குறள் 600 உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார் மரம்மக்க ளாதலே வேறு. பொருள் ஊக்க மிகுதியே ஒருவனுக்குத் திண்ணிய அறிவு. அவ்வூக்கம் இல்லாதவர் வடிவத்தால் மக்கள்; மனத்தாலோ வெறும் மரமே. - பேராசிரியர் சாலமன் பாப்பையா ………… பா ஊக்கமே ஆக்கத்தின் ஊக்கியாம் அ ஃதிலார் உடலிந்தும் அறிவுடைய மாக்கலே. திண்ணிய அறிவும் தீஞ்சே போகும் ஊக்க மற்று உறங்கினால். உள்ளத்தில் உரமிலார் எண்ணத்தில் திடமிலார் உழண்டாலும் நடைபிணமே யாவர். ஊக்கம் இலாதார் உள்ளம் உவர்நிலத்தில் பெய்த மழைபோல் கெடும். ஊக்கமிலாத வெறுக்கையும் வெட்கையாம் வெந்தேபோய் நொந்தே உள்ளம் பாழ்படுமாம். ஊக்கம் உடையோரே உடையராவர் அக்திலார் உடைந்தோரேயன்றி வேறு
Chennai, Tamil Nadu, India.