண்டு, இவன் ஆடாத ஆட்டமே இல்லை இன்று, தேடிவந்த சொந்தம் அன்று; தீண்டாத சொந்தம் இன்று; தேடிப்போய் கண்டு சொந்தம் கொண்டாடியது அன்று; தேய்ந்தே காணாமல் போகும் உறவுகள் இன்று; அடுத்தவனுக்கும் கொடுக்கும் நாட்கள் அன்று; அடுத்தவனை கெடுக்காத நாளே இல்லை இன்று; எடுத்ததற்கெல்லாம் சண்டை இன்று; எட்டிப் பார்க்காத உறவும் உண்டு, தேடி வந்த பந்தம் அன்று, தள்ளியேப் போனது சொந்தம் இன்று; கூட்டுக் குடும்பம் கண்டது அன்று, குதுகலச் சிரிப்பும் உண்டு. கூண்டாட்டம் வீடு இன்று; கொல்லை போனது, கூட்டுக்குடும்ப முறையின்று; பாட்டிக்கும் பல்லு உண்டு, படுத்தாத பாடு அன்று. பாட்டிலுக்குள் குடியும் உண்டு; படுத்தாத பாடு இன்று. கலாச்சாரம் கண்டது அன்று; கள்ளச் சம்சாரம் கண்டது இன்று; காசு பணம் தேடி கலாச்சாரத்தை மறந்தது இன்று. பணமானது பாசம்; ரணமானது விசுவாசம்; கட்டிக்காத்த கற்பு அன்று; கட்டவிழ்ந்தது வாழ்வு இன்று. விவரம் தெரியாத வாழ்க்கை அன்று; விரும்பியே சீரழிந்த வாழ்க்கை இன்று. சைக்கிள் ஓட்டிய தடையம் அன்று; சகிக்காமல் ஓடும் கைபேசி பணயம் இன்று. பணத்தை கையில் பார்த்த தில்லை அன்று. பர்சுக்குள்ளே அட்டையாய் , கைபேசியில் பணமில்லா பரிவத்தனையாய் மாறியது இன்று; பருகிட பானை நீரும் உண்டு அன்று; பாட்டிலுக்குள் புகுந்தது நீரும் இன்று; சோற்றுக்கு குழம்பும் உண்டு சொட்டான் போட்டே உண்ட மணமும் உண்டு. ஆக்கியவர் கைக்குள் பாசமும் உண்டு அன்று; வீட்டைத் தேடி வந்தது துரித உணவும் இன்று; அண்டை வீட்டுக்காரரிடம் பண்டம் மாற்றம் அடியோடு காணாமல்போனது இன்று; வானெலி பெட்டி அன்று; வழக்கம்போல நாடகம் வார ஒலிசித்திரம் அன்று; பழகிப்பான குத்து பாட்டு இன்று; கைபேசி கைவேசியானது இன்று; முகநூலும் உண்டு; டுவிட்டரும் உண்டு வாட்சாப்பில் வருபவரும் உண்டு; உருகுழைந்தது வாழ்க்கையேயின்று; அரிசி புளி தானியம் எல்லாம் உரியில், அடுக்குப் பானையில் உறங்கிய காலம் போக; அடுப்பங்கடை ராஜ்ஜீயம்மெல்லாம் அடித்தே போனது இன்று. அடைபட்ட டப்பாக்களும்; உரையில் புகுந்தே ஒருநொடி உணவாய் உலாவி வருவதைப்பாரீர்; ஆட்டுக் குழவி அம்மியெல்லாம்; ஆட்டங்கண்டு ஓடியதைப் பாரீர்; அம்மாவின் ஆட்டிய உரலில்; அள்ளி எடுத்த தின்ற மாவுகளெல்லாம்; அழகாய் மினுக்குது பாக்கெட்டுக்குள்ளே; அஞ்சறைப்பெட்டி அதிசயப்பெட்டி அழகாய் நிரம்பிய பெட்டி; காசுபணத்தையும் பதுக்கி சுமந்த பெட்டி; கண்டவுடன் சிரிக்கும் பெட்டி; காணாமல் போனது அடுப்பங்கரையைத் தாண்டி இன்று. மஞ்சள் பூசிய முகமெல்லாம் முகச் சாயமாய் புகுந்தது பாரீர்; அழகிய கூந்தல் அதில்பூத்த பூக்கள் எல்லாம் அழிந்த கோலங்கலாதது; ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லை; அடையாத சமத்தவம் ஆடையில் பிறந்தது பாரீர்; சங்கம் வளர்த்த எனது தமிழ்; சாப்டுவேர் வாழ்க்கையாய் சாபக்கேடானதே; அச்சம் நாணம் மடம் எல்லாம் அடித்த சென்ற பின் மிச்சம் இல்லையடா மினி மினுக்கும் ஆடைக்குள்ளே; அடங்கினாள் அழுக்குச்சிலையாய், அரைகுறை ஆடையிலே. வீட்டுக்குச் சன்னல் இல்லை, விட்ட காற்று வந்தே போக ஆடையில் வந்தது சன்னல் கதவு; கண்ணாடி வலையலும் கண்மையும் முன்னால் நிற்கும் மூக்குத்தியும் கள்ளம் கபடு அற்று சுற்றித்திரிந்த காதணியும் கழண்டே ஓடியது பாரீர்; திண்ணைப் பேச்சும்; தெருப்பேச்சும் திரும்பிவராமல் போச்சி; கைபேசியில் காலம் போச்சி; கட்டுப்பாடும் விட்டே போச்சி; பத்திரிக்கை படித்த காலம் மாறி; நித்திரையும் நீண்டு போச்சி; சாணம் தெளித்து போட்ட கோலம்; சலனமில்லாமல் மாறிபோச்சி; அடுக்கு மாளிகையில் அடங்கிய வாழ்க்கை அடுத்தவர் வீட்டுடன் அண்டாத வாழ்க்கை அடுக்கடுக்காய் வந்த தொல்லை பல. மனக் கதவு போன்று கதவு இருந்தும் மூடாமல் திறந்தே கிடந்த காலம் அன்று மூடிய மனவீட்டில் திறவாத காதவே இன்று; இடியாப்பம் இட்டிலியெல்லாம்; நூடுல்ஸ் பர்கராய் மாறிப்போச்சி; கோவில் குளமெல்லாம், கொப்பளிக்கிது காதல் நோயில்; கொமட்டும் கேடுகட்ட நாகரீகம்; தெய்வீகத்தை தேடும் ஆன்மீக வாதிகள் அன்று; தெய்வத்தைத்தேடும் ஆசைபிடித்த மனிதர்கள் இன்று; ஒயிலாட்டம், மயிலாட்டம், மாடாட்டம், சிலம்பாட்டம். உறியாட்டாம், உறுமியாட்டம் கரகாட்டம், பொய்கால் குதிரை யாட்டம், பறையாட்டாம், தேவராட்டம், தப்பாட்டம், பாம்பாட்டம் புலியாட்டம், கோலட்டம், காவடியாட்டம், கும்மியாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், சேவையாட்டம், சாமியாட்டம், காளியாட்டம், பேயாட்டம். எல்லா ஆட்டங்களும், எங்கே போனது ஆட்டங்கண்டு; தெரு கூத்து இப்போ கேலி கூத்தானது. கருவரையை காத்த காலம் மாறி; கருசிதைக்க காத்திருக்கும் கூட்டம் இன்று; உருகுலைக்க உல்லாச வாழ்வில் உருளுது புரளுது இந்த உலகம்; சோத்து மிட்டாய், சொறி முறுக்கு, அதுரசம், அடை, சிலேபி, கடலை உருண்டை, கமர்கட்டு தெவிட்டாத தேன் மிட்டாய், இலத்த வடை ; எல்லாம் அடையாளம் தெரியாமல் போனது. குச்சி மிட்டாய் குல்பியானது இந்தக்காலம், கூல்பார் வந்து, கூடவே பேஸ்ரி, கோம்போ பேமிலி, என்று வெரெய்டி வந்தது பாரு. இழுவை மிட்டாய், கையில் சுற்றியது இனிப்புக் கடிகாரமாய்,கழுத்தில் விழுந்தது, தித்திப்பு முறுக்கு சங்கிலியாய்; கையில் வந்தது மாய மோதிரமாய் அன்று அச்சி முறுக்கில் அத்தனை ஆசை; இஞ்சி மரப்பாவில் கலங்கியது கண்ணீர்; இடியாப்பச் சுருளில் சுருண்டது சுவை; கோலி சோடாவை சுவைத்து கொண்டாட்டம் வந்தது. பயாஸ்கோப் டப்பாவில் பார்த்த நினைப்பு; பாடியே பயத்தை ஓட்டி, வயக்காட்டில் பயத்தை விரட்டிய ஓட்டம். வட்டத்தில் வைத்து சாட்டையால் சுழன்ற பம்பரம்; கில்லி விளையாட்டு, கிடு கிடு கபடி விளையாட்டு; வட்டக் குழியில் கோலியைப் போட்டு உருட்டிய விளையாட்டு; குட்டிச்சுவற்றில் கும்மாளம் கோட்டைச் சுவரைத்தாண்டி சுவைத்த திருட்டுக் கனிகள்; பெண்களின் நொண்டி விளையாட்டு; கண்கள் சுழல, கைகள் சுழட்ட விளையாடிய, சிட்டிக்கல் ஆட்டம்; கள்ளத் தனத்தோடு ஆடிய பல்லாங்குழி ஆட்டம்;ஆடு புலி ஆட்டம், அம்மானை விளையாட்டு; கொக்கலிக்கட்டை ஆட்டம், ஆண்கள் அடி தடியோடு ஆடிய கபடி ஆட்டம், அமர்க்களமாய் விளையாடிய கள்ளன் போலிஸ் ஆட்டம்; பிடிபடாமல் ஆடிய பச்சைக்குதிரை கொக்கோ ஆட்டம்; வெட்டுக்கிளி வேட்டை வண்ணதுப் பூச்சை பிடித்தே பறக்க விட்ட ஆசை குட்டிபோட வைக்க கட்டிபோட்டே, புத்தகத்தில் புதைத்த மயில்தோகை; எல்லாம் எங்கே புதைந்தது. வெறுதாய் வீதியில் நாக்கால் நக்கி சாப்பிட்ட குச்சி ஐஸ் காலம் போக, கூட்டாய் குல்பி ஐஸ் தின்று கும்மாளம் அடிக்கும் காலம் வந்தது பாரு. பிறந்தநாள் வடை பாயாசம், பொங்கல் படையல்யெல்லாம் மாறி, பார்டியென்றும் ஓட்டல் என்றும் திரியுது பாரு. அம்மா கலாச்சாரம், அய்யோ ஆயா கலாச்சாரத்தில் புகுந்தே ஓடுது பாரு அலுவலகம் செல்லும் அம்மாவுக்கு வரும் ஒரு நேரம், அப்பா வரும் ஒரு நேரம், ஆளுக்கு ஒரு வேகம், அன்பாய் பேசிட அப்பாயிண்மெண்ட் வேனும்; கைபேசிப் பாசமிது; கரைந்தே போனது பந்த பாச உறவு; படித்த படிப்புக்கு வேலையில்லை; அப்பன் ஆத்தா மகன் மகள் உறவுகள் எல்லாம் ஆண்ராய்டு போனுக்குள்ளே புகுந்தது பாரு; முதுகில் சுமக்குது புத்தகப்பையை முக்கால் கழுத்தை நிரப்பியே ஓடுது பிள்ளை; முட்டாள் தனமான பாடத்திட்டம், சுமையை சுமந்தே வாழத் துவங்குது பிள்ளை; பள்ளிப் பருவம், துள்ளிய பருவம் அன்று தள்ளியேப் போகுது குழந்தை இன்று. காசுக்காகப் பள்ளிக் கூடம், கலையிலந்து போனதைப்பாரீர். காசுக்காக கலைப்போட்டி, விலைபோனது ஆசிரியர் மாணவர் உறவு; வீதியெங்கும் ஸ்டடி சென்டர்; காசு பணத்தில் சிறைச்சேதம் செய்யப்பட்ட மாணவன் வாழ்கை. ஓடி ஓடியே தேயிது மனசு, ஓயாமல் போட்டி நுழைவுத்தேர்வு என்று. கல்விக்குத் தரமும் இல்லை, கற்ற பலருக்கு தராதரமும் இல்லை; கற்க மனமும் இல்லை படிப்பிக்க தேர்வு, பணிக்குத்தேர்வு, பள்ளி சேர்க்கையில் தேர்வு, பெற்றோர்கும் தேர்வு, தேர்வுப்பயத்தில் தவிப்பவர் பெற்றோர். பெற்றோரின் கனவுக்குள், குழந்தைகளின் அழுக்கு வாழ்க்கை. இயந்திர வாழ்க்கையில் வந்தது தந்திரம்; எல்லாவற்றிலும் குறுக்கு புத்தி; திறமைக்கு வேலையில்லை திரும்பி பார்க்கும் இடமெல்லாம் பணச்சந்தையானது வேலை வாய்ப்பு சந்தை; படித்தே பாரை ஆண்ட காலம் போகி; பாருக்கு போய், பாட்டிலும் கையுமாய், பாலாய் போனது மாணவ சமூகம்; வெற்றி பயணம் போய், வெறி வேட்டையில் ; வீழ்ந்தது வாழ்க்கை; நரி வாழ்க்கையில்; நாசமாய் போனது மனித இனம். ஆசிரியர் மாணவி உறவு, அன்பான பாச உறவு; ஆசான் சீடன் என்ற உறவு; அழிந்தே போவது சாபக்கேடு. முதலும் முடிவும் மாறிப்போச்சி; விடுதலை உணர்வும் விட்டுபோச்சு; விடுதலை பெற்றும் விடுதலில் விடைதெரியாத வாழ்க்கை விடைதெரியாது பயணிக்கும் விளங்காத வாழ்க்கை தலைமுறையா தருதலையா விடுதலையா விடைதான் இல்லையா தவம் இருந்து பெத்த பிள்ளை தள்ளியே ஒதுக்கி வைக்க விரும்புது; தள்ளியே போச்சி பாசமும், எழுந்த விடியல் விழுந்து போச்சி; எழுச்சி மிக்க வாழ்க்கை; எல்லை தாண்டி தொல்லையாய் போச்சி, கைபேசிப் பாசத்தில், கள்ளம் கபடமற்ற கல கல பேச்சி காணாமல் போச்சி, மீண்டும் பிறக்குமா பழமை புகழைத் தேடி புதிய விடியல்; மாண்டுபோன காலச்சாசம் மறக்காமல், மீண்டும் மீட்கப்படுமா; வறுமையிலும் வசந்தம் அன்று, வசந்தத்தில் வறுமை இன்று, நம்மை விட்டுப்போனது பல, நாம் விட்டது விரட்டியது பல, விழுந்து அழுதது போதும் விடியலைத் தேடு விடை கொடு அவச அதிசய வாழ்க்கைக்கு. காலை வணக்கத்தைக்கூறும் அன்பன் அ. முத்துவேழப்பன்,

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media