எத்தன பிறப்பு எடுத்தாலும் அப்ப ஆத்தா உறவுக்கு நிகராகுமா? எத்தனக் காசு பணம் சம்பாதித்தாலும் அப்பன் ஆத்தாவ விலைக்கு வாங்க முடியுமா. எத்தன வாசனத் தைலத்த தேச்சாலும் அப்பம் ஆத்தா பாசத்தின் வாசத்துக்கு ஈடாகமா. அட எத்தன சுத்தும் பூமியையே சொந்தமாகத் தந்தாலும், அப்பன் ஆத்தா உறவென்ற சொத்துக்கு இணையா தரமுடியுமா. எத்தன சாமி வாந்தாலும் ஏ அப்ப ஆத்தா மாதிரி குலசாமி ஆக முடியுமா. எத்தன பாடத்தப் படித்தாலும் அப்ப ஆத்தா பட்ட பெரும்பாட்ட படிக்காம நாம வாழ்க்கையிலே ஒசர முடியுமா. எத்தன வில ஒசந்த பொருளு இருந்தாலும் அப்ப ஆத்தாக்கு மேல ஒசத்தியா எதுவு மிருக்குமா எத்தன வசதியா வாழ்ந்தாலும் அப்ப ஆத்தா கொடுத்த அசதியில்லா வசதி வாழ்க்கை எதிலும் கிடைக்குமா. எத்தன மாத்தம் வந்தாலும் அப்பா-அம்மாவின் அன்பு என்றும் மாறுமா. எத்தன ஏமாத்தத்த சுமந்தாலும் அப்ப ஆத்தா நம்ம சுமக்க மறந்ததுண்டா. எத்தன பெருமை பீத்தினாலும் அப்ப ஆத்தா பெருமையா பேசாத வாயும் வாயாகுமா. எத்தன பாராட்டும் பெருமையும் சேர்ந்தாலும், அப்ப ஆத்த பட்டப் பாட்டையும் போராட்டத்தை நினைக்காம இருக்க முடியுமா. எத்தன பெரிய மனுசனானாலும் தன் மானத்தை விட்டு அவமானப்பட்டு நம் மானத்த காத்த அப்ப ஆத்தாவ மறக்காமல் இருக்க முடியுமா எத்தன பாதுகாப்புக் கவசத்த அணிந்தாலும் அப்ப சுமந்த தோளைப் போலவும் ஆத்த சுமந்த கருவறைப் பொக்கிஷ போன்று பாது காப்பானது எதுவும் உலகில இருக்குமா
Chennai, Tamil Nadu, India.