நல்லார் நல்லார் நனி சிறந்தோர் நல்லார்; நல்லார் நல்லார் அறிவதை அறிந்தடங்கி அஞ்சுவதுக்கஞ்சி உறுவது உவப்புற செய்வார் நல்லார் நல்லார் நல்லார் நற்குணம் உடையோர் நல்லார் பிறர் நலம் பேனுவோர் நல்லார்; நன்று நன்று என்று , செய் நன்றி நகிழ்வோர் நல்லார். சொல்லுக்கடங்கி செல்லும் இடம்மெல்லாம் சிறப்புருவர் நல்லார். நல்லார் தடுமாற்றம் இல்லார்; தன்மையர் தன்னையரிந்தார் பழிபாவம் சுமக்கார் தண்டி கடி பிணக்கம் இல்லாரே நல்லார்; மாசு அற்ற நெஞ்சு உடையார் மானமே பெரிதென்று வாழ்வோர் செய் நன்றி ஒழுகுவோர் செய்தகு செயலைச் செய்வர், நல்லார் நண்ணாரை நாடார். நுணங்கிய கேள்வியறிவுயுடையார் நல்லார் வணங்கிய வாயினர் நல்லார் அல்லார் அல்லார் நல்லோர் அல்லார் புஜபலம் இல்லையாயின் புரைப்பன்றி (குற்றம்) பேசுபவனம் நல்லார் ஆன்றோர் சான்றோரே இல்லையாயின் நல்லார் நலம் நாடாமல் செல்லார் நல்வழிதாண்டி செல்லார். நல்லார் அள்ளார் அள்ளார் நற்குணம் அல்லார் மாட்டு ஒரு பிடி அள்ளார். செல்லார் செல்லார் தவறியும் தீயாருடன் செல்லார்; சொல்லார் சொல்லார் தவறியும் தீஞ்சொல் சொல்லார். வள்ளார் வள்ளார் வள்ளலாய் இல்லாவிடினும் வாய்மையில் வள்ளார். நல்லார் நல்லார் சொல்லார் சொல்லார் ஒரு பொழுதும் பொய்சொல்லார். பொய்யே ஆயினும் புறம் சொல்லார்; சினம் கொள்ளார் சீறிப்பாயார் பாழாய்ப்போன பகை தனை வெறுப்பார்; பொறுப்பார் பொறுப்பார் பொறுமையை சோதித்தாலும் பொறையுடன் பொறுப்பார். உய்யும் வழிகள் ஆயிரம் இருப்பினும் உழவே பெரிதென்பார்; பொய்யுரைப்பாருடன் கை கோர்க்க மாட்டார் பொறுமையே பெ ருமை என்பார் நியாயமாய் செயல்படுவார் நீதியே நிலைத்த அறம் என்பார் பெருமை தரும் செயல் செய்வதே வரம் என்பார். தீது பயக்கும் தீமையை ஒழிப்பார் தின்மையை மனத் திண்மையால் அழிப்பார்; உண்மையாய் வாழ்ந்து உவந்ததைச் செய்பார்; உள்ளம்போடு பழகுவார் உழைத்தே உய்வார்; உலகப் பொதுமறையே திசை காட்டும் திருக்குள் என்பார்; துணிதலே வீரம் என்பர் துணிந்துவிட்டால் தோல்வி கூட துடிதுடிக்கும் என்பார்; கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே. தீது தன் தீமையே பயக்கும் தின்மையே நன்மை பயக்கும் தீவினையார் தீதே செய்ய விரும்புவர். நல்லார் நல்லார் செல்லார் செல்லார் தவறியும் தீயாருடன் செல்லார்; சொல்லார் சொல்லார் பொய் சொல்லார்; ஊரும் நாடும் யாதாயினும் உள்ளார் நல்லாராயின் ஊரே வளம் அடையும். மெய்யே அறம் உரைக்கும் மெய்ஞானமே சொருப ஞானம்மாகும் பொய்மையே புண்படுத்தும் எள்ளி நகைக்கும் சொற்கள் கொள்ளி வைத்ததுபோல் கொல்லும் ஆதலால் நல்லார் பொய்யுரையர் புறங்கூறார் பொருத்தருள்வார் பொறுமை இழக்கார் பெருமை விடார் அறிவென்னும் தீயால் அறியாமையை எரிப்பார் ஆற்றல் என்னும் அக சக்தியால் சாதிப்பார் சகித்துப்போவார். மெய்யால் அறம் தேடுவர் மெய்ஞானத்தால் அய்ஞாத்தை விரட்டுவர். எண் இல்லாதவர் கண் இல்லாதவர், எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர். எண்ணிச் செய்வான் புத்திசாலி எண்ணப்படிசெய்வான் விதண்டாவாதி நலம் நாடியே செய்வார் நல்லார்; எண்ணை முந்துமோ திரிமுந்துமோ என்று ஆறாயாது எண்ணிய செயலை முடிப்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்து முந்தியே செயல்படுவர் முனைப்புடைய நல்லார் . நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றேஎ - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோ(டு) இணங்கி இருப்பதுவும் நன்று
Chennai, Tamil Nadu, India.