Blog

வேண்டும் வேண்டும்

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 19/07/2024
  • Category: valkkai
  • Views: 149
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும், வேண்டியது வேண்டும், வேண்டியே பலன் கைமேல் பெற வேண்டும். காணி நிலம் வேண்டும்; காணும் இடம் எல்லாம் பசுமை நிரம்ப வேண்டும்; கண்ணியம் காக்க வேண்டும்; திண்ணிய எண்ணம் வேண்டும்; தெளிந்த நல்லறிவு வேண்டும்; தீயாத நெஞ்சம் வேண்டும்; தீண்டாத நாக்கு வேண்டும்; வேண்டாத செயல் செய்யாமல் இருக்கவேண்டும்; வேற்றுமையின்றி ஒற்றுமையாய் வாழ வேண்டும். நோயற்ற உடம்பு வேண்டும்; நோகாத மனம் வேண்டும்; தெரியாத அசிங்கம் வேண்டும்; தெளிவான மனம் வேண்டும்; தெருவெங்கும் குப்பைகள் நிரம்பாமல் இருக்க வேண்டும்; தெரிதளில் புரிதல் வேண்டும்; செயலில் ஊக்கம் ஆக்கம் வேண்டும்; எண்ணங்கள் யாவும் வண்ணங்களாக இருக்க வேண்டும்; எண்ணியதை முடிக்கத் திடம் வேண்டும்; எட்டாததற்கு ஆசைப்படாமல் இருக்கவேண்டும்; தேடித் தேடி கற்க வேண்டும்; ஓடி ஓடி உழைக்க வேண்டும்; ஓயாமல் புறம் பேசுவதை நிறுத்த வேண்டும்; வேதம் பல கற்க வேண்டும்; வேதனை யற்று வாழவேண்டும்; இல்லாமை ஒழிய வேண்டும்; இயலாமை நீங்க வேண்டும்; இல்லத்தையும் உள்ளத்தையும் அன்பும் அமைதியும் த(தா)ங்க வேண்டும். பண்ணிய பாவம் தொலைய நண்ணிய செயல்கள் பல செய்ய வேண்டும்; மனிதனிடம் மனிதம் பிறக்க வேண்டும்; உலகெங்கும் அமைதிப் போர் தொடுக்க வேண்டும்; ஊரார் வாழ்த்த உத்தமராய் இருக்க வேண்டும்; உறவாடிக் கெடுக்காமல் இருக்க வேண்டும்; பேருக்கு வாழாது பெருமை சேர்க்க வேண்டும்; குறையற்ற மனிதனே யாயினும் கறையற்ற மனிதனாக இருக்க வேண்டும்; பணிவில் கனிவு வேண்டும்; பணியில் கவனம் வேண்டும்; பயத்தில் துணிவு வேண்டும்; பண்பாட்டில் தெளிவு வேண்டும்; பகையில்லா உறவு வேண்டும்; பசியாத்த உணவு வேண்டும்; பட்டி தொட்டியெல்லாம் கல்வி சென்றடைய வேண்டும்; பசப்பு இல்லாத பாசம் வேண்டும்; கசப்பு இல்லாத அனுபவம் வேண்டும்; கடன் காரன் தொல்லை இல்லாமல் இருக்க வேண்டும்; கடமை செய்ய திடம் வேண்டும்; விவசாய நிலம் வியாபாரம் ஆகாமல் இருக்க வேண்டும்; வியாதியை விலைபேசாது இருக்க வேண்டும்; விதியென்று சதிசெய்யாது இருக்க வேண்டும்; வீதியெங்கும் பசுமை படரவேண்டும்; தன்னுயிராய் எவ்வுயிரையும் நினைக்க வேண்டும்; தனிமனித உரிமை காக்கப் பட வேண்டும் ; தன்னலம் சுயநலம் இல்லா பொதுநலம் வேண்டும். நிம்மதி பிறக்க வேண்டும்; நிதானம் கெடாமல் இருக்க வேண்டும்; நீதிக்கு தலை வணங்க வேண்டும்; இன்னல்களையும் இன்பத்தோடு ஏற்க வேண்டும்; இன்னாது செய்பவருக்கும் இனியவை செய்யவேண்டும். எதற்கும் அஞ்சாது செயல்பட வேண்டும்; குதற்கம் பேசாது இருக்க வேண்டும்; குறை குற்றம் காணாது இருக்க வேண்டும்; கூடிவாழப் பழக வேண்டும்; குடும்ப அறத்தை காக்க வேண்டும்; கசியும் கண்ணீரில் கருணை காணவேண்டும்; பற்றில் பயபக்தி வேண்டும் ; நட்பு பற்றியே தொற்ற வேண்டும்; பாரோர் போற்ற வேண்டும்; பாமரனனுக்கும் வளர்ச்சி சென்றடைய வேண்டும்; படைப்பாளி பயனாளியாக வேண்டும்; பகையில்லா உறவு வேண்டும்; புகையில்லா வாகனம் வேண்டும்; புதையாத பூமி வேண்டும்; புன்னகை தங்க வேண்டும். புன்னகையே உன் நகையாக வேண்டும் புன்னகை பிறரை புண்ணாக்காமல் இருக்க வேண்டும்; அன்பில் குனிவு வேண்டும்; அன்பால் குழைய வேண்டும். வாக்கில் முதிர்ச்சி வேண்டும்; வழக்காடாது இருக்க வேண்டும்; வாய்மையில் தூய்மை வேண்டும் ; வாழ உனக்கு வைராக்கியம் வேண்டும் ; கவலையை மறக்க சிரிப்பு வேண்டும்; கண்ணியம் காக்க வேண்டும்; வறுமையிலா வாழ்க்கை வேண்டும்; வளமான மக்கள் செல்வம் வேண்டும்; வாழ்வாங்கு வாழ வேண்டும்; வானம் பொய்காது இருக்க வேண்டும்; வாய்மையில் தூய்மை வேண்டும்; பொருமை பெரிதும் வேண்டும்; பொறாமை கருக வேண்டும்; பொய்யான வாழ்வு ஒழிய வேண்டும்; வறியார்க்கு ஈதல் வேண்டும் ; அறியார்க்கு அடக்கம் வேண்டும். குன்றாத புகழ் வேண்டும்; குறையிருந்தாலும் கறையில்லாத குணம் வேண்டும்; கள்ளம் கபடற்ற வாழ்வு வேண்டும்; கல கலவென்றே சிரிக்க வேண்டும்; முயற்சி எடுக்க வேண்டும்; முறைதவறி வாழாது இருக்க வேண்டும்; அதர்மம் அழிய தர்மம் காக்க வேண்டும்; வன்மம் வக்கரம் இல்லாமல் இருக்க வேண்டும். அதிகாலை விடியலை பார்க்க பறந்தோட வேண்டும்; அந்திப்பொழுதை பிடித்து சிந்தி விளையாட வேண்டும்; கோவில்கள் யாவும் அறச்சாலைகளாக வேண்டும்; கொள்ளை யடிக்காது கொள்கையுள்ள மனிதனாய் வாழவேண்டும்; கோழைக்கு வீரம் பிறக்கவேண்டும்; மருத்துவமனைகள்யாவும் மனமகிழ் மன்றமாகவேண்டும்; பாடசாலைகள் எல்லாம் பண்பாடுக் கூடமாகவேண்டும்; பொய்காத பருவம் வேண்டும்; மொய்க்காத காதல் வேண்டும். வேண்டும் வேண்டும் வாழ்வில் நிம்மதி வேண்டும் அன்பன் அ. முத்துவேழபப்பன்

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media