கைத்தடி நம்பிக்கையின் ஊன்றுகோலே கைத்தடி; நடமாட உதவும் நண்பனே கைத்தடி; முதுமையிலும் நாட்டியம் ஆட வைக்கும் இந்தக் கைத்தடி; முதுமையில் முடக்கிப்போடாது முடிந்தவரை நடக்க வைக்கும் உந்துகோலே கைத்தடி; தடுமாறும் வயதில் தாங்கிப் பிடிக்கும் கைத்தடி; தள்ளாத வயதில் தனிமையை விரட்டும் தைத்தடி; தாத்தாவை தாங்கும் இரண்டாவது துணைவியே இந்தக் கைத்தடி; சொல்லாமல் கொள்ளாமல், தாத்தாக்களை வெளியே இழுத்துச் செல்லும் இந்தக் கைத்தடி; கீழே விழாமல் தடுக்கும் கைத்தடி; எதிரிகளைத் தாக்க உதவும் கைத்தடி; கடுமையான கரடுமுரடான பாதையைக் கடக்க உதவுவது கைத்தடி முடவர்களின் நம்பிக்கை ஊன்றுகோலே இந்தக் கைத்தடி; நிழலாய் தொடரும் கைத்தடி; அறிவு என்ற அரிவாள் போன்று நம்பிக்கையென்னும் ஊன்றுகோலே கைத்தடி; எத்தனைமுறை பிடித்தாழும் கோபம் கொள்ளாது, சலிப்பு தட்டாது சிரமம் பார்க்காது உடன் வரும் இந்த கைத்தடி; பல பல தத்துவத்தை கூறும் கைத்தடி; பணிவுக்குப் பேர் போனதே இந்த கைத்தடி; ஜடமானாலும் திடமாய் இருக்க உதவுவது கைத்தடி; நம்பியவனை கைவிடாத கைத்தடி; நம்பிக்கைத் துரோகம் என்றால் என்ன வென்றே தெரியாத கைத்தடி; இன சாதி மொழி வேறுபாடு தெரியாது பற்ற உதவுவது இந்தக் கைத்தடி; முதுமையில் பிள்ளைகள் கைவிட்டாலும் முழுக்க முழுக்க பிடிக்க உதவுவது கைத்தடி. பணக்காரன் கையில் பவ்வியமாய் பவனிவரும் கைத்தடி; இது தங்கப் பூண் வெள்ளி முலாம் என்று ஜொலி ஜொலிக்கும் கைப்பிடி ஏழையின் கையில் உடைந்த தடியாய் ஏளனம் செய்யாது இளிக்குது இந்தக் கைத்தடி; மூன்றாவது காலாய் முன்வந்து நிக்கிது இந்தக் கைத்தடி; பலனை எதிர்பார்க்காத கைத்தடி; பயத்தை போக்கும் இந்தக் கைத்தடி; உதைக்கவும் அடிக்கவும் உதவும் கைத்தடி; ஊனமுற்ற மனிதனின் உடல் அங்கமானது இந்த கைத்தடி; பாரதியின் கையில் தாக்கி நின்றது நம்பிக்கை என்னும் கைத்தடி; காந்திதாத்தாவின் ஓட்டத்தை விரைவு படுத்தியதும் இந்த கைத்தடி; பெரியாரின் அடையாளமாகவே ஆனது இந்தக் கைத்தடி; பெற்றோர்களை புறக்கணிக்கும் மக்களுக்கு பாடம் கற்பிக்கும் கைத்தடி; கைத்தடியாய் இருந்து கண்டிப்பாய் முதியவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
Chennai, Tamil Nadu, India.