கண்ணீரும் பன்னீராகும் கவலையும் கலகலப்பாகும், கண்டும் காணாமல் விடும்போது. கண்ணீரும் பன்னீராகும் துக்கத்தை தூக்கி சுமக்காத போது. கவலையும் கலகலப்பாகும் சோகத்தை சொந்தமாக்காதபோது. கண்ணீரும் பன்னீராகும்; கவலையை காயமாக்காதபோது(ரணம்; காயத்தை (உடல் ) சோகம் சுமக்காதபோது. கவலையும் கலகலச் சிரிப்பாகும் ஏக்கத்தை ஏந்தி தடுமாறாது தட்டி விடப் பழகும்போது. கண்ணீரும் பன்னீராகும் சோகத்தால் வாடி வதங்கி வருந்தாத போது. கண்ணீரும் காயாத வடுதான் கதைகள் ஆயிரம் சொல்லி வடிக்கும் போது. கண்ணீரும் பனிநீர்தான் துயரத்தை துரத்தி உதிர்த்து விடும்போது, கவலையை மறைக்காது மறக்கும் போது. கண்ணீரும் சுவைக்கும் இன்ப அதிர்ச்சியை சுமக்கும் போது. கண்ணீரும் திக்திக்கும் பாசத்தின் சுமையைச் சுமக்கும் போது; கண்ணீரும் இனிக்கும் தவிக்கும் சிசுவும் தாயிடம் தஞ்சம் அடையும்போது. கவலையும் கலகலப்புத்தான் மனப்புழுக்கத்தை கண்கள் சுமக்காத போது. துன்பங்களையும் இன்பமாக நினைக்கும் போது. இறுக்கமும் இனங்கும் நெருக்கம் தான் இதயம் நொறுங்காத போது; இதயமும் நொறுங்கும் தான் துடி துடித்து பதை பதைத்து தவி தவிக்குப்போது; இதயமும் நெருங்கும்தான் தவறுகளை மன்னிக்கும்போது. கண்ணீரும் பன்னீராகும் இதய பாரத்தை இறக்கிவைக்கும் போது. கண்ணீரும் காயத்திற்கு மருந்தாகும் கவலைகளை சோகங்களை தேக்காது வழிய விடும்போது. கண்ணீரும் கருணையாகும் இதயம் இரக்கப் படும்போது. கண்ணீர் கசிந்தாலும் கரிக்காது வலியையும் வலிமையாக்கும் போது; கண்ணீரும் வெண்ணீராகும் கண்கள் சோகத்தால் சுட்டுக்கொள்ளும்போது. கண்களும் கல்லரையாகும், சோகத்தை இதயத்தில் புதைக்க நினைக்கும் போது. கண்களும் தவிக்கும் நீ தனிமையை சுமக்கும் போது; கண்ணீரும் கரிக்கும் வாழ்வில் தோல்வியை சுமக்கும் போது. கண்ணீரும் கடலாகும் நீ கவலையில் மிதக்கும் போது. கவலையும் காணாமல் போய்விடும், சோகத்தை சுமந்து சுமந்து மரத்து போகும்போது. கவலையும் உருக்கி விடும் உருகி உருகி நேசித்தவர்கள் பிரியும் போது. கண்ணீரும் இறுகிவிடும் சுமைகளே சுற்றி வளைக்கும் போது. கண்ணீரும் படிந்துவிடும் பிரச்சனைகள் பிசு பிசு என்று ஒட்டும் போது. கண்ணீரும் வடிந்துவிடும் சோகத்தை மறைத்து சுமுகமாக பழகும்போது. வறுமையின் சுமையும் சுகமாகும் வெறுமை என்று நினைக்காது பொறுமையாக சுமக்கும்போது கண்ணீரும் கண்ணினுள் தேங்கிவிடும் தவிப்பும் துடிப்பாகும் போது. கண்ணீரும் தூங்கவிடாது தவிக்கவிடும் துக்கத்தை மனப்பாறமாக சுமக்கும் போது. கண்ணீரும் செந்நீர்தான் புத்திரசோகத்தைச் சுமக்கையிலே. கண்ணீரும் பெருங்கடல்தான் பிறவிக் கடலை நீந்தும் போது கண்ணீரும் கானல் நீர்தான் ஏமாற்றத்தை ஏந்தி வரும்போது. சோகத்தை சொத்தாக நினைத்து சொந்தமாக்காதே; கவலைகளை கட்டிப்பிடிக்காதே; துக்கத்தை தூரவிரட்டு தூண்டில்போட்டு பிடிக்காதே. கண்ணீரும் பன்னீராகும் கவலையும் கலகலப்பாகும், கவலை சோகம் துக்கம் ஏக்கம் வருத்தம் வலி வேதனை சோதனைகளை சொந்தமாக்காதபோது. கண்ணீரை பன்னீராக்கு பழைய கவலையை விரட்டி; பழகிய கவலையை விடு, புதிய கவலைகள் பூக்கட்டும், பூட்டு போடநினைக்காதே; கண்ணிரால் கவலைகளை கழுவுவதைவிடு. புதிய துன்பமும் இனிக்கட்டும்; கண்ணீர் பூக்கள் உதிரட்டும்.
Chennai, Tamil Nadu, India.