நாகரீகம் இப்போ நடையக்கட்டி நாறிக்கிடக்குது; அநாகரீகம் வந்து கிடந்து அடம் பிடிக்கிது; அசிங்கம் எல்லாம் அழகாக வசிகரம் ஆகுது; ஆகாததும் போகாததும் நாகரீகமாகுது; அதையும் இதையும் செய்துவிட்டால் நாகரீகம் என்று பேசும் கூட்டம் கூத்தடிக்கிது; எதையோ பார்த்து விட்டு எதுக்கோ ஆசப்படும் கூட்டமும் குழுமி இப்போ குழப்பத்த விளைவிக்குது; கால ஓட்டத்திலே காசும் பணம் பாசமாகுது; பெத்த புள்ளைகள் எல்லாம் பித்து பிடிக்க வைத்து தள்ளியே நிற்க தக்கத் தருனத்தைத் தேடுது ; சொத்து சுகத்து மேல ஆசப் பட்டு வித்து தின்பதையே விரும்புது. வேலையத்தேடி ஒரு கூட்டம் விரைந்து ஓடுது; வேலை வெட்டி இல்லாம வீதியில சுத்தும் கூட்டமும் சுறு சுறுப்பாக இருக்குது; நாகரிக ஓட்டத்தில நல்லது எல்லாம் நடைய கட்டுது; நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு தேடித் தேடி தவிக்க வைக்கிது; நடுவீதியிலே சுற்றிவருவதை இது பெருமையா நினைக்கிது ; நமக்கென்னே என்றே ஒதுங்கிப்போகும் கூட்டம் நிரம்ப இருக்குது. பழி பாவத்துக்கு அஞ்சாத கூட்டம் படைய எடுக்குது; பகுத்தறிவை பாழ்படுத்தி பணம் பார்க்க துடிக்கிது சதியிங்கே சகஜமா பேசிப் பழகி சாந்தோசமா இருக்குது; சாக்கடைப் புழுவாய் நெளியும் கூட்டாம் நாகரீக முலாம் பூசுது; நான் நீ என்ற போட்டித்தான் நடக்குது; நடைபிணமாய் மக்கள் கூட்டம் திரியிது; நாட்டுவாசிகள் எல்லாம் காட்டுவாசிகளாகி வெகு நாளாக இடிச்சி; நலம் விசாரிக்கும் நல்லவங்க கூட்டம் நாளுக்கு நாள் குறைஞ்சிக்கிட்டே போகுது; நரைய மறைக்க நச்சையே சாயம் பூசும் கூட்டம் கூடுது; நஞ்சே இப்போ உணவாகுது; நஞ்சை புஞ்சை எல்லாம் காஞ்சியும் காணமால் போயும் பஞ்சம் இப்போ படுத்துறங்குது; வஞ்சமும் பஞ்சமும் படுத்தி எடுக்குது; அருமை பெருமை போயி வறுமையில வாய பொளக்க வைக்கிது; தலைவிதியே இங்கே தடுமாறுது; நாட்டுப்பற்று இங்கே நாடுகடந்து போகத் தவிக்கிது; நாசமத்து (நாசமற்று) இருந்த கூட்டம் நாசமா போகுது; நாதியத்த நகரத்திலே வியாதி மண்டிக் கிடக்குது; நாலைய பற்றி நினைக்காது நடுவீதிக்கு வந்து திரியும் கூட்டம் நிரம்பி வழியிது; கற்காலம் தாண்டி கணினிகாலம் வந்தும் காட்டுவாசியா வாழ ஒரு கூட்டம் விரும்புது; தற்காலத்தில தவறுக்கு மேலே தவறு செய்து வாழக்கையை தகனம் செய்ய மனிதக் கூட்டம் துடிக்கிது. கலாச்சாரம் காலாவதியாகி கைபேசிக்குள்ளே காலம் கழிந்துபோனது; கட்டழகும் இளமையும் கெட்டுப்போனது; மண்ணுலகம் மின்னுலகமாக மாறுது; முகம் தெரியாது முகநூலில் நட்பை தேடும் கூட்டம் மட மடன்னு கூடுது; உலகம் இப்போ ஒரு கைபிடிக்குள்ளே அடங்கிக் கிடக்குது; நாட்டுவாசிகள் எல்லாம் காட்டுவாசிகளாகி வெகு நாளாகிடிச்சி நலம் விசாரிக்கும் நல்லவங்க கூட்டம் நாளுக்கு நாள் குறஞ்சிக்கிட்டே போகுது உண்ண உணவு இல்லை என்றாலும் உடுத்தும் உடைக்கு செலவு செய்ய துடி துடிக்கிது; உடைக்கு உடலுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் உள்மனசுக்கு கொடுக்க மறக்குது. மின்னஞ்சல் இப்போ மின்னலா தகவலை பரிமாறினாலும். தவறுக்கு மேல் தவறுகளும் தவறான தகவலுக்கும் ; தகாத செயலுக்கும் துணை போகுது. தொலைபேசி போய் அலை பேசி வந்து எல்லை தாண்டி தொலைகளே தொடருது; அளாவி ( wechat ) யிலே உலாவும் கூட்டம் தடுமாறுது. ஊடலை (புளூட்டூத்து) இப்போ உயிருக்கே ஆபத்தாகுது சமிக்கை உலகம் (digital world) சவக்குழியத் தோண்டுது புலனத்தில் (Whatsap) புதுவாழ்க்கையைத் துவங்கிய கூட்டம் கண்ணியத்தை இழந்து கிடக்குது; வலையொளி YouTube என்ற சமூக உடகம் இப்போ சகலத்தையும் தந்து சகாப்தம் படைத்தாலும் சமூதாயத்தையே ஆட்டிப்படைக்கிது; அருகலையும் Wi-Fi பகிரலையும் hotspot பக்கத்தில் இருப்பவர்களையும் விதேசியாக்குது. ஆடிப்பாடித் திரிந்த மனிதன் ஆயுள்கைதியாகி கிடக்கும் காலம் பிறந்தது; பகுத்தறிவு இங்கே பக்கவாதம் பாரிசவாதம் வந்து கிடக்குது; பட்டறிவு இங்கே பட்டுப்போயி கிடக்குது பண்பு இப்போ வம்பு செய்யிது. மரத்தை இலை காக்குது; மானத்தைப் பணம் காக்குது. குணத்த கோபம் கெடுக்குது; சினத்த மனமும் சீண்டிப் பாக்குது. சிற்றின்ப வாழ்வைத் தேடி பயணம் தொடருது மண்ண காத்த மழையிப்போ வர மறந்துபோனது; மனுசன மனுசன அடித்து சுரண்டும் காலம் பிறந்தது. நாகரீகம் இப்போ நாசமாகிக் கிடக்குது.
Chennai, Tamil Nadu, India.