கொட்டிய குப்பையோ ஒட்டிய அழுக்கோ மக்காத குவியலோ மின்னணுக் கழிவோ உடைந்த சட்டியோ உடையாத பயனற்ற பொருளோ; பட்டறையில் வந்த இரசாயணக் கழிவோ. விட்டிட்ட புகையோ; வீசிய பொருளோ மண்டிய கழிவோ; மக்காத குப்பையோ; வீதிக்கு வந்த கழிவோ; நீர்நிலைகள் வாய்க்கால்களை நிரப்பிய நெகிழியோ; அண்டிய ஒட்டடையோ. அசிங்கம் மட்டுமல்ல அபாயமும் தான். கொட்டிய கழிவோ வீசிய பேப்பரோ. மிஞ்சிய சோறோ வீதிக்கு வந்த தூசியோ மிதித்த சானியோ வீசிய துர்நாற்றமோ விரைந்த நோயோ. கெட்ட நீரோ கெட்டுப்போன குழம்போ கட்டிய சாக்கடையோ பழுப்பேரிய பாசியோ படர்ந்த பண்ணாடையோ வெட்டிய மரமோ வேண்டாத குப்பையோ மடிந்த உடலோ மக்கிய உறவோ எத்தகை விரயங்கள் எத்தனை துர்றாற்றங்கள் எரித்த குப்பையோ எடுத்துச் செல்லாத குப்பையோ; கசிந்த நச்சு வாய்வோ கெட்டி கிடக்கும் நச்சுக் கழிவோ. ஆறு குட்டை குளமோ அழித்திட்ட நீர்ஆதாரமோ கழிவு நீரோ கண்ட நோயோ தேங்கிய நீரோ தென்படாத கிரிமியோ மண்டிய கொசுவோ தாக்கிய மலேரியாவோ குட்டிபோட்ட ஈக்கலோ குடிகொண்ட காலராவோ வந்த வைட்ரோட்டமோ வதைத்த மஞ்சக்காமாலையோ பிடிக்க வந்த வைரசுகளோ. பேர்தெரியாத நோயோ? எல்லா நோய்களுக்கும் ஆதாரங்கள் கழிவு; மனிதன் படைத்த பொருள்கள் எல்லாம் மண்ணில் மண்டுவது நியாயமா மண்ணும் மக்கினால் மனிதா உனக்கேது உணவு? நோயை உண்பாய்; நொடியில் மாய்வாய்; புரிந்திடு மனிதா; புதைத்தது போதும்; புதிய உலகம் படைக்க துடித்தது போதும். கூடிய குப்பைமேடு, கொண்டு செல்ல வந்த எமனின் குடில். மங்கள உலகை மனிதன்விளையாட்டுக்காக மறந்தும் அழித்திடாதே. சுற்றத்தோடு வாழு சுற்றுப்புறத்தை சுத்தமாய் வைத்துப் வாழு.
Chennai, Tamil Nadu, India.