வாழ்க்கை வாழ்க்கை வாழத்தெரியாதவன் வாழ்கையிலே சோகம் வடியிது. வாழப்பழகியவனிடம் சந்தோசம் குடிபுகுந்து கூத்தாடுது. வழக்காடுபவன் வாழ்க்கையெல்லாம் விழுந்து கிடக்குது. வழுக்கி விழுந்தவன் வாழ்க்கையெல்லாம் வம்பாய் வீம்பு பிடிச்சி கிடக்குது. வந்த சொந்த பந்தம் விட்டுபோன வாழ்விலே தனிமையும் வறுமையும் வந்தே விருந்து உன்னுது; விரட்டி வரும் முதுமையிலே விரக்திவந்து விரதம் இருக்குது. ஏழையின் வீட்டுக்குள்ளே சோகம் துயரம் புகுந்து வாழ்வை புரட்டிப்போடுது. எல்லாம் தெரியும் தெரியும் என்று ஏமாற்றுபவன் வாழ்க்கை குழம்பி கிடக்குது. வயக்காட்டில் உழும் உழவனின் வீட்டிலே ஏழ்மை சுருண்டு படுத்துக் கிடக்குது. அவன் வாழ்வே உருண்டுத் தடுமாறுது; அடையாளம் தெரியாமல் போகும் வாழ்விலே ஆசைகள் வந்து அடைக்கலம் ஆகுது; நிராசைகள் நீச்சலடித்து துடி துடிக்கிது; மோகம் வந்து மோப்பம் எடுக்குது; மெளனம் வந்து யாகம் வளர்க்குது; தியாகம் இங்கே தீஞ்சிக் கீடக்குது; தர்மமும் நியாயமும் தடுமாறுது; வருமுன் காக்கத்தவறினால் தோல்வியால் வருத்தமே வந்து அடைகாக்குது. வாழ்க்கையில் விவாதம் வாதம் பிடிச்சி வதம் செய்யிது; வயிறுக்கு உணவு கிடைக்காதவன் வாழ்விலே வறுமை புகுந்து கட கட என்றே உருட்டிப்பார்க்குது. வாழ்விழந்தவள் வாழ்கையே சறுக்கப்பார்க்குது; வாய்ப்பிழந்தவன் வாழ்க்கை சிரித்துப்பார்க்குது; வழக்காடுபவன் வாழ்வே வழ வழன்னு வழுக்கிப்பார்க்குது; ஓலைக்குடிசையிலே உண்மையான சுகம் சந்தோசக்காற்று தயங்காமல் தடையின்றி ஆனந்தமாய் வீசுது; ஒப்பனை வாழ்க்கை ஒப்பாரி வைக்கிது; ஓடி ஓடி உழைப்பவன் தோளிலே புகழ் மாலை விழுந்து கிடக்குது. உண்டு கொழுத்தவன் உடம்பிலே உயிரைக்குடிக்கும் நோயும் தொத்தித் தொத்தி சுற்றி வருது. உதவாக்கரை வாழ்க்கையைப் பார்த்து உலகம் சிரிக்குது உழைக்காத சோம்பேறியின் உடம்பு வளைய நோவுது; பேராசை வாழ்க்கையிலே பேராசைப் பேய்பிடித்து பேயாட்டம் போடுது. சாதிச் சண்டையில் மனித இரத்த வாடை அடிக்குது; சமுதாய சாக்கடையிலே மனிதப் புழுக்கள் நெளியிது; புனிதம் பாயும் புண்ணிய நதியில் கண்ணியம் கசங்கி, கண்ட கண்ட அசிங்கங்கள் கலந்து சகிக்கமுடியாது கப்பு வாடை அடிக்கிது. உயர்வடைந்தவன் பின்னே உழைப்பும் உண்மையும் தங்கி தவம் இருக்குது. ஓங்கி ஓங்கி குரல் கொடுத்து வாங்கிய சுதந்திரத்தில் இளைஞனின் நாகரீக ஓட்டம் சளிப்பைத்தட்டுது; அரசியல் வாழ்க்கை இங்கே ஆதாயம் தேடுது; அடுத்தவனை ஏய்த்து நடத்தும் பிழைப்பு பெரிதாய் நடக்குது; அரசியல் சாசனம் அழகாய் பளிச்சின்னு பள பள என்றே பத்திரமா இருக்கு; ஆபத்தான வாழ்க்கையிலே அதிகாரம் ஆணவம் கர்வம் பிடித்து அடக்கிப் பார்க்க அடம்பிடிக்குது; சதி சதி என்ற சாக்கடையிலே சதிகாரர்களின் சாகசம் விதியமுடிக்கிது; சண்டாலர்களின் செயலால் சமுதாயமே அழியப்பார்க்குது; விற்றுத் தின்னு வாழ்பவன் வாழ்க்கை வெறுதாய் முடியுது; விதிமேல் பழியைப்போட்டு படுத்துறங்குபவன் வாழ்க்கை பாழாய்ப் போகுது. ஏய்ப்பவன் வாழ்விலே எல்லாம் கொட்டுது அவனை எதுத்துப்போகும்போது எல்லாக் கைகளும் கைதட்டிச்சிரிக்குது சிரிக்கிது ஏப்பம் போடுபவன் எடுப்பதையெல்லாம் எனக்கே என்றே எடுத்து பதுக்கின்றான்; அட மானம் கெட்ட வாழ்க்கையிலே மனசு மக்கிக் கிடக்குது தட்டிக் கேட்காத வாழ்கையெல்லாம் தடுமாறுது விட்டு பிடித்தவன் வாழ்க்கையிலே வெற்றி கொட்டிக்கிடக்குது விஞ்ஞானம் இங்கே விஷமத்தனம் பன்னுது; விடும் மூச்சில விக்ஷக்காத்து வருது; ஆறறிவு ஆதிக்கம் அழிக்கத்துடித்து அசுரத்தனம் ஆகுது; விடியல் வரும் வியடியல் வரும் என்று வீற்றிருப்பவன் வாழ்விலே வெறும் விரக்தி எட்டிப்பாக்குது. சிரமப்படாமல் சிகரத்தை அடைய முயல்பவன் வாழ்க்கையே சீரழியிது. கற்பனையில்லா சிற்பியின் கைகள் சுமக்கும் உளியும் கண்ணீர் வடிக்குது. எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் புதிர் போடுது. மனமும் குணம் கெட்டு கண்டபடி உடைந்து நம்பிக்கையும் தூள் தூளாகுது. கனவு காணாத இளைஞன் வாழ்க்கையிலே இழவு விழுது. கண்ணியம் இல்லா வாழ்க்கையிலே புண்ணியம் புண்ணாக்குது. தாவித் தாவி பாயும் மனத்திலே தன்னலம் சுயநலம் தங்கிக்கிடக்குது தடுமாறுபவன் வாழ்க்கையெல்லாம் தடம் புரண்டு கிடக்குது புரையுண்ட சமுதாயம் புண்ணைப்போல சீழ் பிடித்து பாழாகுது வாழ்க்கை வாழ்க்கையது பிடிப்புடன் பிடித்து வாழ்ந்து பழகினால் சொர்க்கம் தான் நமது மதிய வணக்கத்தைக் கூறும் அன்பன் அ . முத்துவேழப்பன்
Chennai, Tamil Nadu, India.