Blog

உழுபடை

  • Author: அ. முத்துவேழப்பன்
  • Published On: 19/11/2025
  • Category: valkkai
  • Views: 53
பேசுவதற்கு கவிதை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் / Please select the Kavithai text to speak.

உழுபடை எல்லாம் அழுபடையல்ல, உடலை வருத்தி வாழும் உழைப்பாளர் படைகள் எல்லாம் அடிமைகளும் அல்ல, ஊழல் படைகள் நிரம்பிய உலகில் உழுபடைக்கேது வாழ்வு தம்பி. உழைப்பைச் சுரண்டி வாழும் யாவரும் ஆளும் வாழும் படைகளானர் உழல் நிரம்பிய சூழலில் உழவின் சழட்சி வளர்ச்சி யாகாது, தளட்சியானது தம்பி. உழவர்கள் யாவரும் எழுவறானால் கிளர்ச்சியே வெடிக்கம் தம்பி, உழவர் உழவை விட்டால், உனக்கேது உண்ண உணவு தம்பி; இந்த உன்மையை உணரும் தருணம் இது தம்பி. தவறுக்கு மேல் தவறைச் செய்யாதே தம்பி; தவறவிட்டபின் தப்பிப் பிழைக்க முடியாது தம்பி; நப்பிப் பிழைப்பு இனியும் வேண்டாம் தம்பி. விவசாயம் இல்லாமல் முகச்சாயம் கூட பூசமுடியது தம்பி. விதைக்க விவசாயி மறுத்தால் பெரும் வதைதான் தம்பி, மறைந்தே போகும் மனித இனம் இந்த புவியிலிருந்து தம்பி. சாதிச் சண்டை போடும் நீ சாப்பாட்டுக்கு கூப்பாடு போட வேண்டும் தம்பி, சாப்டுவர் தொழிலில் சாதிக்கும் நீ சாப்பாடுக்கு கூப்பாடுபோட வேண்டும் தம்பி, வசதியைத்தேடுடிப் போகும் நீ இந்த உலகில் வசிக்கவே முடியாது தம்பி. உணவு இல்லாத உலகம் யாவும் மயானம் தான் தம்பி, ஏமாற்று உலகை விட்டு மாற்று உலகம் தேடிப்போகுமுன் மடியத்துடிக்காதே தம்பி. நேற்று வந்தவன் இன்று இருந்தான், நாளை இல்லை தம்பி. இந்த மண்ணில் உழவு நேற்றல்ல இன்றல்ல நாளையும் வேண்டும் என்று உணரும் காலம் பிறக்க வேண்டும் தம்பி. மாரி பொழிப்பினும், மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும், ஒல்லல் படாது அல்லல் எள்ளல் படுவதும் உழுபடை தம்பி. பழி பாவமே செய்யாது, படுந்துயர் சுமப்பது உழுபடை தம்பி. கொழுபடை தோற்றால் எழுபடை தொழுபடை ஏது தம்பி, கொள்கை கொள்கை என்று கொல்லையடிப்பதை இனியும் நீ விடு தம்பி. சோற்றைத் உண்ணும் நீ, சேற்றை நீயும் ஒருமுறை மிதித்துப்பாரு தம்பி, நாற்றை ஒருமுறை நட்டித்தான் பார் தம்பி. ஊற்றார் பிறக்கும் மண்மீது ஆசையும் உனக்குத் தம்பி, வயலை வாடவிட்டு வறுமை ஒழிப்பு கோசத்தில் வயிறு நிரம்பாது தம்பி, வறுமையை போக்க வயலைகாக்க வேண்டும் தம்பி, வலுயிழந்த விவசாதத்தை உயர்த்தி நிமிர்த வேண்டும் தம்பி. போர் முனைக்குத் துடிக்கும் நீயும், ஏர்முனைக்குப் புறப்படு தம்பி. ஏற்றம் என்பது ஏர்கலப்பையில் பிறக்கும் தம்பி. மாற்றம் என்பது மண்ணில் விளையும் தம்பி. நவதானியங்கள் நெல்மணிகள் தான் பொன்னுமணிகள் அது நம்மைக் காக்கும் கண்ணுமணிகள் தம்பி; அதை புரிந்து வாழ வேண்டும் தம்பி, நல்ல நல மாற்றம் துர் நாற்றம் அடிக்காது பிறக்கும் தம்பி. சகதியும் சேறும் படாமல் வாழும் நீ சகித்தே வாழும் உழவனைப் போய் பாரு தம்பி, மூளைக்கு வேலை கொடுக்கும் நீயும் மூலையில் கிடந்து வெயிலோ மழையோ நிலத்தில் உருண்டு பிரண்டு, உனக்கான உணவுக்காக, நிலத்தைக்காக்கும் உழவுப்படையைப் போய் பார்த்துப் போற்ற மறந்துவிடாதே தம்பி. கணினியோ காரு பங்கலாவோ சோறு போடாது தம்பி, கழனியைக் காக்க வேண்டும் தம்பி. கழனிகாஞ்சா விவசாயம் சாஞ்ச கஞ்சிக்கு நாம் சண்டைபோட்டே சாகவேண்டும் தம்பி. வஞ்சித்தது போதும் தம்பி, விவசாயின் வயிற்றில அடித்ததும் போதும் தம்பி, வாழ வழி தேடிய நீ, விவசாயத்தை வாழ விடு தம்பி, விளைச்ச பயிருக்கு விலையக் கொடு தம்பி. விவசாயம் தழைக்க விழுந்து கும்பிடு தம்பி. பிச்சை கேட்கல தம்பி பச்சைப் பசேலைன்று வயக்காடு நிரம்பிக் கிடக்க விவசாய நிலத்தை விலை பேசாத தம்பி. வெசமத்தனம் செய்தது போதும் தம்பி, விளையாட்டா நிலத்த அபகரித்தது போதும் தம்பி விளையாடி ஓடி வந்த நதியா முடக்குனதும் போதும் தம்பி. மண்ணு மறக்க உன் மனசு தொறக்கணும் தம்பி, மண்ணு மேல பொண்ணு மணியா பயிர்கள் வளர ஓ பார்வ விவசாயிங்க பக்கம் படனும் தம்பி. விவசாயியே ஒசந்த சாதின்னு நீ உணரனும் தம்பி, உணவு கொடுப்பவன் உயிர்காப்பான் தம்பி, அதை நீ உணர்ந்து வாழனும் தம்பி. நாகரீக சாயத்த பூசி வாழ்ந்ததும் போதும் தம்பி. நாலு படிப்பு படித்து காசு பார்த்த நீயும் யோசிச்சு பாரு தம்பி, ஏசி காரு ஏசி பங்களா அவன் கேட்கல தம்பி. உழைச்ச உழைப்புக்கு விளைச்ச பயிருக்கு நியாய விலை தான் தம்பி. பசியைப் போக்கும் விவசாயத் தொழிலே பாரில் சிறந்தது தம்பி, பயிர் இல்லாமல் உன் உயிர் இல்லை தம்பி. பயிரிட விவசாயில்லாமல் உன் பசியைப் போக்குவது யார் தம்பி ஏர்த்தொழலே புவியில் உயிர் முடிச்சி தம்பி., படைப்பாளி விவசாயி தம்பி பயனாளி நீதான் தம்பி, விவசாயிடம் பனிவாய் நடக்கக் கற்றுக்கொள் தம்பி.

Comments:

No comments added yet.

Shape Shape Shape Shape Shape

Shape Shape

Email Address

mvezhappan@gmail.com

Home Location

Chennai, Tamil Nadu, India.

Phone Number

94449 27111

Social Media