திரும்பிப் பார் திரும்பிப் பார்; திரும்பிப் பார்; உன்னையே நீ திரும்பிப்பார்; சாவாகாசமாக ஆசுவாசப்படுத்தி சற்று நின்று நிதானமாகத் திரும்பிப்பார் ; வாழ்க்கை புத்தகத்தின் பக்கங்களை பக்குவமாய் புறட்டி திரும்பிப்பார்; படிப்பினை பெறவே திரும்பிப் பார், பயணித்த பாதையை அறிய திரும்பிப்பார்; நண்பன் எதிரி பகைவன் விரோதி துரோகி நல்லவன் கெட்டவன் நியாயக்காரன் அநியாயக்காரன் பாசக்காரன் ரோசக்காரன், பாவி அப்பாவி பக்கிரி பக்திமான் என்று பண்முக வேடம் தரித்துத் திரியும் மனிதனே திரும்பிப்பார்; திரும்பிப்பார் உன்தேடலில் திகைப்புத் தெரியும்; உன் தேடலின் தவிப்புத் தெரியும்; திரும்பிப் பார்; திரும்பிப் பார்; நீ ஓடிய ஓட்டத்தின் வலியும் வலிமையும் ; வடுக்களும் சுவடும் தெரியும்; திரும்பிப்பார் திரும்பிப்பார் கடந்த காலத்தை சற்றே திரும்பிப்பார்; நடந்து வந்த பாதையை, கடந்து வந்த பாதையை சற்றே திரும்பிப்பார், தோல்வியின் வலி தெரியும்; தோள்கொடுத்த சில நல் உள்ளங்களின் கருணை தெரியும்; நெகிழ்ச்சியும் இகழ்ச்சியும் தெரியவரும்; உன்னை தோற்கடித்தவனின் குணம் தெரியும்; திரும்பிப்பார் தைரியமாகத் திரும்பிப்பார், நீ இழந்தவைகள் நினைவுக்கு வரும்; நீ கடந்து சென்ற கஷ்டங்கள் கட கட வென்று நினைவுக்கு வரும்; திரும்பிப்பார் திரும்பிப்பார் பயம் இன்றி திரும்பிப்பார்; சோகத்தின் தடையம் தெரியும் ; சொந்தத்தின் சுகம் தெரியும்; தியாகத்தின் திடம் தெரியும்; நீ கேட்ட வார்த்தைகளின் வலியும் வடுதெரியும்; நீ தேடும் வாழ்க்கையின் அர்த்தம் புரியும்; இன்று நீ வாழும் வாழ்க்கையின் துவக்கம் தெரியும்; நீ கண்ட தயக்கம் குழப்பம் தெரியும்; பட்ட பாடு தெரியும், பயணத்தின் நீளம் தெரியும்; பணத்தின் செல்வாக்கு புரியும்; பயத்தின் பாரம் தெரியும்; செய்த தவறுகளை மறைத்த உன் சாதூர்யம் சமத்தும் தெரியும்; மனதின் ஏக்கம் தெரியும், தங்கிருந்த துக்கம் தெரியும்; தாங்கிய சோகம் தெரியும்; தயங்கிய பயம் தெரியும்; தவித்த பாசம் தெரியும்; தடுமாறிய நெஞ்சம் தெரியும்; தவறுகளின் தடுமாற்றம் தெரியும்; எனவே திரும்பிப்பார். நீ விட்டுச் சென்ற உன்னை விட்டுச் சென்ற பலவற்றை நினைக்கத் திரும்பிப்பார். திரும்பிப்பார் உன்னை தாளாட்டிய தாயின் அன்பு பாசமும் ஏக்கமும் தெரியும்; உன்னை தாங்கிய தகப்பனின் தோள்வலி தெரியும்; அவன் கொண்ட வைராக்கியமும் தியாகமும் தெரியும்; நட்பின் அருமை தெரியும்; உறவின் பெருமை தெரியும்; நடமாடுவதின் அர்த்தம் தெரியும்; உறவாடிய உள்ளங்களின் கனிவு தெரியும்; ஊமையாகிய பல மர்மங்கள் தெரியும்; உனக்குள் உறங்கிக் கிடக்கும் சில பல கேள்விகளுக்கு பதில் தெரிய வரும்; திரும்பிப்பார் திரும்பிப்பர் உன் இளமையை திரும்பிப்பார்; உன் இல்லாமையை உன் இயலாமையை திரும்பிப்பார்; வாழ்க்கையில் திரும்பிப்பார்; வாலிப குரும்பை திரும்பிப்பார்; வாழ்ந்த வாழ்க்கையின் குதூகலம் தெரியம்; வலிதெரியாது விளையாடிய சிறுபிராயம் தெரியும்; வாலிப குசும்பும் தெரியும்; சிரிப்பும் உன் கண்முன் சற்றே தோன்றி மறையும்; திரும்பிப்பார் காலத்தின் ஓட்டம் தெரியும்; உன் மனப்போராட்டம் தெரியும்; திரும்பிப்பார் உன்னோடு ஒட்டிக்கொண்டிருந்தவர்கள், பசை காய்ந்த உடன் பவ்வியமாய் நகர்ந்து சென்றது தெரியும்; பயத்தின் ஆழம் தெரியும்; பயத்தின் பீதி நடுக்கம் கண்ணில் தெரியவரும்; திரும்பிப்பார் திரும்பிப்பார் தெரிந்து கொள்ள வேண்டியது பல இருப்பது தெரியும்; தெரியாமல் மனதில் புதைந்த மர்மங்களும் ரகசியங்களும் சந்தேகங்களும் தெரியவரும்; தெருவில் திரிந்த தரித்திர நாட்கள் தெரியும்; நீ தெரிந்து கொள்வதற்காக எடுத்த ஓட்டம் தெரியும்; தெரிந்து கொள்ள பட்ட படாடு தெரியும்; நீ உயரத்தின் உச்சத்தை தொட பட்ட உதை வதை கதை நினைவுக்கு வரும்; வேகமாக ஓடும் வாழ்க்கையில் எப்படி எல்லாம் வேட்டையாடப்பட்டாய் என்பது தெரியும்; உன்னுள் உறங்கிய வெறி தெரியும்; உன்னுள் கிடந்த வெட்கை தெரியும்; ஆகவே தயங்காது திரும்பிப்பார்; எனவே திரும்பிப்பார்; திரு திரு என்று முழிக்காது திரும்பிப்பார்; நிழலாடும் நினைவுகளின் குறும் படம் உன் மனதில் ஓடுவது தெரியும்; நிதானம் இழந்து நீ அடைந்த கோபத்தின் உச்சம் தெரியும்; திரும்பிப்பார், நீ போட்ட ஆட்டம் நாடகம் தெரியும்; நீ ஓடிய ஓட்டம் தெரியும்; நீ தவறிய நிதானம் தெரியும்; ஒன்றுக்காக பலதுக்காக ஏங்கிய ஏக்கம், அடைந்த தவிப்பு தெரியவரும்; நீ கண்ட மேடு பள்ளம் ஏற்றம் இரக்கம் சரிவு, சாதனை, கசப்பு இனிப்பு, துக்கம் ஏக்கம் எல்லாம் காணா மனஒலிபடமாய் மனதில் ஒலிப்பது தெரியும்; திரும்பிப்பார் வறுமை தின்ன வயிற்றின் கூப்பாடு தெரியும்; அலறலும் புலம்பலும் தெரியும்; திரும்பிப்பார் நிராசைகளின் நிரசனம் தெரியும்; எனவே திரும்பிப்பார், இழந்த சுகங்களை, இழந்த சொந்தங்களை நினைக்க திரும்பிப்பார்; வழிந்த கண்ணீரை துடித்த கரம் எது என்று தெரியும்; நன்றே திரும்பிப்பார் சண்டாலன் யார் என்று தெரியும்; சகுணியார் என்று தெரியும்; மனச்சல்லடையால் சலித்துப்பார், ஒரு சல்லிகாசுக்காக சல்லி சல்லியாய் போன உன் மனத்தின் வேதனை தெரியும்; திரும்பிப்பார் கஷ்ட நாட்களுடன் கற்றுக் கொடுத்த நாட்களும் தெரியும்; சொல்லி சொல்லி தீர்க்க முடியாத உன் கோபம் தெரியும்; துள்ளியும் தள்ளியு போன உன் கால்களின் வருத்தமும் வதையும் தெரியும்; துள்ளி துள்ளி திரிந்த நாட்களின் பசுமை தெரியும்; திரும்பிப்பார்; திரும்பிப்பார்; மறக்காது திரும்பிப்பார்; மறுபடியும் பிறக்கவேண்டுமா என்ற பயம் தழும்பி மனதில் எழுவது தெரியும்; திரும்பிப்பார் திரும்பிப்பார்; நீ பிடித்த பிடிவாதம் தெரியும்; உன்னை பிடித்த தரித்திரம் தெரியும்; உன் சரித்திரமே தெரியவரும் எனவே திரும்பிப்பார்; ஆகவே அடம்பிடிக்காது திரும்பிப்பார்; நீ நீயாக இருக்க நிதானமான செயல்பட, நீ உன் உலகத்தை புரிந்து கொள்ள, நீ கடந்து வந்த பாதையை சற்றே திரும்பிப்பார்; திரும்பிப்பார் திரும்பிப்பார்; ஒரு முறையாவது, ஒரு நாள் வாழ்க்கையாவது, ஒரு சில மணித் துளிகள் நினைக்க திரும்பிப்பார்; திரும்பிப்பார் திரும்பிப்பார். காலை வணக்கத்தை கூறும் அன்பன் அ. முத்துவேழப்பன்
Chennai, Tamil Nadu, India.