Blog

வேண்டாம் வேண்டாம் வேண்டவே வேண்டாம்

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 07/08/2024
  • Category: valkkai
  • Views: 129
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

வேண்டாம் வேண்டாம் ஓயாமல் தின்னு கொண்டே இருக்க வேண்டாம்; ஒருவருக்கும் தீங்கு செய்ய வேண்டாம்; உண்மையை பொய்யாக்க தர்க்கம் செய்ய வேண்டாம்; உன்னையே நீ ஏமாற்ற வேண்டாம்; உணர்வதைவிட்டு உணர்ச்சி வசப்பட வேண்டாம்; ஊரோடு ஒத்து போகாவிடினும் உறவாடிக் கெடுக்க வேண்டாம்; உடன்பாடு இல்லாததை செய்ய வேண்டாம்; உடமையே பறிபோனாலும் உண்மையை மறைக்க வேண்டாம்; அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்; எடுத்தற்கெல்லாம் குறை குற்றம் காண வேண்டாம்; எடையை குறைக்க உண்பதை குறைக்காது உடையை குறைக்க நினைக்க வேண்டாம்; அதர்மத்தை தர்மமாக்க வேண்டாம்; கற்றது கையளவு என்பதை மறக்காமல் இருக்க வேண்டாம் கோவில் இருக்கும் ஊர் என்றாலும் குணம் கெட்டான் ஊரில் குடியிருக்க வேண்டாம்; உண்மைக்கு பங்கம் விளைவித்தாலும் பெண்மைக்கு பங்கம் விளைவிக்க வேண்டாம்; பேருக்காக வாழ்ந்தாலும் பேடியாக வாழ வேண்டாம்; விரும்பியே படுகுழியில் வீழவேண்டாம்; நெஞ்சமதில் வஞ்சனை சுமக்க வேண்டாம்; தடுமாறினாலும் தாழ்மை எண்ணம் வேண்டாம்; வக்கத்தவன் என்றாலும் வாக்கு கொண்டான் வழுவாது இருக்க வேண்டும்; நோக்கு உண்டாம் மேனி நுடங்காது மறக்கவேண்டாம்; தந்தை தாயை அவமதிக்க வேண்டாம்; தற்பெருமையை தானாகவே பேச வேண்டாம்; தாழ்ந்தவர் என்று எவரையும் தள்ளிவைக்க வேண்டாம்; வீழ்ந்தாருக்கு கரம் நீட்ட மறக்க வேண்டாம்; வாய்பார்த்து நின்று வழக்கில் சிக்க வேண்டாம்; வாழும் நாட்களை வீணாய் கழிக்க வேண்டாம்; மூத்தோர் சொல் என்றாலும் முழுதும் உண்மையை தேடாமல் இருக்க வேண்டாம்; முட்டாளுக்கு துணைபோக வேண்டாம்; முரடனோடு பழகினாலும் முன்கோபக்காரனோடு இணங்க வேண்டாம்; மறம் பேசித் திரிவாரோடு அறம் பேச வேண்டாம்; வாயாடினாலும் வாதாடவேண்டாம்; திறமையை வைத்துக் கொண்டு திண்டாட வேண்டாம்; விரும்பிப் பார்க்காவிடினும் திரும்பிப் பார்க்காது இருக்கவேண்டாம்; வழிதெரியாது தவிப்பவனுக்கு உதவாது இருக்க வேண்டாம்; தர்மத்தை செய்யாவிடினும் கருமத்தை செய்யவேண்டாம், தெய்வத்தை தேடுவதை விட செய்தருமத்தை தேடாமல் இருக்க வேண்டாம்; ஏசலிட்ட உற்றானையும் ஏங்கி உறவாடகைக் மறக்க வேண்டாம்; தஞ்சம் என்று வந்தவனை தவிக்க விட வேண்டாம்; பஞ்சத்தில் விலைபேச வேண்டாம்; வஞ்சத்தில் பழி தீர்க்க நினைக்க வேண்டாம்; நெஞ்சத்தில் இரக்கம் கொள்ளாது இருக்க வேண்டாம்; பசி என்று வந்தவனுக்கு புசி என்று தந்து உபசரிக்காமல் இருக்க வேண்டாம்; குற்றம் பேசி வாழ்வதை விடுத்து சுற்றம் பழகி வாழ்ந்து இருக்க வேண்டாம்; அறியாவிட்டாலும் அது இது என்று சாக்கு போக்கு சொல்ல வேண்டாம்; அப்பத்தை தின்னக் கொடுத்தால் அடுத்து அடுத்து இருக்கும் அதன் ஓட்டையை எண்ண வேண்டாம்; அடுத்தவன் பிரச்சனையில் மூக்கை நுழைக்க வேண்டாம்; அடிக்கு அடி என்று பதிலடி கொடுக்க வேண்டாம்; இருக்க இடம் கொடுத்தால் உடுத்த உடையிருக்கா என்று கேட்க வேண்டாம்; குருடனே ஆயினும் குடிகெடுக்கும் செயலைச் செய்யவேண்டாம்; வெறுப்பே அடைந்தாலும் மறுப்பு கூற வேண்டாம்; வீரத்தில் விரிசல் வேண்டாம்; விவேகத்தில் சுனக்கம் வேண்டாம்; நம்பிக்கையில் நடுக்கும் வேண்டாம்; நாளையை உருவாக்க இன்றை சம்மாதி செய்ய வேண்டாம்; வார்த்தைகள் வதைக்க வேண்டாம்; வாய்யிருந்தும் ஊமையாக வேண்டாம்; வாய்ப்பேச்சில் வீரம் வேண்டாம்; வம்பால் வழக்கு வேண்டாம்; வசதியில் செறுக்கு வேண்டாம்l அசதியில் ஆட்டம் வேண்டாம்; அசிங்கத்தைப் பூச வேண்டாம்; அதிகாரத்தில் ஆடவேண்டாம்; சதிகாரனிடம் சாவகாசம் வேண்டாம்; ரகசியத்தை ரசனை ஆக்க வேண்டாம்; அதிசயம் என்று அறியாததை புரியாததை பேச வேண்டாம். வேண்டாம் வேண்டாம் அரசியலில் ஆதாயம் பார்க்க வேண்டாம்; அரிசியில் உமியைத் தேட வேண்டாம்; அன்பின் ஆழத்தைத் தேட வேண்டாம்; அன்பில் பேதம் வேண்டாம்; அன்பால் பாதகம் வேண்டாம்; நேசத்தை நாசமாக்க வேண்டாம்; நேசிப்பவரை வஞ்சிக்க வேண்டாம்; நேரத்தை பின் ஓட்டிப் பார்க்க நினைக்க வேண்டாம்; நேர்மையை ஒரசி பார்க்க வேண்டாம்; நேரம் போக வில்லை என்று வேண்டாததை வேண்டும் என்றே செய்ய வேண்டாம்; நேற்றை இன்றாக்க விரும்ப வேண்டாம்; நேரத்தை வீணடிக்க வேண்டாம்; நேர்மையை புண்ணாக்க வேண்டாம்; நெறிகெட்ட செயலைச் செய்ய வேண்டாம்; வெறி பிடித்துத் திறிய வேண்டாம். ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்; ஊரோடு ஒத்து போகாமல் இருக்க வேண்டாம்; உறவாடிக் கெடுக்க வேண்டாம் ; ஊரார் சொத்துக்கு ஆசைப்பட வேண்டாம்; உற்றாரை உதாசினங்கள் செய்ய வேண்டாம்; ஊர் வாயை மூட உன் வாயை மூட நினைக்க வேண்டாம்; வறுமையோடு வாழ்ந்தாலும் பெறுமையோடு வாழாது இருக்க வேண்டாம்; வாயிலுக்கு வந்தவரை வாயார கூப்பிட வில்லை என்றாலும், வார்த்தைப்போர் செய்ய வேண்டாம் பிடிவாதம் பிடிக்க வேண்டாம்; பிணத்துக்கு துணைபோக நினைக்க வேண்டாம்; பணத்துக்கு ஆசைப்பட்டு குணத்தைக் கெடுக்க வேண்டாம்; பணத்துக்கு ஆசைப்பட்டு பிணத்துக்கு பக்கத்தில் படுத்து உறங்க வேண்டாம்; பிறர் நொந்துபோகும் செயலைச் செய்யவேண்டாம் வேதனையை சுமக்க வேண்டாம்; சிலந்தி வலையாய் மனம் கூடு கட்ட வேண்டாம்; சிக்கனம் சிக்கனம் என்று சிக்கித் தவிக்க வேண்டாம்; பெறுமை வேண்டும் என்றால் பொறாமை வேண்டாம்; பொய்யான வாழ்வு வேண்டாம்; கருணை காயவேண்டாம்; கண்ணீர் பாயவேண்டாம்; பொய் மெய்யாக வேண்டாம்; பொறுமையை சோதிக்க வேண்டாம்; எளிமையை ஏளனம் செய்ய வேண்டாம்; நம்பியவனை கைவிட வேண்டாம்; நம்பாதவனிடம் நட்பு வேண்டாம். போனதை நினைத்து புலம்ப வேண்டாம்; பொள்ளாதது செய்ய வேண்டாம்; குணம் கெட்டு சினம் கொள்ள வேண்டாம்; மனம் அசிங்கம் பூச வேண்டாம்; சோகத்திற்கு சொந்தக்காரன் ஆக வேண்டாம்; கண்ணீர் ஆயுதம் ஆக வேண்டாம்; கவலை பாரமாக வேண்டாம்; பதற்றம், பயம், கவலைகளை சுமக்க வேண்டாம்; கவனம் சிதைய வேண்டாம்; ஒதுங்கிப் போனாலும் பதுங்கி போக வேண்டாம்; ஓயாமல் பொய் சொல்ல வேண்டாம்; வேண்டாம் வேண்டாம் வேண்டவே வேண்டாம் அ. முத்துவேழப்பன்

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media