மக்க வயிரும் நிறையட்டும் சாமி கழனி வெடிச்சிடிச்சி கலிகாலம் வந்திடிச்சி வச்ச பயிரும் கருத்துடிச்சி பசியும் வருத்திபுடிச்சி உச்சி வெயிலில் ஊரும் வெந்துபுடிச்சி உரசிட தீயும் வந்து புடிச்சி உசிரே போயிடிச்சி சேத்த காசும் கறஞ்சிடிச்சி செத்த மனதில் பயமும் புகுந்திடிச்சி செட்டி வீட்டுக்கு குடமும் அடகு போயிடிச்சி பெத்த பிள்ளைகளுக்கு வயிரார கஞ்சி ஊத்த நாதியில்லாம போச்சி செல்லாத பூமியில செல்லரித்த மனமும் நொந்து போச்சி தென்றலும் தீஞ்சிடிச்சி தெக்கே காத்து வந்து நாளாட்சி கொட்டிய பருவமும் பொய்த்திடிச்சி பொல்லாப்பு வந்து சேர்ந்திடுச்சி கருத்த மேகமும் கலஞ்சிடிச்சி கரையான் பொந்துக்குள்ள பாம்பும் புகுந்துடிச்சி கண்ணெல்லாம் மங்கிடிச்சி கன்றுகுட்டியும் கதறிடிச்சி மாட்டு மடியும் சூம்பிடிச்சி மனசும் தடிச்சிடிச்சி சொந்த பந்தமும் போயிடிச்சி வாழ்க்கையும் செல்லாத காசாய் மாறிடிச்சி பொன்னியாறும் பாலையாச்சி தென்னையும் சாஞ்சிடிச்சி கழனியெல்லாம் காஞ்சிடிச்சி ஈரக்கொலையும் காச்சிடிச்சி எந்த ஊர்ப்பய சாபமோ எங்களை பிடிச்சிடிச்சி விட்ட மூச்சிக்காத்திலே விலாம்பழமும் பழுத்திடிச்சி வைக்காத நெருப்பிலே வைக்கோளும் பத்திக்கிச்சி அடுப்புக்குள்ள பூனை ஒறங்கிடிச்சி ஆசையா வளர்த்த நாயும் செத்துபுடிச்சி ஆடும் மாடும் தவிச்சிடிச்சி அசைபோட உணவுஇல்லாம கத்த மறந்திடிச்சி வாழைமரமும் கருகிடிச்சி வம்சமே சாஞ்சிடிச்சி குளமும் வத்திடிச்சி வானத்த பார்த்த விவசாயியின் கண்ணிலே கண்ணீரும் வத்திடிச்சி ஏறுபூட்டிய கையும் இருகிடிச்சி வெட்டிப்போட்ட கிணறும் காஞ்சிடிச்சி வானமும் பழுத்திடிச்சி வளம் தந்த பூமியும் வெடிச்சிடிச்சி முள்ளும் புதரும் மண்டிடிச்சி முக்கா உடம்ப தின்ன கழுகும் துடிச்சிடிச்சி வெட்ட வெயிலில் நரியும் ஊளைவிட்டிடுச்சி செத்துப்போன மாடுகளின் இறைச்சியையும் தின்னுபுடிச்சி பெத்த புள்ளைகள் எல்லாம் அழுது புடிச்சி பெருசுக எல்லாம் ஒன்னொன்னா சறிஞ்சிபுடிச்சி சத்தம் போட்ட நதிகரைபக்கம் சாவும் வந்து குவிஞ்சிடிச்சி ஒலவைபோட நாதியில்லை ஓலப்பாயும் போதலையே ஒப்பாரிவைச்ச வாயும் காஞ்சிடிச்சி ஒடிச்ச ஒடம்பை கழுவக் கூட தண்ணீர் இல்லையே கண்ணீரும் நனச்சிடிச்சி செத்த சவத்தை கண்ணீரும் நனச்சிடிச்சி கத்தாழச்செடியும் ஒடம்பை மறைச்சிடிச்சி ஒட்டிப்போன கண்ணிரண்டும் வத்திடிச்சி கால்நடைகள் ஒடம்பும் கம்பியாய் ஒடஞ்சிடிச்சி வெளஞ்ச காடும் கழனியும் தரிசுக்காடாய் மாறிடிச்சி தாலிஅறுத்த மவராசிகக் கூட்டம் நெறம்பிடிச்சி மூட்டை முடிச்சி கட்டி சனக் கூட்டம் முந்திடிச்சி முடிவுக்கு பயந்து ஊருமாறிபோயிடிச்சி கூட்டம் கூட்டமாக சனங்கள் பஞ்சம் பொழைக்க பொறப்பட்டுடிச்சி பால்சொறந்த மடியெல்லாம் வத்திடிச்சி அட புள்ளைகள் எல்லாம் அழுதிடிச்சி கள்ளிப்பாலும் வத்திடிச்சி கத்தாழையும் கருத்திடிச்சி கருவக்காடும் தீஞ்சிடிச்சி கழுகுகளும் வயிறை நிரப்பிடிச்சி வெடிச்ச பூமியெல்லாம் வெந்திடிச்சி வெப்பக்காத்து அடிச்சிடிச்சி பச்சமரமும் பட்டுடிச்சி பாலாப்போன உறவும் பகைச்சிடிச்சி கிழிஞ்ச துணியும் சுத்திடிச்சி; ஜனங்கள் வானத்தைப்பார்த்தே கண்ணும் பூத்திடிச்சி கானல் நீராய் வாழ்க்கை போயிடிச்சி பருவ மழை பொய்த்திடிச்சி பாவி மக்க செய்த தப்புள்ள மூனுபோகம் பாத்த பூமி முழுசா காஞ்சிடிச்சி பச்சை பச்சையாக இருந்த கழனி பட்டுப்போயிடிச்சி ஓட்டிவந்த உறவெல்லாம் வெட்டிக்கிட்டு போயிடுச்சி. கிழ்வானம் வெந்திடுச்சி கிளிப்பிள்ளைகளும் காணமல் போயிடுச்சி. கூகை சப்தம் கேட்டுடிச்சி போத்துப் பறக்கும் திசையும் பார்த்திடுச்சி கழுகும் வட்டமிட்டுடுச்சி அய்யய்யோ கோட்டான் அலரிடிச்சி நரி ஊளையும் விட்டுடிச்சி ஆந்தை அலறல் போட்டுடிச்சி வெள்ளியும் தெக்கே முளைச்சிடிச்சி பஞ்சமும் வஞ்சம் இல்லாம படுத்திடிச்சி வானில் ஏரிமீன் வீம்பாய் வந்து உதித்திடிச்சி கெட்ட நிமித்தியம் காட்டிச்சி கெட்டுப்போன பூமியும் பிளந்துடிச்சி தூம கேதுவும் வானில் தோன்றிடிச்சி. ஊரில் தூசியும் படிஞ்சிடிச்சி வெள்ளியும் தெக்க முளைத்திடிச்சி விளை நிலமும் பட்டு போயிடிச்சி பட்டதெல்லாம் போதும் சாமி; பாவப்பட்ட பூமி நனையட்டும் சாமி; பச்ச புள்ளைக உசுரும் நிலைக்கட்டும் சாமி; வயக்காட்டுல நெல் விளையட்டும் சாமி; மழை பொய்த்ததும் போதும் மலை மலையாய் பிணக்குவியல் விழுந்ததும் போதும். மழையை அனுப்பி வைசாமி மக்க வயிரும் நிறையட்டும் சாமி
Chennai, Tamil Nadu, India.