பேராசையை வளர்த்தான் பேயாய் திரியத் துவங்கினான் மனிதன் உயர்த்திய கோடாளி அவனையே பதம் பார்கின்றது மலடானது மனித நேயம், மாயாவாதம் பேசும் மனிதன், மாயாஜாலம் செய்தான், வந்த பூமியல் தந்த பூமியையே சுரண்ட ஆரம்பித்தான் சவம் ஆவோம் என்பதை அறிந்தும் நாம் வாழ நம் பூமி வேண்டும் என்பதை மறந்தான் சொத்து சுகத்ததைத் தேடியவன் சோத்திற்குச் சொந்தக் காரன் ஆனான், சோம்பலையும் சேர்த்து வளர்த்தான், பரிகாரம் தேடும் பாவ மனிதன், தான் அழித்த இயற்கையை மீக்க பரிகாரம் தேட மறந்தான் பிறரைப் பார்த்து பரிகாசமும் செய்யத் துவங்கினான், தனக்கு ஒன்று என்றால் பரிதாபப் பட ஆட்களைத் தேடினான், பிறருக்கு ஒன்று என்றால் பார்த்தும் பாரா முகமாகச் சென்றான் பரிதாப மனிதன் புரிதல் இல்லாமல், அறியாமைமையப் போக்க அறிவை வளர்த்தான், அறிந்தே பல தவறுகளைச் செய்தான், எழுதுகின்றான் அழிக்கின்றான், மீண்டும் எழுதி அழிக்கத் துடிக்கின்றான், இன்றைய மனிதன் பேராசையை வளர்த்தான் பேயாய் திரியத் துவங்கினான். அ. முத்துவேழப்பன்
Chennai, Tamil Nadu, India.