Blog

புதியது புதியது

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 24/11/2024
  • Category: valkkai
  • Views: 78
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

புதியது, புதியது; கவிதை புதியது; புலம்பித் தவித்த தவிப்பு புதியது; கனவு புதியது; கற்பனை புதியது; என்னுடன் பிறந்த கவலையும் புதியது; எட்டிப் பார்த்த உலகம் புதியது; எட்டாத ஆசைகளும் புதியது, எகத்தாளம் செய்யும் மனமும் புதியது; ஏன் எதற்கு என்ற கேள்வியும் புதியது; புதியது புதியது; கண்ட காட்சி புதியது; கண்ட வனம் புதியது; காலம் தாண்டிய ஏக்கம் புதியது; கறை படிந்த காலம் புதியது; கல்லாகிய மனமும் புதியது; கண்ணீர் தோய்ந்த கவலையும் புதியது; காணும் உலகமே புதியது; கண்ணாம்பூச்சி விளையாடும் கலக்கமும் புதியது; காற்றாய் விரைந்த வாழ்க்கை புதியது; விரட்டிவரும் வாழ்வும் புதியது; விஞ்ஞான உலகம் புதியது; விடியல் தெரியாத உறக்கம் புதியது; வீதிக்கு வரும் மானம் புதியது; விதியின் வலிமை புதியது. புதுமைப் பெண்ணின் புரட்சி புதியது; புதுமையில் முதுமையடைந்த பெற்றோரை மறப்பது புதியது; உறவு முறை மறந்தது புதியது; உடம்பும் நடைபிணமானது புதியது; உல்லாச உலகம் புதியது. ஒன்றாய் கூடி வாழாது, ஒருவரும் வேண்டாம் என்று ஒதுங்கி வாழும் வாழ்க்கை புதியது; நன்றாய் வாழ்கின்றோம் என்று நாசமாக்கும் வாழ்வியலும் புதியது: படித்த அறிவை பைசாவாக்கும் வித்தை புதியது. பணத்தாசையில் பாசத்தை விலைபேசிய வழக்கம் புதியது; பாய்ந்துவந்த நதியின் தடையம் மறைந்தது புதியது; பச்சை விரித்த இயற்கை பசுமை இழந்து கிடக்கும் கோரத் தாண்டவக் கோலம் புதியது. குளம் குட்டை எல்லாம் மாட மாளிகையானது புதியது; கைபேசியில் காலம் கழிப்பது புதியது. கணினி காலத்தில் கண்ணியம் கண்ணீர் வடிப்பதும் புதியது; காசுபணம் இல்லா ஆன் லைன் வாழ்கை பூதியது; நச்சி பிச்சிபிடுங்கள் வாழ்க்கையும் புதியது; பிடிக்க மறந்த பட்டாம் பூச்சி புதியது; பிச்சிப்பூ வைக்க மறுத்த தலைபுதியது; உச்சி வெயில் வரும் முன்னே, உயிரே துடித்து, உடனே ஏசிப்போட தவித்த தவிப்பு புதியது; ஆயத்த ஆடையில் அரைகுறையாக உடம்பைக் காட்டுவது புதியது. தாயை வீதியில் விட்டு விட்டு, நாயை வீட்டில் வளர்க்க விரும்புவது புதியது. இளமையின் தேடல் புதியது; இட்ட சாந்து புதியது; இழுவிய முகமும் பூச்சீய தலை வர்ணமும் புதியது; இழந்த அழகு புதியது; இளமைளை குழைத்த ஆடை புதியது; இருட்டியபின் வீடு வருவது புதியது. நடை புதியது பாவனை நடைமுறை புதியது; நடைபிணமான வாழ்கை புதியது. நம்பிக்கை இழந்த வாழ்க்கை புதியது; நாகரீக வாடை புதியது. தலைவலியான தலைமுறை புதியது; தலைவிரி கோலம் புதியது; தலைமுழுக நினைக்கும் பெற்றோர்களின் கவலையும் புதியது; தட்டிக்கேட்க ஆள் இல்லாமல் தடுமாறும் இளமை புதியது. பணமான வாழ்வில் பணமான மனிதனீன் மனம் இழந்த உறவு புதியது; பயத்தோடு வாழும் பழக்கம் புதியது. ஞாலம் புதியது; காலம் புதியது; காணும் காட்சிகள் புதியது; கட்டழகு இழந்த பெண்மை புதியது; பெண்மயில் பிடரி முடியுடன் திரிவது புதியது; பிரியமான தோழிகளைமறந்து; தோளோடு தோள் போட்டு போகும் தோழன் என்ற கூட்டம் புதியது; தொட்டு பழகும் வாழ்க்கை புதியது. விட்டுப்போன கலாச்சாரம் புதியது. தொலை தூரப்பயணம் புதியது; தொல்லை தரும் உறவு புதியது. கொலை நோய்களும் புதியது; கொல்லை போன பாரம்பரியமும் புதியது. தேடல் புதியது. தேடித்தேடினாலும் கிடைக்காத பாசம் புதியது; கைபேசி மோகம் புதியது; கைதியாக்கிய வலைதளம் புதியது; காற்றையும் நீரையும் வியாபாரமாக்கியது புதியது. வேதம் புதியது; வாதம் புதியது; வழக்கும் புதியது; வழக்கமும் புதியது. வழுக்கிவிடும் வாழ்வியலே புதியது. சாலை புதியது; சாகசம் புதியது சரணம் புதியது; சலனம் புதியது; விருப்பம் புதியது; விரசம் புதியது; வீட்டுக்கே வரும் ஆயத்த உணவும் பண்டங்களும் பொருளும் புதியது. விரைவு வாழ்க்கையில் எல்லாம் புதியது; விருப்பம் இல்லா வாழ்க்கையும் புதியது; விளை நிலம் விலைபோனது புதியது; வீட்டின் வசதிகளை பெருக்கியதும் புதியது. வேண்டாத பொருட்களை வேண்டியே நிரப்பும் பழக்கமும் புதியது. மாற்றம் மாற்றம் என்று கூறியே தடுமாறும் மாற்றமும் ஏமாற்றமும் புதியது; மங்கிய நாகரீகத்தில் மயங்கிய கூட்டமும் மக்கிய சிந்தனையும் புதியது. பாட்டில் போராட்டமும் புதியது; கல்வியும் பணத் தோட்டமானது புதியது. அரசின் அதிகாரங்கள் அடிக்கும் கொள்ளைகளும் புதியது. இணையதள வழி களவும் குற்றமும் புதியது; அவசர வாழ்வில் எல்லாம் புதியது. மதிகெட்ட பழக்கம் புதியது; மதிகெட்டான் வாழ்வே புதியது. மறந்த மனித நேயமும் புதியது; கனநேர இச்சைக்காக கண்ணியம் இன்றி குழந்தையையும் சீண்டும் கொடுமையும் புதியது; சோறு போடும் விவசாயி சோற்றுக்கு வாடுவது புதியது; நதியைப் பிடித்து வைத்து சொந்தம் கொண்டாடும் தேசம் புதியது. நேசிப்பதாக தேசத்தை நாசம் செய்யும்; தன் இனத்தை தானே சுரண்டி வாழும் மனிதர்களின் மாண்பு புதியது. ஆட்சியாளர்களின் ஆட்டமும் பதியது. ஆட்சியாளர்கள் காட்சியாளர்களாய் மாறுவது புதுயது. ஆடும் ஆட்டமும் புதியது. அனைத்து தவறுகளையும் செய்யத்துடிக்கும் கட்சிக்காரர்களின் ஆளுமை புதியது; சுரண்டல் புதியது; சுற்றித்திரிய நினைக்கும் நினைப்பு புதியது; சுகபோக வழக்கை புதியது; விஞ்ஞான விளையாட்டு புதியது; விண்ணை தொடத்துடிப்பதால் வரும் வினோத விளைவுகளும் புதியது; மனிதாபி மானத்தை மறந்தது புதியது; மண்ணையும் மனித இனத்தையும் காக்க மறந்ததும் புதியது.

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media