சுவர் கடிகாரம் சுமை என நினைக்காது சுற்றி வரும் சுவர் கடிகாரம். சுறு சுறுப்பாய் சுற்றி வந்தே நேரத்தை காட்டுகின்றாய். வாழ்வில் ஏற்றம் இறக்கம் மாறமுடியாதது மாற்றமுடியாதது, சுற்றும் கடிகார முள்ளைப் போன்றது என்று சுற்றிச் சுற்றி வந்தே எடுத்துக்காட்டுகின்றாய்; மாற்றம் மாற்றம் என்பது ஏமாற்றமே மாற்றம் என்று நாற்றத்தை சுமக்காதே என்றே ஒவ்வொரு முறையும் மணி அடித்து எச்சரிக்கின்றாய்; தத்துவ ஞானியே ஓடி ஓடி ஒறுநாள் நிறந்தமாக நின்றே மனித வாழ்வின் ஓட்டித்தின் ரகசியத்தைக் சூசகமாக கூறுகின்றாய்; உண்பதற்கும் உறங்குவதற்கும் நேரத்தை வீணடிக்காது உழைத்துப்பார் பிழைத்துப் பார் என்கின்றாய் சுவர் கடிகாரமே ஒய்யாரமாய் இருந்தே ஊசலாடுகின்றாய்; ஓயாமல் எங்களுக்காக சலிப்பின்றி உழைக்கின்றாய்; ஓய்வில்லா உழைப்பாளியே சரியாய் நேரம் காட்டுகின்றாய்; சற்றும் கவலைப் படாது உன் பணியைச் செய்கின்றாய்; சுற்றி சுற்றி வந்தே சுழலும் உலக வாழ்க்கையின் தத்துவத்தை காட்டுகின்றாய்; சுற்றுவது நின்று விட்டால், சுடுகாடு தான் என்பதை ஒற்வொரு நொடியும் நினைவு படுத்துகின்றாய்; ஊரெல்லாம் உறங்க, நீ மட்டும் விழித்திருக்கின்றாய், நேர்மையானவனே; நேருக்கு நேர் பார்ப்பவனே; யாருக்கும் பயப்படாது பயணம் செய்பவனே, குடும்பத்தோடு உழைக்கின்றாய்; குடு குடு என்று ஓடினாலும் குடும்பத்தோடு சேர்ந்தே உழைக்கின்றாய்; சுற்றி சுற்றி வந்தாலும் மணிக்கு ஒரு தடவையாது, ஒன்றாய் குடும்பத்தோடு சேர்கின்றாய்; பெரிய சிறிய முள்ளாகிய தாய் தகப்பனாகிய நீவீர் குழந்தை முள்ளாகிய நொடி முள்ளோடு, உல்லாசமாய் உலகத்தை மறந்து, கவலை யின்றி சுற்று கின்றாய்; சிறிய குடும்பம் சீரான குடும்பம் என்பதை சிந்தைக்கு நினைவுபடுத்துகின்றாய்; கரம் கூப்பி கும்பிடுகின்றேன், உயரத்தில் இருந்தே கவனிக்கின்றாய்; சிகரத்தை தொட்டாலும், சீறாய் நொடிக்கு நொடி ஓடுகின்றாய்; நொடிந்து போகாது சுறுசுறுப்பாக இருக்கிறாய்; நொடியை நிமிடமாக்கி நிமிடத்தை மணியாக்கி, மணியை நாளாக்கி, காலச் சக்கரம் சுழல்வதை காட்டு கின்றாய்; பகல் இரவின் பரிமானத்தை பக்குவமாய் எடுத்துக் காட்டு கின்றாய்; மணிக்கு ஒருமுறை மணி அடித்து மனிதனை நினைவு படுத்துகின்றாய்; வாழ்வில் ஒரு மணிநேரம் கழிந்து விட்டது மானிடா, என்றே சுட்டி காட்டியே சுற்றுகின்றாய்; பதட்டம் இல்லாமல் நிதானமாக சுற்றுகின்றாய்; பாவி மனிதன், பதட்டப் பட்டே, பாதி வாழ்க்கையைத் தொலைக்கின்றான்; கால மணியே, உன் கடமைக்கு அளவே இல்லை நீ ஆலைய மணியிலும் உயர்ந்தவன்; மானிடனே கடிகாரமாய் உழை; கடினமாய் உழை; கவனமாய் உழை; கவலை கொள்ளாது உழை; காலத்தை பொன்னாக்கு, மண்ணாக்காதே; கவலையை மறந்திடு; மண்ணுக்கும் வீரியம் உண்டு, மனிதா உன்னுள் பிறக்கட்டும் வீரியம். விழுந்து கிடக்காது, விரைந்து செயல்படு; அழகுக் கடிகாரம் அலக்காரக் கடிகாரம் அல்ல ; அறிவாய்க் கூறுவது, அற்ப வாழ்க்கையல்ல அற்புத வாழ்க்கை மனிதப் பிறவி, சொர்ப்ப வாழ்க்கையை சொர்கமாய் மாற்றி அழகு படுத்து புவியில் தங்கி இருக்கும் வரை குடும்ப வாழ்க்கையை கடிகாரத்திடம் இருந்து கற்றுக் கொள். காலை வணக்கத்தைக் கூறும் அன்பன் அ. முத்துவேழப்பன்
Chennai, Tamil Nadu, India.