ஒரு ஆசிரியருக்கு ஆக்கப்பூர்வமான மனம் இருக்க வேண்டும். -டாக்டா் ஏ.பி.ஜே அப்துல் கலாம்- கற்பித்தல் என்பது மிகவும் உன்னதமான பணியாகும், கற்பித்தலில் ஒருவரின் பாத்திரம், திறமை மற்றும் ஒரு தனிநபரின் எதிர்காலம் வடிவமைக்கப்படுகிறது. -டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம்- கற்பியுங்கள் கற்பியுங்கள், கல்வியோடு சேர்த்து அறக்கருத்துக்களையும் கற்பியுங்கள் கற்பிப்பதுடன் நிற்காது கற்றுக்கொடுங்கள். கற்றுக்கொடுங்கள் கற்றுக்கொடுங்கள், கல்விஞானம் கேள்வி ஞானம் பெருக கற்றுக்கொடுங்கள்; பதில்களை எதிர் பார்ர்ப்பதைவிட, அதிகமான கேள்விகளைக் கேட்க விடுங்கள்; பள்ளிக்கூடங்களை பயிலகமாக்கும் நீங்கள் மாணாக்கார்களை சமுதாயத்தை பயிலகமாக்க உதவுங்கள்; மாண்பு மிகு மாணவனை உருவாக்குங்கள் மாக்களை மாயையை உருகாக்கக் கற்றுத்தராதீர்கள் மனதையும் மானத்தையும் சேர்த்து உருவாக்குங்கள்; மாணவனை உருவாக்கும் போது நல்ல மனிதனாய் மாறக் கற்றுக்கொடுங்கள். ஊக்கத்தை உர்ச்சாகத்தை வளர்த்து விடுங்கள் நல்லொழுக்கத்தை வளர்த்து விடுங்கள் ஊதாரியாய் உதவாக்கரையாக போகாமல் இருக்க நன்மை மென்மை தன்மையை பொறுமை இயல்பான வாழ்வியலைச் சொல்லித் தாருங்கள்; நேசத்தைக் கற்றுத் தாருங்கள்; தேசத்தைப்பற்றி கற்றுத் தாருங்கள்; ஒழுக்கத்தை கற்றுக் கொடுங்கள் ; ஒன்றாய் நன்றாய் வாழக் கற்றுக் கொடுங்கள் ஒற்றுமையாய் வாழக் கற்றுக்கொடுங்கள். அறிவுச் சோலையை அறச்சாலையாக்குங்கள், சிறைச்சாலையாகாதீர்கள், வகுப்பறையை நற் கற்பகமாக்குங்கள். பாசம் மிகுந்த பாசறையாக்குங்கள். சீர்திருத்தங்கள் துவங்க வேண்டியது பள்ளிக்கூடத்தில் இருந்து, பள்ளிகளை பயனளிக்கும் கூடமாக, பண்பாட்டுக் கூடமாக்குங்கள், தொழிற்சாலையாக மாற்றி விடாதீர்கள், தொல்லை தரும் அரங்கக மாற்றிவிடாதீர்கள். கற்க கற்றுகொடுங்கள் கண்மூடித்தனமாய் வாழாது கவனமாய் வாழ கற்றுக்கொடுங்கள். ஜீவ காருண்யத்தின் சித்தாந்தத்தையும் சேர்த்துக் கற்றுக்கொடுங்கள். சீறுடையணியக் கூறும் நீங்கள் சீறும் சிறப்புமாய் மாணவர்கள் வாழ, சிறப்பாக கவனம் செலுத்துங்கள், மதிப்பெண்பெறுவதுடன், மதியோடு மதிப்பு மறியாதையோடு வாழ்வதெப்பபடி என்று கற்றுக்கொடுங்கள். மனிதாபி மானத்தையும் கற்றுக்கொடுங்கள்; கற்பித்தலுடன் ஆற்றாமையை அல்ல அவன் ஆற்றலை திறமையை அவனே கண்டுபிடிக்க உதவுங்கள். ஆசிரியர் என்பவர் கற்பிப்பவர்மட்டும் அல்லர் கற்றுக்கொண்டே இருப்பவனர் என்று உணருங்கள். எளிமையாகக் கற்றுக்கொடுங்கள், இனிமையாக கற்றுக்கொடுங்கள், ஏழ்மையின் தாகக்கத்தைக் கற்றுக்கொடுங்கள். ஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமமாவாள். ஒரு நல்ல தகப்பன் பலமசாலியான மனிதனை உருவாக்குகின்றான் ஒரு சிறந்த ஆசிரியர் நல்ல நடமாடும் பல்கலைக் கழகமாகின்றார். நல்ல எதிர்காலத்தை நல்ல தேசத்தையே உருவாக்குகினின்றார். சராசரி ஆசிரியர் பாடத்தை நடத்துகிறார். சிறந்த ஆசிரியர் நடைமுறை உதாரணங்களோடு கற்பிக்கிறார். உன்னதமான ஆசிரியர் உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறார். -வில்லியம் ஆல்பர்ட்- காலை வணக்கத்தைக் கூறும் அன்பன் அ. முத்துவேழப்பன்
Chennai, Tamil Nadu, India.