பூ பூ சிரிப்பு; பூக்காமல் பூத்தப்பூ சிரிப்பு; பூரிக்க வைக்கும் பூ சிரிப்பு; புன்னகையே சிரிப்பு; அழகே சிரிப்பு; சிரிப்பே அழகு; சிரிப்பது பேரழகு; சிரித்துப் பார்த்தால் தனி அழகு. இதழ்கள் விரிந்தால் சிரிப்பு; இதயம் விரிந்தால் துயரம்; தானாக சிரித்தால் பைத்தியம்; தனிமையில் சிரித்தால் துயரம்; தடுமாறி தடுமாறி சிரித்தால் சோகம்; கண்கள் சிரித்தால் கனிவு; கலவரத்தில் சிரித்தால் கொடூரம்; ஆசையாக சிரித்தால் அன்பு; ஆவேசத்தோடு சிரித்தால் ஆத்திரம்; அடக்கமுடியாது சிரித்தால் கொண்டாட்டம்; அடங்க வைத்து அடிமைப் படுத்தி சிரித்தால் திண்டாட்டம். அன்னையின் சிரிப்பில் ஆனந்தம்; அந்தரங்கமாக சிரித்தால் ரகசியம்; அடக்கத்தோடு சிரித்தால் இரக்கம்; அடங்காது சிரித்தால் அகம்பாவம்; அப்படியே சிரித்தால் அப்பாவித்தனம்; அப்பாவின் சிரிப்பில் தப்பாமல் வரும் ஊக்கம்; மழலையின் சிரிப்பில் மகிழ்ச்சி; மம்மதை சிரிப்பில் இகழ்ச்சி. விரோதியின் சிரிப்பில் நக்கல்; வெறியனின் சிரிப்பில் விரசம்; வியாதியில் சிரித்தால் துக்கம்; உழைப்பாளி சிரித்தால் களைப்பு; உதவாக்கரை சிரித்தால் களிப்பு; உன்னையும் மறந்து சிரித்தால் சந்தோசம்; உன்னையே நொந்து சிரித்தால் சந்தேகம்; மம்மதை சிரிப்பில் இகழ்ச்சி; மரியாதையின் சிரிப்பில் புகழ்ச்சி; மானங்கெட்ட சிரிப்பில் இகழ்ச்சி; கள்ளம் இல்லாத சிரிப்பு கள களப்பு; கள்ளத்தனம் செய்தால் வரும் கை கலகலப்பு. வேண்டாதவர் விரும்பாதவர் இல்லத்திற்கு வந்தால் உள்ளத்தில் ஒட்டாமல் வருவது நமட்டுச் சிரிப்பு; அடங்க மறுப்பது அசட்டுச்சிரிப்பு; அதிகாரத்தோரணையில் வரும் அகம்பாவச் சிரிப்பு; வயிறு குலுங்க குலுங்க சிரித்தால் சந்தோசம், வயிறு எரிய சிரித்தால் சந்தேகம். சிரிப்பு, சர்வதேச பாசையே சிரிப்பு; சர்வத்தையும் அடக்குவது சிரிப்பு; வலிதெரியாது இருக்க வைப்பது சிரிப்பு; வலிமையுடன் இருக்க வைப்பது சிரிப்பு. தூவாமல் உதிர்வது சிரிப்பு; துடிக்க வைக்காதது சிரிப்பு; லஞ்சம் இன்றி தஞ்சம் ஆவது சிரிப்பு; மங்கையருக்கு மட்டுமல்லாது, மனிதனாய் பிறந்த அனைவருக்கும் உகந்த பூ சிரிப்பு; மனிதனிடம் மட்டுமே மலரும் பூ; மாலையில் கட்ட முடியாத பூ சிரிப்பு; போடாமலே போதை ஏத்தும் பூ சிரிப்பு; மன களைப்பை போக்குவது சிரிப்பு; போதும் போதும் என்ற அளவுக்கு ரு(ர)சிக்க வைக்கும் சிரிப்பு; நகைச்சுவையில் பிறக்கும் சிரிப்பு; நம்பிக்கை ஊட்டும் பூ சிரிப்பு; புயற்காற்றால் அசைக்க முடியாத பூ சிரிப்பு; பொல பொலன்னு உதிர்ப்பது சிரிப்பு; பொல்லாதவனிடமும் வரும் போக்கிரி சிரிப்பு; மழலையில் தவழும் பூ, சிரிப்பு; மன்மதன் விடுத்த பூ; மத்தாப்பாய் விரிந்தப் பூ; மணம் வீசாது மணக்கும் பூ சிரிப்பு; மறைக்க முடியாதப் பூ; முகத்தில் அரும்பும் பூ; முன்னால் வெடித்தப் பூ; கண்டிட வந்த பூ, களிப்பு ஊட்டும் பூ- சிரிப்பு; மகிழ்ச்சியின் நெகிழ்வே சிரிப்பு; மானசீக அன்பில் பிறந்த பூ சிரிப்பு; மன நோயை போக்கும் பூ சிரிப்பு; கைதட்டி சிரிக்க வைக்கும் பூ; கைகொட்டி சிரிக்கக் கூடாத "பூ சிரிப்பு; கசங்காத பூ; காயாத பூ; காய்காத பூ; சிரிப்பு; சேதாரம் இல்லாதது சிரிப்பு; ஆரோக்கியத்தின் அஸ்திவாரமே சிரிப்பு; ஆசையின் ஆதாரமே சிரிப்பு; சிநேகத்தைக் கூட்டுவது சிரிப்பு; சினத்தை அடக்குவது சிரிப்பு. ஆனந்த கண்ணீரையும் வரவைக்கும் சிரிப்பு; அகந்தை ஆணவக்காரனிடம் பிறக்கும் ஆணவச் சிரிப்பு; இகத்தாளம் ( “எகத்தாளம்” ) போடும் ஏளனச்சிரிப்பு; சாதித்த உடன் பிறக்கும் சாகச சிரிப்பு; அடக்க முடியாமல் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் பூ சிரிப்பு; சாகா வரத்தைத் தரும் பூ சிரிப்பு: மண்டிய கோபத்தில் முனகியே வரும் முனகல் சிரிப்பு; முன்னூறு தசைகளையும் அசைய வைப்பது சிரிப்பு; அசிங்க பேச்சில் பிறக்கும் அசைவ சிரிப்பு; விதைக்காது வந்த பூ; வாயிலே மலரும் பூ; வயிறு வலித்திட வைக்கும் பூ; வயது அறியாத பூ; சினம் கொள்ளாத பூ; சினந்திட சீண்டிட வைப்பதுவும் சிரிப்பு; நாவிலே நனையாத பூ; நோய் அண்டிடாத பூ; நொடியில் மலரும் பூ; குறும்பில் குதித்த பூ; குதூகலத்தில் உதித்த பூ சிரிப்பு; குழந்தையிடம் குழைந்த பூ; மௌனத்தின் வெடிப்பு; சிரிப்பு; அசையாதப்பூ, ஆனந்தத்தின் வதைப்பே, சிரிப்பு; குழந்தைகளிடம் குலுங்கி குலுங்கி வரும் பூ சிரிப்பு; குற்றம் குறையில்லாதது இந்த சிரிப்பு; அன்னையின் பாசத்தில் ஊரும் பூ சிரிப்பு; அன்பாய் நேசிப்பருடனும் வரும் பூ சிரிப்பு: அருவருப்பு அசிங்கமாய் உருவாகும் கோபம் சிரிப்பு; நக்கல் நையாண்டி சிரிப்பு, சீறிப்பாய வைக்கும் இந்த சிரிப்பு; சீவி சிங்காரிக்காமல் வரும் சிரிப்பு; நம்பிக்கை இல்லாத நயவஞ்சக சிரிப்பே நமட்டுச் சிரிப்பு; பணக்காரனிடம் பிறக்கும் பகட்டு சிரிப்பு; கோணங்கி சேட்டையில் பிறப்பது கோமாளி சிரிப்பு; வெறுப்பில் வெந்த பூ; நடிப்பில் நனைந்தப்பூ; துடிப்பால் துவண்டப்பூ; இறுமாப்பில் இறுக்கிய பூ; வாயில் வெடித்து, மத்தாப்பாய் விரிந்தப்பூ; வயதான பாட்டியின் வாயில் சிந்தியும் சிதறாமல் வருவது பொக்கவாய் சிரிப்பு; மனசைத் தொட்டப் பூ; ‘வாயில் உதிர்த்த பூ; சிரிப்பு; சீண்டலில் வரும் சிரிப்பு; சிணுங்களில் வரும் சிரிப்பு; சில்லறையாய் சிதறும் பூ சிரிப்பு; ஒருவரைப் பார்த்து சிரிக்க சிரிக்க வரும் கைகளப்பு; மகிழ்சியில் பூக்கும் பூ சிரிப்பு; குறும்பு குசும்பில் பிறக்கும் பூ வம்பு; குறையில்லாத செல்வமே சிரிப்பு. விவேகியிடம் பிறக்கும் அமைதியான ஆழமான சிரிப்பு ; விரும்பியவரிடம் வரும் அழகான சிரிப்பு; விரோதியால் விரோதத்தால் வரும் எரிச்சல் ஊட்டும் சிரிப்பு; புகைய வைப்பதும் சிரிப்பு; பொல்லாப்பில் முடியவைப்பதும் சிரிப்பு; மொழி அறியாத பூ; மௌனத்தையும் களைக்கும் பூ சிரிப்பு; வண்டு மொய்காத பூ; சிரிப்பு; பல்லெங்கும் பூத்தப்பூ; பொக்கை வாயனிடம் வதைந்த பூ; மௌனத்தின் சிரிப்பு, மலர்ந்திடும் இதழில்; சிரிப்பே வராத சிரிப்பு, மொக்கை சிரிப்பு. குழந்தையிடமும், தாத்தாவிடமும் பிறக்கும் பொக்கை வாய் சிரிப்பு; சந்தேகச் சிரிப்பில் வரும் பசப்பு சிரிப்பு; சந்தோசத்தில் பிறக்கும் ஆரோக்கிய சிரிப்பு; நம்பிக்கை துரோகியிடம் வந்த சிரிப்பு வெறுப்பு; நகையில்லாத சிரிப்பு , நகைச்சுவையில் பிறக்கும் சிரிப்பு; கயவனின் சிரிப்பு, காமகளிப்பு ; பகட்டுக்காரனிடம் பிறக்கும் பாழாய்போன சிரிப்பு. பார்க்காத சிரிப்பு பசப்பு; கேட்காத சிரிப்பு, கசப்பு; குழையும் சிரிப்பு, குரும்பு; நாடகம் போடும் சிரிப்பு நடிப்பு; இது போலியான சிரிப்பு, பொல்லாத சிரிப்பு; வதைத்திடும் சிரிப்பில் வந்திடும் வெறுப்பு; கேலி கிண்டலில் பிறக்கும் சிரிப்பு; கேட்காமல் வாங்க முடிவது சிரிப்பு; அசட்டுச் சேட்டையில் வருவது அசட்டுச் சிரிப்பு. ஏழையில் சிரிப்பில் வரும் ஏக்க சிரிப்பு; வலியவனிடம் வருவது, வக்கனை சிரிப்பு; எளியவமிடம் வருவது ஒட்டாத சிரிப்பு; வறியவரிடம் வருவது வாழ்கையில் எட்டாத ஒட்டாத சிரிப்பு; இளைத்தவன் மீது வருவது; நையாண்டி சிரிப்பு; சாதித்தவனிடம் வரும், சாகச சிரிப்பு; அசட்டு செயலால் வரும், அசட்டுச் சிரிப்பு அகந்தை ஆணவத்தில் பிறக்கும் அருவருப்பு சிரிப்பு அன்பாய் பிறக்கும் அடக்கமுடியாத சிரிப்பு; புதைந்த மனதில், நனைந்த சிரிப்பு, புன்சிரிப்பு; செல்லமாய் வருவது செல்லச்சிரிப்பு; நம்மைவிட்டு செல்லாதது சிரிப்பு; சொல்லாமல் வருவது சிரிப்பு; செல்லா காசாய் போகாத ஒன்று சிரிப்பு; குழந்தையிடம் கொப்பளிப்பது மழலை சிரிப்பு; அடுக்கிய அத்தனை பற்களும் தெரிய வருவது கல கல சிரிப்பு; 7வது சுவையாய் மலர்வது நகைச்சுவை சிரிப்பு; சுரக்கும் பாசத்திற்கும் சுவைக்கும் சுகத்திற்கும், உடலுக்கும் உயிராய் இருப்பது சிரிப்பு; நரம்பு மண்டலங்களுக்கு புத்துயிர் தருவது சிரிப்பு; சிரித்தால் வயது நூறு. மனவலிக்கு மாற்று மருந்தே சிரிப்பு; தோல்வியை துடைத்து, வெற்றிக்கு விதைபோடும் சிரிப்பு; பயணக்களைப்பை போக்குவது சிரிப்பு; திருட முடியாத சொத்தே சிரிப்பு; தன்னம்பிக்கையூட்டும் ஊக்க மருந்தே சிரிப்பு; சிரித்து கொண்டே இருந்தால் பொய் கூட உண்மையாய் தெரியும்; கடுங்கோபத்தையும் கரைய வைப்பது சிரிப்பு; கட்டாயமாய் நமக்கு வேண்டும் சிரிப்பு; உடலின் சக்தியே சிரிப்பு; உறவை ஊட்டுவதும் சிரிப்பு; உயிரைக்காப்பது சிரிப்பு; அன்பின் திறவுகோலே சிரிப்பு; சிரிப்பும் சீதனம் தான் சிதறியே வந்தால் சிறப்புத்தான். மனசு விட்டு சிரியுங்கள்; பிறர் சிரிக்க வாழாதீர்கள். சிரித்தே வாழுங்கள் சிரித்தால் அழகு , சிரித்துப் பழகு. காலை வணக்கத்தைக் கூறும் அன்பன் அ. முத்துவேழப்பன்
Chennai, Tamil Nadu, India.