Blog

முகவரியை தொலைத்த மனிதர்கள்

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 26/12/2024
  • Category: valkkai
  • Views: 114
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

முகவரியைத் தொலைத்த மனிதர்கள்; முகமே தெரியாத மனிதர்கள்; முன்னுக்கு வர தவிக்கும் சாமான்யர்கள், சபிக்கப்பட்டவர்கள். முழுதாய் புறக்கணிக்கப் பட்டவர்கள்; ஒதுக்கப்பட்டவர்கள்; முன்னேற்றம் அடையத்துடிக்கும் அப்பாவிகள்; முறைகெட்ட சமுதாயத்தில் முழுத்திரைபோட்டு மறைக்கப்பட்டு மனித ஜடங்களாக்கப்பட்டவர்கள்; முன்னேற முண்டியடித்து வந்தாலும், முன்வர முடியாது துடிக்கும் தவிக்கும், முகவரியை தொலைத்த மனிதர்கள். இவர்கள் வாழ்வாதாரத்தில் வழுக்கி விழுந்த மனிதர்கள்; வழுக்களை சுமந்தாலும், பிழைப்புக்கு வழிதெரியாது தவிக்கும் சாதாரண மனிதர்கள்; வறுமையையே வடுவாக சுமக்கும் வக்கத்தவர்கள், திக்கத்தவர்கள்; வலிகளை சுமக்கும் வலியர்கள்; வலிமைசாலிகள், எளியர்கள் ஏமாளிகள்; அடிமட்டத்தில் கடைகோடியில் இருக்கும் கோடி கோடி மக்கள்; உடன் குடியிருப்பதோ வறுமையும் வெறுமையும்; சோகத்திற்கு சொந்தக்காரர்கள்; அன்னாடஙவறுமையும்கள் (அன்றாட) ; அடிமைகள் இல்லாது அடிமைகளாய் வாழும் வர்க்கத்தவர்கள், வக்கத்தவர்கள்; அன்றாடபொலப்பிற்கே அல்லாடும் அதிசய மனிதர்கள்; சகமனிதர்கள் என்றாலும், சக்கையாய் புழியப்படும் சாதாரண மனிதர்கள் உயிருடன் உணர்விருந்தும் ஒதுக்கப்பட்ட மனிதர்கள்; உடல் சோர்வையும் உள்ளச் சோர்வையும் உடையாய் கொண்டவர்கள்; சமூகபொருளாதாரத்தில் ஒதுக்கப்பட்டு, தள்ளப்பட்டு, ஓடாய் தேய்ந்து, ஒடுங்கி ஒதுங்கி வாழும் மக்கள்; சாதாரண படைப்பாளர்கள் சமுதாய சாக்கடையில் தள்ளப்பட்டவர்கள்; சலித்து சகித்து வாழும் சபிக்கப்பட்ட மக்கள்; உடமைகளையும் உரிமைகளையும் இழந்த கடைகோடி வர்கத்தினர்; கவலைகளுக்கு முழு சொந்தக்காரர்கள். எதார்த்தமாக வாழ்பவர்கள்; சரித்திரம் படைக்கும் தரித்தர பாட்டாளிகள்; இயற்கையின் பிழையால் இரக்கமல்லா மனதர்களால் இடறிவிடப்பட்ட முகவரியை தொலைத்து, முன்னுக்கு வர தவிக்கும் மனிதர்கள்; காலக்கள்வனால் வஞ்சிக்கப்பட்டவர்கள். சமநீதி சமூக நீதியைப் பெற போராடும் போராளிகள், பசிபட்டினியே பாட்டாளிகளின் கூட்டாளிகள்; தாழ்ந்த நிலையில் இருந்தாலும் தாழ்ந்து போகாதவர்கள்; தரங்கெட்ட செயலை செய்யாதவர்கள்; ஒதுங்கி வ[ழ்]ந்தாலும் பதுங்கி வாழாத உயர்ந்த மனிதர்கள். முறைசாரா அமைப்பின் முதல்வர்கள்; இருப்பதை வைத்து இயல்வாய் வாழும், இல்லாமையில் இழுபறி வாழ்வை நடத்தும் இதயம் உள்ளவர்கள்; ஏட்டுப்படிப்பை எட்டிப்பார்க்கவில்லை என்றாலும், வாழ்க்கை பாடத்தில் பல பட்டம் பெற்ற பாட்டாளிகள். இவர்கள் முகவரிதொலைத்த மனிதர்கள் முகம் பார்த்து சிரிக்கவே தவிக்கும் சாதாரண மனிதர்கள்; தடைகள் தடுமாற்றத்தையே சொந்தமாக்கிக் கொண்டவர்கள். மிச்சம் இல்லை என்றாலும் அச்சமின்றி வாழும் அன்புள்ளங்கள்; அக்கரை அடையமுடியாது தவித்தாலும் கறையில்லாத அக்கரையுள்ள அப்புறாணி மனிதர்கள்; அவர்கள் முகவரியை தொலைத்த மனிதர்கள். புரட்சிகள் பல நடந்தாலும், வளர்ச்சிகள் பல நிகழ்ந்தாலும்,】 வறுமை சுழலிலும் வளர்ச்சி சிக்களிலும் சிக்கித் தவிக்கும் சாதாரண மனிதர்கள். முகவரியைத் தொலைத்த ஏமாளிகள்.

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media