செம்மொழியே நன்மொழியே எம்மொழியே! தரணிபோற்றும் செந்தமிழ் மொழியே! தொன்மை மொழியே! தன்மையான மொழியே! தரணியாழ வந்த தாய்த் தமிழ் மொழியே! எண்மை மொழியே, வண்மை மொழியே, எம்மையாழ வந்த இன்பத் தமிழ்மொழியே! முன்மைமொழியே! மென்மை மொழியே! மேன்மை மொழியே! முத்தமிழ் ஈன்ற முதன்மை மொழியே! ஓண்மை மொழியே! பண்மை மொழியே! தொண்மை மொழியே! பலம்கொண்ட பழந்தமிழ்மொழியே! மூத்த குடிமகனாம் தமிழ் மகன் மொழிந்த தமிழ் மொழியே! ஆதிமொழியே! அந்தமுமான மொழியே! அழிவே இல்லாத எம் செந்தமிழே! செம்மை மொழியே செழுமைபெற்ற தமிழ் மொழியே! தாய்மொழியே! தமிழ்மொழியே! தரணியில் முதல் உதித்து பரணிபாடிய தமிழ் திருமொழியே! தூய மொழியே இனிமைததும்பும் இலக்கிய மொழியே! மேன்மை மொழியே! வாய்மை மொழியே! வாழ்வை நெறிபடுத்தவந்த புனித மொழியே! வாழவைக்கும் இனிய தமிழ் மொழியே! நுண்மைமொழியே நூல்பல தந்த நூதனமொழியே! வியன்மை மொழியே வீறுடை போடும் செம்மொழியே! வேறூன்றி மரபு காக்க வந்த தமிழ் மொழியே ஓரெலுத்துக்கும் உயிர் தந்த உலகத் தமிழ் மொழியே! உயிர்நாடியான உயர் மொழியே! வியக்க வைக்கும் வியத்தகு செந்தமிழே! தேறல் சுவையூட்டும் தேன் இனிய தமிழ்மொழியே! தூயநன்மொழியே! அகம் புறம் அறநெறி மறை முறை இறை கரை கண்ட அரிய மொழியே! மரபு காத்த மாமொழியே! அகத்தியம் தொல்காப்பியம் அகம் புறம் முதல் ஆத்திச்சூடி குறள் என அழியா கவிக் குவியலை கல்விக்குவியலை தந்த செம்மொழியே! காதல் நீதி வீரம் தீரம் ஒழுக்கம் விவேகமென வாழ்வியலுக்கு வழிகாட்டிய செம்மொழியே! பைந்தமிழ் மொழியே! சுரம்பிறந்த மொழியே! சுவையூட்டிய செம்மொழியே! கல்லையும் கனியவைக்கும் கன்னித் தமிழ்மொழியே! கலைவளர்த்த எம்மொழியே! கலைவாணி காக்கும் தமிழ் மொழியே! கற்புக்கரசியர் காத்த செம்மொழியே! காவியம் பல படைத்த தமிழ்மொழியே! முத்தமிழ் கண்ட மூத்தமொழியே! முருகப்பெருமான் கட்டிக்காத்த இறைமொழியே! இந்து- சைவம் வைணவம் புத்தம், சமணம்; இஸ்லாம், கிருத்துவமென பண்மதத்தையும் பரப்பிய பாரிச் சிறந்த பழம்பெரும் தமிழ்மொழியே! தன்னிகரற்று சாகாவரம் பெற்ற தமிழ் மொழியே! ஓசையில் பிறந்த மொழியே! ஓங்காரமாய் நின்ற மொழியே! ஆங்காரம் கொண்ட எனதன்னைத் தமிழ்மொழியே! பைங்கிளியாம் பட்சிகளும் பேசிய செம்மொழியே! உயிர் மெய் ஆயுத, உயிர்மெய்யெழுத்துக்களென்ற அமுது கலவையே! குறில் நெடிலென்று தழைத்தோங்கிய செம்மொழியே! தெம்மாங்கு பாடும் தமிழ்மொழியே! வாழி! தமிழா, தமிழால் தமிழனாய் அச்சம் இன்றி இச்செகத்தில் தலைநிமிரிந்து வாழ்வோம். காலம் தாங்கட்டும் காதல் சுவை கனியட்டும், கண்ணியம் காக்கட்டும், இயற் தமிழ் இயம்பட்டும், இசைத்தமிழ் வாசிக்கட்டும், நாடகத் தமிழ் நடனமாடட்டும்; தமிழன் உடைமை பறி போகாதிருக்க, தமிழனின் தமிழ் வீரம் புடைக்கட்டும்; தமிழன் விவேகம் சிறக்கட்டும்; சாதனைகளும் சரித்திரமும் தமிழன் படைக்கட்டும்; களவு போக வேண்டாம் தொன்மை தமிழ்; கலங்கம் வேண்டாம் அன்னை தமிழுக்கு, தமிழே நம் மூச்சாகட்டும்! தமிழே நம் பேச்சாகட்டும்! தமிழே நம் உணர்வாகட்டும்! தமிழே நம் வாழ்வாகட்டும்! தமிழால் வாழ்வோம்! மரத்தமிழனாய் வாழ்வோம்! வளம் நலம் பெறட்டும் தமிழாட்சி; பாதகம் செய்ய நினைப் பவனை பாய்ந்தே அடிப்போம், தமிழனாய் வாரீர்! தமிழ் மரபு காக்க வாரீர்! வாழ்க செம்மொழி! வளர்க தமிழனின் செந்தமிழ் பற்று! வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்
Chennai, Tamil Nadu, India.