Blog

பூலோகம் தானப்பா

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 14/06/2024
  • Category: iyarkai
  • Views: 141
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

பூலோகம் தானப்பா, அன்று பூக்கள் நிறைந்த சோலையப்பா; பூமியை எரித்து விட்டு, இவன் இனி புகலிடம் போவது எங்கப்பா. பொய்யும் புறட்டும் நிறைந்த உலகமப்பா; பொல்லாத மனிதன், பொழுது போக்கியே பழுதானது இந்த பூமியப்பா; மனிதம் மறைந்து, மனிதாபிமானம் மக்கிப்போனதப்பா; இறுகிய மனதால் இரக்கம் இதயத்தை விட்டு இறங்கி ஓடி வெகு நாளானதப்பா; புண்ணிய பூமியப்பா புண்ணாகியதேனப்பா. புரியாத மனிதக் கூட்டம், இனி புகலிடம் தேடி ஓடுவது எங்கேயப்பா. மண்ணையும், மண்ணுயிரினங்களையும், மக்கவைத்தவன் இந்த மனிதனப்பா. புரியாத புதிரப்பா புவி சூறையாடப்படுவது ஏனப்பா; புண்ணியம் நிறைந்த புவியப்பா, இன்று புரிதல் இல்லாமல் புதைந்து போவது கண்ணியம்தானா அப்பா; கலங்கப் படுத்தியவன் இந்தக் கனவான் மனிதன் தானப்பா. குந்திவாழும் இந்த பூமி கொஞ்சம் கொஞ்சமாக, அழிவதைப்பாரப்பா; பஞ்சமில்லாம பாய்ந்த ஆறு, பாழாய்ப் போய் சாக்கடையும், கழிவுமானது ஏனப்பா. வஞ்சனை இல்லாம பெய்த மழை வராமல் போனது ஏனப்பா; எழில் தங்கிய இந்த பூமி, வெயில் தாக்கி வெந்து போவது ஏனப்பா. புதுமை புதுமை என்று புழுங்கித் தவித்து; புதைந்து போவது மனித இனமப்பா. தெரியாது செய்த செயல் இல்லையப்பா; புவிக்கு செய்வினையும், பில்லி சூனியம், வைத்தது இவன் தானப்பா. புறப்பட்டு வந்த காற்றையும் பதுக்கியது யாரப்பா; புயல் வந்தால் தான் மழை என்று, பருவகாலங்கள் பகைத்துப்போனதும் ஏனப்பா. பூலோக சொர்க்கம் இன்று பொய்த்துப் போனது ஏனப்பா; தாய்ப்பால் தறாத தாயும் தரணியில் இன்று உண்டப்பா; தாய்மையில்லாமல் பிள்ளை ஈன்றது, இயற்கையின் பிழை இல்லையப்பா. ஏனப்பா ஏனப்பா இந்த நாகரீகச் சீரழிவு ஏனப்பா; நச்சுக்காற்றையும், நச்சுப் பொருள்களையும், தேடித் தேடி போய் வாங்குவதும் ஏனப்பா; மெய்ஞான பூமியை விஞ்ஞான விந்தை என்றே; வேண்டாத செயல்களைச் செய்வதும், வேண்டாத பொருள்களை குவிப்பதும் ஏனப்பா. விலைமதிப்பற்ற மனிதநேயத்தை கொன்று விட்டு; பணம் பணம் என்று, பாழாய் போன பண ஆசையில், விஷ வைரஸின் பிடியில் இருந்து, தப்பிக்க விடைதெரியாது, பயணம் செய்வதும் ஏனப்பா. மானம் கெட்ட வாழ்க்கையில், மனிதனே மனிதனை; சுரண்டுவதைப் பாரப்பா. பாசத்தை விலையாக்கியவன் இவனப்பா. பாவி இவனின், பாழாப்போன ஆசையால்; பாழடைந்தது இந்த, பூமிக் கூண்டப்பா; ஆதிமனத வம்சம் நாமப்பா; இன்று ஜாதி மனிதனாய்; வியாதி மனிதனாய் ஆனது ஏனப்பா; அறிவுசார் உலகமென்றே; அகந்தை, ஆணவத்தில், அழிவைத் தேடி போவதும் ஏனப்பா. காடுகளை அழித்து விட்டு; கார் கணிப்பொறி என்று குப்பையை நிரப்பிவிட்டு; காலார நடந்து போக இடம் இல்லாமல், மனிதப் புழுவாய் நெழிய நாட்கள் குறிப்பதும் ஏனப்பா. கண்ணியமாய் மனிதநேயத்தை மறுபடியும் காத்து, தன்மானம் காற்போம்; நீர் நிலம் பசுமை மலை காடுகளைச் சுமக்கும் பூமியை மதிப்போம், மண்ணாசை, பொன்னாசையைவிட்டு; மறுபடியும் மனித நேயத்தை விதைத்து, புவியில் அன்பை, பண்பை, பணிவை அடக்கத்தை ஈகையை இரக்கத்தை காருண்யத்தை கருணையை பூக்கவைப்போம்; பக்குவமான வாழ்வை பூமித்தாய் மடியில் நாம் வாழ்வோம்; புதிய விடியல் பூமியில் புறப்பட இன்றயை விடியலுக்கு வணக்கம் வந்தனம் செய்போம்.

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media